ஓம் தத்ஸத் இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரும்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜூன ஸம்வாதே புருஷோத்தமயோகா நாம பஞ்சதசோத்யாய:
ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள, கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான, மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும், யோக விஞ்ஞானமுமாகிய 'புருஷோத்தம யோகம்' எனப்பெயர் படைத்த பதினைந்தாவது அத்தியாயம்.
ஸ்லோகங்கள்
அத பஞ்சதசோ' பதினைந்தாவது அத்தியாயம்
புருஷோத்தம யோக: புருஷோத்தம யோகம்
> ஸ்ரீபகவாந் உவாச
ஊர்த்வமூலமக: சா'கமச்'வத்தம் ப்ராஹுரவ்யயமம் / சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித் //15.1
ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; ஊர்த்வமூலம் - மேலே வேரும்; அத: சா'கம் - கீழே கிளைகளும்; அச்'வத்தம் - ஆலமரத்தை; ப்ராஹு: - கூறுகிறார்கள்; அவ்யயம் - அழியாதது; சந்தாம்ஸி -வேதங்களே; யஸ்ய - அந்த; பர்ணாநி - இலைகள்; ய: - எவர்; தம் - என்ற அந்த அரச மரத்தை; வேத - அறிவாரோ; ஸ: - அவரே; வேதவித் - வேதத்தின் உட்கருத்தை அறிந்தவர் ஆவார்
ஸ்ரீபகவான் சொன்னது
- 15.1 மேலே வேரும், கீழே கிளைகளும் பரப்பி வளரும் ஆலமரமானது அழியா வாழ்வெனும் மரத்திற்கு உருவகமாக இருக்கிறது. வேதங்களின் சொல்லப்படுகிறது. இந்த அழியா மரத்தை அறிந்துகொள்ளும் ஒருவர் வேதங்களையும் அறிந்தவராகிறார்.
அதச்'சோர்த்வம் ப்ரஸ்ரு'தாஸ்தஸ்ய சா'கா குணப்ரவ்ரு'த்தா விஷயப்ரவாலா / அதச்'ச மூலாந்யநுஸந்ததாநி கா்மாநுபந்திநி மநுஷ்யலோகே // 15.2
அத ச ஊர்த்வம் - கீழும் மேலும்; ப்ரஸ்ரு'தா: - எங்கும் பரவியுள்ள ; தஸ்ய - அந்த; சா'கா - கிளைகள்; குணப்ரவ்ரு'த்தர - முக்குணங்களால் வளர்ந்து; விஷயப்ரவாலா: - புலன்நுகர் பொருட்களின் போகங்கள் என்ற தளிர்களுடன்கூடிய; அதச் ச - கீழும் மேலுமாக; மூலாநி -வேர்களும்; அநுஸந்ததாநி - எல்லா உலகங்களிலும் பரவியுள்ளன; கர்மாநு பந்தி மநுஷ்யலோகே - மனிதப்பிறவியில்
15.2 பூமிக்குக் கீழேயும் மேலேயும் பரவியுள்ள இந்த மரத்தின் கிளைகள் மனிதனின் மூன்று குணங்களால் வலுவூட்டப்படுகின்றன. புலனின்பப் பொருட்களே அதன் மொட்டுகள். கீழே செல்லும் வேர்கள், மனித நிலையிலிருந்து செய்யும் செயல்களின் விளைவுகளால் கட்டுண்டு உள்ளன.
ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே நாந்தோ ந சாதிர் ந ச ஸ்ம்ப்ரதிஷ்டா / அச்'வத்தமேநம் ஸுவிரூடமூலமலங்கச'ஸ்த்ரேண த்ரு' டேந சித்த்வா // 15.3
ந - கிடையாது; ரூபம் - ஸ்வரூபம்; அஸ்ய - இந்த; இஹ - இங்கு; ததா- அவ்வாறு; ந உபலம்யதே - புலப்படுவதில்லை; ந அந்த: -முடிவு கிடையாது; ந ஆதி: - ஆதி கிடையாது; ந ச ஸ்ம்ப்ரதிஷ்டா - நிலையான இருப்பும் கிடையாது; அச்வத்தம் - அரச மரத்தை; ஏநம் - இந்த; ஸுவிரூடமூலம் - உறுதியான வேர்கள் கொண்ட; அஸங்கச'ஸ்த்ரேண - வைராக்கியம் என்ற கோடாரியினால்; த்ரு' டேந - உறுதியான; சித்த்வா - வெட்டி எறிந்து விட்டு
- 15.3 இந்த மரத்தின் உண்மையான உருவத்தை உணர முடியாது. அது எங்கே முடிகிறது, எங்கே தொடங்குகிறது, எங்கே இருக்கிறது என்பதையும் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது. பலமாக வேரூன்றியுள்ள இந்த மரத்தை, பற்றற்றதன்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு ஒருவர் திடமான உறுதியோடு சாய்க்க வேண்டும்.
தத: பதம் தத் பரிமார்கிதவ்யம் யஸ்மிந்ததா ந நிவர்தந்தி பூய: / தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே யத: ப்ரவ்ரு'த்தி: ப்ரஸ்ரு'தா புராணீ // 15.4
தத: - அதற்குப்பிறகு; பதம் - இலக்ஷியம்; தத் - அந்த; பரிமார்கிதவ்யம் -நன்கு தேடப்படவேண்டும்; யஸ்மிந் - எங்கு; கதா: - சென்ற மனிதர்கள்; ந நிவர்தந்தி- ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவதில்லையோ; பூய: -மீண்டும்; தம் ஏவ ஆத்யம் புருஷம் ச - அந்த ஆதிபுருஷனையே; ப்ரபத்யே - சரணடைகின்றேன்; யத: - எந்த; ப்ரவ்ரு'த்தி: - ஸம்ஸார மரத்தின் தொடர்ச்சி; ப்ரஸ்ரு'தா - விரிவு அடைந்துள்ளதோ; புராண -பழமையான
15.4 ஆதியில் யாரிடம் இருந்து எல்லாச் செயல்களும் தொடங்கியதோ, ஒருமுறை சென்ற ஒருவர், பிறகு அங்கிருந்து திரும்பிவர (மடியாத இடம் எதுவோ, அந்த இடத்தைத் தேடிச் சென்று, அந்த மகோன்னத இருப்புநிலையிடம் சரணயடைய வேண்டும்.
நிர்மாநமோஹா ஜிதஸங்கதேஷா அத்யாத்மநித்யா விநிவ்ரு'த்தகாமா: / த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:க ஸ்ம்ஜ்னைர் கச்சந்த்யமூடா: பதமவ்யயயம் தத் // 15.5
நிர்மாநமோஹா: - தற்பெருமையும், மோஹமும் அகன்றவர்கள்; ஜிதஸங்கதேரஷா: - - பற்று என்ற குறைபாட்டை வென்றவர்கள்; அத்யாத்மநித்யா: - பரமாத்ம ஸ்வரூபத்தில் என்றும் நிலைபெற்றவர்கள் ; விநிவ்ரு'த்தகாமா: கொண்டவர்கள்; த்வந்த்வை: - இரட்டைகளிலிருந்து; விமுக்தா: -விடுபட்டவர்கள்; ஸுகது:க ஸம்ஜ்னை: - இன்பம், துன்பம் என்ற பெயர் கொண்ட; கச்சந்தி - அடைகிறார்கள்; அமூடா; - ஞானிகள்; பதம் - இலக்ஷியத்தை; அவ்யயம் - அழிவற்ற ; தத் - அந்த
15.5 அஹங்காரத்திலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுபட்டவர்கள், தனக்குள் வசிப்பவர்கள், காமத்தைக் கடந்தவர்கள், சுகதுக்கம் என்ற இருமையிலிருந்து விடுபட்டவர்கள், குழப்பம் இல்லாதவர்கள் மற்றும் அந்த மேலான புருஷரிடம் எவ்வாறு சரணடைய வேண்டும் என்று அறிந்தவர்கள் - இவர்கள் அழியா ஞானத்தை அடைகின்றனர்.
ந தத்பாஸயதே ஸூர்யோ ந ச'சா'ங்கோ ந பாவக: /
யத்தத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம // 15.6
ந - இல்லை; தத் - அந்த; பாஸயதே - ஒளி; ஸூர்ய: -குரியன்; ந -இல்லை; ச'சா'ங்க: - சந்திரன்; ந - இல்லை; பாவக: - அக்னிதேவனும் ; யத் - எதை; கத்வா - அடைந்த பிறகு; ந நிவர்தந்தே - ஸம்ஸாரத்திற்குத் திரும்புவதில்லையோ; தத் - அது; தாம - ஸ்தானம்; பரமம் - மேலான; மம - என்னுடைய
- 15.6 என்னுடைய அந்த நித்யமான விழிப்புணர்வு நிலை சூரியனாலும் சந்திரனாலும் அல்லது அக்னியாலும் பிரகாசிப்பதல்ல. யார் அந்த வெளியை அடைகிறார்களோ, அவர்கள் இந்தப் பொருள்சார்ந்த உலகிற்குத் திரும்புவதில்லை.
மமைவாம்சோ' ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந: / மந: ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ரு'திஸ்தாநி கா்ஷதி // 15.7
மம ஏவ - என்னுடைய; அம்ச': - அம்ஸமே; ஜீவலோகே - இவ்வுடலில் ; ஜீவ இந்த்ரியாணி - மனம் மற்றும் ஐந்து புலன்களையும்; ப்ரக்ரு'திஸ்தாநி-ப்ரகிருதியில் உள்ள; கா்ஷதி - ஈர்க்கின்றது
- 15.7 கட்டுறு மனப்பாங்குடைய இந்த லெளகீக உலகில் வாழும் உயிரினங்கள், நித்தியமான என் இருப்பின் ஒரு பகுதியே. ப்ரக்ருதியில் (செயல்பாட்டுச் சக்தியில்) வசிக்கும் மனம் உட்பட ஆறு புலன்களாலும் அவை ஈர்க்கப்படுகின்றன.
ச'ரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீச்'வர: / க்ரு'ஹீத்வைதாநி ஸம்யாதி வாயுர்கந்தனநிவாச'யாத் // 15.8
ச'ரீரம் - உடலை; யத் - எந்த; அவாப்நோதி - அடைகிறானோ; யத் -எந்த உடலை; ச அபி - மேலும்; உத்க்ராமதி - விட்டுக்கிளம்புகிறானோ; ஈச்'வர: - உடலை ஆள்பவனான ஜீவாத்மாவும்; க்ரு'ஹீத்வா - எடுத்துக் கொண்டு; ஏதாநி - மனதோடுகூடிய புலன்களை; ஸம்யாதி - வந்து சேர்கிறான்; வாயு: - காற்று; கந்தாந் இவ - பலவித மணங்களை போல ; ஆச'யாத் - மணமுள்ள இடத்திலிருந்து
15.8 மலரிலுள்ள நறுமணத்தைக் காற்று எடுத்துச்செல்வதுபோல், இந்த உடல்-மன அமைப்புக்குள் குடிகொண்டிருக்கும் ஜீவாத்மா, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் செல்லும்போது, இவற்றை (அறு புலன்களை) எடுத்துச்செல்கிறது.
ச்'ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ச'நம் ச ரஸநம் க்ராணமேவ ச / அதிஷ்டாய மநச்'சாயம் விஷயாநுபலேவதே // 15.9
ச்'ரோத்ரம் - காதையும்: சக்ஷு: ச - கண்ணையும்; ஸ்பர்ச் நம் ச -சருமத்தையும்; ரஸ்நம் - நாக்கையும்; க்ராணம் ஏவ ச - மூக்கையும்; அதிஷ்டாய - சார்ந்துகொண்டுதான்; மந: ச - மனத்தையும்; அயம் -இந்த ஜீவாத்மா; விஷயாந் - புலன் நுகர் பொருட்களை; உபளேவதே - அனுபவிக்கிறான்
- 15.9 ஜீவாத்மாவானது, ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்குச் சென்று, காரண சரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களின் அடிப்படையில் புதிய கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுவுணர்வுடன்கூடிய புதிய உடலை எடுத்து, தன் புது மன அமைப்பை அனுபவிக்கிறது.
உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி புஞ்ஜாநம் வா குணாந்விதம் / விமூடா நாநுபச்'யந்தி பச்'யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ்: // 15.10
உத்க்ராமந்தம் வா - உடலைவிட்டுக் கிளம்பும்பொழுதும்; ஸ்திதம் வா அபி - உடலில் இருக்கும்பொழுதும்; அனுபவிக்கும்பொழுது; கூடியிருக்கும்பொழுதும்; விமூடா; - அறிவிலிகள்; ந அநுபச் யந்தி - அறிகிறதில்லை; பச்'யந்தி - அறிகிறார்கள்; ஜ்ஞாநசக்ஷுஷ: -ஞானக்கண் பெற்றவர்கள்தான்
- 15.10 குணங்களுடன்கூடிய ஜீவாத்மாவானது எப்படி ஒரு உடலில் நுழைகிறது, அனுபவிக்கிறது, அவ்வுடலைத் துறந்து செல்கிறது என்பதை அறியாமையில் முழ்கியிருக்கும் முடர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஞானக் கண் பெற்றிருப்பவரே இதை அணைத்தையும் காண்கிறார்.
யதந்தோ யோகிநச்'சைநம் பச்'யந்த்யாத்மந்யவஸ்திதம் / யதந்தோட்ப்யக்ரு'தாத்மாநோ நைநம் பச்'யந்த்யசேதஸை: // 15.11
யதந்த: - முயற்சிசெய்கிற; யோகிந: - யோகிகளும்; ச - மேலும்; ஏநம் - இந்த ஆத்மாவை; பச்'யந்தி - காண்கிறார்கள்; ஆத்மநி- தம் இதயத்தில்; அவஸ்திதம் - உறைகின்ற; யதந்த: அபி - முயன்றாலும்கூட ; அக்ரு'தாத்மாந: - ஆத்மாவைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள்; ந -இல்லை; அசேதஸ: - அந்த அஞ்ஞானிகள்; ஏநம் - இந்த ஆத்மாவை; பச்'யந்தி - காண்கிறார்கள்
- 15.11 ஆத்மாவைப் பற்றிய புரிதலுடைய யோகிகளால் மட்டுமே இவற்றையெல்லாம் தெளிவாகப் பார்க்க முடியும். ஆத்மாவைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இவற்றைப் புரிந்துகொள்ள இயலாது.
யதாதித்யகதம் தேஜோ ஜகத்பாஸயதேடகிலம் / யச்சந்த்ரமஸி யச்சாக்றெள் தத்தேஜோ வித்தி மாமகம் //15.12
யத் - எந்த; ஆதித்யகதம் -குரியனில் உள்ள; தேஜ: - ஒளி; ஜகத் -உலகையும்; பாஸயதே - பிரகாசிக்கச்செய்கின்றதோ; அகிலம் -அனைத்து; யத் - எந்த ஒளி; சந்தர்மஸி - சந்திரனிடத்திலும்; யத் -எது; ச - மேலும்; அக்நௌ - நெருப்பினிடத்திலும்; தத் - அது; தேஜ: - ஒளியே என்று; வித்தி - தெரிந்து கொள்; மாமகம் - என்னுடைய
15.12 சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளியும், சந்திரனிலிருந்து மற்றும் தீயிலிருந்து வெளிப்படும் பிரகாசமும் என்னிடமிருந்து பெறப்பட்டவையே.
காமாவிச்'ய ச பூதாநி தராயம்யஹமோஜஸா / புஷ்ணாமி சௌஷதீ: ஸர்வா: ஸோமோ பூத்வா ரஸாத்மக: // 15.13
காம் - பூமியிலும்; ஆவிச்'ய - உட்புகுந்து; ச - மேலும்; பூதாநி -உயிரினங்கள் அனைத்தையும்; தாரயாமி - தாங்குகின்றேன்; அஹம் - நான்; ஒஜஸா - என் சக்தியினால்; புஷ்ணாமி - போஷிக்கின்றேன்; ச - மேலும்; ஓஷ்தீ: - பயிர்பச்சைகளையும், மரங்களையும்; ஸோம: - நிலவும்; ஸர்வா: - அனைத்து; பூத்வா - ஆகி; ரஸாத்மக: - நீர் நிறைந்த
15.13 பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் என் சக்தியால் தாங்குகிறேன். குளிர்ச்சியான நிலவாக ஆகி எல்லா செடிகொடிகளையும் நானே பேணிவளர்க்கிறேன்.
அஹம் வைச் 'வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேஹமாச் 'ரித: / ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்விதம் // 15.14
அஹம் - நானே; வைச் 'வாநர: - வைச்வாநரன் என்ற அக்னியாக; பூத்வா - ஆகி; ப்ராணிநாம் - எல்லா உயிரினங்களுடைய; தேஹம் - உடலில்; ஆச்'ரித: - உறைபவனாகி; ப்ராண அபாநஸமாயுக்த: - உள்செல்லும் மூச்சாகவும், வெளிவரும் மூச்சாகவும்; பசாமி - ஜீரணிக்கின்றேன்; அந்நம் - உணவை; சதுர்விதம் - நான்கு வகையான
15.14 ஒவ்வொரு உயிருக்குள்ளும் செரிமானத் தீயாகவும், உள்செல்லும் மூச்சாகவும், வெளிவரும் மூச்சாகவும் இருந்து நான்கு வகை உணவுகளையும் செரிமானிக்கிறேன்.
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ரு'தி ஸர்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ரு'திர்ஜ்ஞாநமபோஹநம் ச / வேதைச்'ச ஸர்வைரஹமேவ வேத்யோ வேதாந்தக்ரு'த்வேதவிதேவ சாஹம் // 15.15
ஸர்வஸ்ய - எல்லாப் பிராணிகளுடைய; ச - மேலும்; அஹம் -நான்; ஹரு'தி - இதயத்திலும்; ஸந்நிவிஷ்ட: - அந்தாயாமியாக இருந்து கொண்டிருக்கின்றேன்; மத்த: - என்னிடமிருந்துதான்; ஸ்ம்ரு'தி : - நினைவும்; ஜ்ஞாநம் ச - அறிவும்; அபோஹநம் ச -ஐயம் திரிபுகளிலிருந்து தெளிவும்; வேதை: ச- வேதங்களாலும்; ஸாவை: - எல்லா; அஹம் ஏவ - நானே; வேத்ய: - அறியத்தக்கவன்; வேதரந்தக்ரு'த் - வேதாந்தத்தைச் செய்தவனும்; வேதவித் ச -வேதங்களின் உட்பொருளை அறிந்தவனும்; அஹம் ஏவ - நானே
15.15 நான் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கிறேன். நினைவும் அறிவும் அவற்றின் இழப்பும் என்னிலிருந்துதான் வெளிப்படுகின்றன. வேதங்களினால் அறியப்படும்பொருள் நானே. உண்மையில் வேதாந்தத்தை உருவாக்கியவனும் நானே, வேதங்களை அறிந்தவனும் நானே.
த்வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரச்'சாஷர ஏவ ச / க்ஷர: ஸர்வாணி பூதாநிகூடஸ்தோக்கூர உச்யதே // 15.16
த்வெள - இரண்டு வகையான; இமெள - இந்த; புருஷெள - புருஷர்கள்; லோகே - இவ்வுலகில்; க்ஷர: ச - அழிப்பவன் என்றும்: அஷர: ஏவ ச - அழியாதவன் என்றும்; க்ஷர: - அழியக்கூடியது; ஸர்வாணி - எல்லா; பூதாநி - உயிரினங்களின் உடலனைத்தும்; ச - மேலும்; கூடஸ்த: -இவ்வுடலில் இருக்கும் ஜீவாத்மா; அக்ஷர: - அழியாதவன்; உச்யதே -கூறப்படுகின்றது
15.16 இந்த உலகில் அழியக்கூடியவை, அழியாதவை என்று இரண்டு வகையான விஷயங்கள் இருக்கின்றன. வாழும் உயிர் அனைத்தும் அழியக்கூடியவை. கூடஸ்தன் (ஆத்மா) அழியாதவன்.
உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதர்ற்கு / யோ லோகத்ரயமாவிச்'ய பிபர்த்யவ்யய ஈச்'வர: // 15.17
உத்தம: புருஷ்: து - புருஷோத்தமன்; அந்ய: - வேறுபட்டவர்; பரமாத்மா இதி - பரமாத்மா என்றும்; உதரஹ்ரு'த - அழைக்கப்படுகிறாரோ; ய: -எவர்; லோகத்ரயம் - உலகம் மூன்றிலும்; ஆவிச்'ய - உட்புகுந்து; பிபர்தி - எல்லோரையும் தாங்கி போஷிக்கிறாரோ; அவ்யய: - அழிவற்றவர்; ஈச்'வர: - பரமேசுவரன்
15.17 இந்த இரண்டைத் தவிர, பரமாத்மா என்றழைக்கப்படும் புருஷோத்தமர் இருக்கிறார். மூன்று உலகங்களிலும் ஊடுருவி, அவற்றைத் தாங்கிக்கொண்டிருப்பவர் அவரே!
யஸ்மாத்க்ஷரமதீதோSஹமக்ஷராதபி சோத்தம: / அதோடல்மி லோகே வேதே ச ப்ரதித: புருஷோத்தம:// 15.18
யஸ்மாத் - எக்காரணத்தினால்; க்ஷரம் - அழியக்கூடிய ஜடவர்க்கத்திற்கு ; அதீத: - அப்பாற்பட்டவனாக; அஹம் - நான்; அக்ஷராத் அபி - அழியாத ஜீவாத்மாவைக் காட்டிலும்; ச - மேலும்; உத்தம: -சிறந்தவனாக உள்ளேனோ; அத: - அக்காரணத்தினால்; அஸ்மி -இருக்கிறேன்; லோகே - உலகிலும்; வேதே ச - வேதத்திலும்; ப்ரதித: -புகழ்; புருஷோத்தமன் என
15.18 அழியக்கூடியவை அப்பாற்பட்டவனாகவும் மேலானவனாகவும் நான் இருப்பதால், இந்த உலகத்திலும் வேதங்களிலும் புருஷோத்தமன் என்று புகழ்பெற்றிருக்கிறேன்.
யோ மாமேவமஸ்ம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம் / ஸ் ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபரவேந பாரத // 15.19
ய: - எந்த; மாம் - என்னையே; ஏவம் - இவ்விதம்; அஸம்மூட; -ஞானி; ஜாநாதி - அறிகிறானோ; புருஷோத்தமம் - புருஷோத்தமன்; ஸ: - அவன்; ஸர்வவித் - எல்லாமறிந்த; பஜதி - வழிபடுகிறான்; மாம் - என்னை; ஸர்வபரவேந - எல்லாவிதமாகவும்; பாரத - பரதக் குலத்தோன்றலே
15.19 ஓ, பரதவம்சத்தில் உதித்தவனே, எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் என்னை மேலானவனாக உணர்ந்த ஒருவன், எல்லாமறிந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் தன்னுடைய அத்துணை உணர்வையும் கொண்டு என்னை வழிபடுகிறான்.
இதி குஹ்யதமம் சா'ஸ்த்ரமிதமுக்தம் மயாநக / ஏதக்புத்தவா புத்திமாந் ஸ்யாத் க்ரு'தக்ரு'த்யச்'ச பாரத // 15.20
இதி - இவ்வாறு; குஹ்யதமம் - ஆழ்ந்த; சா'ஸ்த்ரம்- சாஸ்திரம்; இதம் - இந்த; உக்தம் - சொல்லப்பட்டது; மயா - என்னால்; அநக -பாவமற்றவனே; ஏதத் - இதை; புத்த்வா - அறிந்து கொண்ட; புத்திமாந் - ஞானியாகவும்; ஸ்யாத் - ஆகிறான்; க்ரு'தக்ரு'த்ய: ச - செய்ய வேண்டியதை செய்தவனாகவும்; பாரத - அர்ஜுனா
- 20 என்னால் உபதேஸிக்கப்பட்ட மேலான போதனை இதுவே. ஒ! பாவங்களற்றவனே! இதை யாரெல்லாம் உணர்கிறார்களோ அவர்கள் அறிஞர்களாகிறார்கள். அவர்களின் செயல்கள் சிறந்த பலன்களைக் கொடுக்கும்.
ஒம் தத்ஸதிதி பூரீமத்பகவத்திதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே புரீக்குஷ்ணார்ஜுநஸம்வாதே புருஷோத்தமயோகோ நாம பஞ்சதசோ' ் த்யாய: //
ஒம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்தீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'புருஷோத்தம யோகம்' எனப்பெயர் படைத்த பதினைந்தாவது அத்தியாயம்.
பகவத்தீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்
கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் – வேறு சில பெயர்கள்
பாண்டவர் சேனை: -
| க்ரு'ஷ்ணர் | கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
| த்ருபதன் | திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர் |
| த்ரு'ஷ்டத்யும்னன் : அரசா் துருபதனின் மகன் | |
| சி' கண்டி | சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர். |
| விராடன் | அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர் |
| யுயுதானன் | கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர் |
| காசி'ராஜன் | அண்டை நாடான காசியின் அரசர் |
| சேகிதானன் | சிறந்த போர்வீரர் |
| குந்தி பேஜன் | முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை |
| புருஜித் | குந்தி போஜனின் சகோதரர் |
| சை' ப்யா | சிபி பழங்குடியினரின் தலைவர் |
| த்ரு'ஷ்டகேது | சேதி நாட்டின் அரசா் |
| உத்தமௌஜன் | சிறந்த போர்வீரர் |
| பஞ்ச பாண்டவர் | யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், லஹதேவன் - மாத்ரியின் மகன்கள் |
| யுதிஷ்டிரா் | தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர் |
| பிமன் | கதாயுத சண்டையில் வல்லவர் |
| அர்ஜுனன் | வில் வித்தையில் ஒப்பற்றவர் |
| நகுலன் | குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர் |
| ஸஹதேவன் |
கௌரவர் சேனை: -
| ஸஞ்ஜயன் | அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருகேஷத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர் |
| பிஷ்மர் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர் |
| த்ரோணர் | கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன். |
| விகா்ணன் | கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர் |
| கர்ணன் | பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல் |
| அச்'வத்தாமன் | துரோணரின் மகன், வலுக்குறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர் |
| க் 'ருபா் | கௌரவர், பாண்டவர்களுக்குப் போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆச்சாரியார் |
| ச'ல்லியன் | அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர். ) |
| ஸௌமாதத்தி | பகிகர்களின் அரசா் |
| துச்'சா'தனன் | கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர் |
| துரியோதனன் | கௌரவ சகோதரா்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர். |
கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:
| அச்யுதன் | தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர் |
| அரிஸூதனன் | பகைவர்களை அழிப்பவர் |
| க்ரு'ஷ்ணன் | கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர் |
| கேச'வன் | அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும் தம் வசத்தில் வைத்திருப்பவர் |
| கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர் | |
| கோவிந்தன் | எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர் |
| பகவான் | ஆறுவித குணங்களை உடையவர். அவை 1. பரிபூரண ஞானம். 2. பரிபூரண வைராக்கியம். 3. பரிபூரண பலம் 4. பரிபூரண கீர்த்தி 5. பரிபூரண தேஜஸ் 6. பரிபூரண ஐஸ்வாயம் (ஸ்ரீ) |
| புருஷோத்தமன் | மேலான புருஷன் |
| மதுஸூதனன் | மது என்ற அரக்கனை அழித்தவர் |
| மாதவன் | லக்ஷ்மிக்குத் தலைவர் |
| யாதவன் | 'யது' குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர் |
| யோகேச்'வரன் | யோகத்திற்குத் தலைவர் |
| வாஸு தேவன் | வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர் |
| வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் | |
| விஷ்ணு | |
| ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர் | |
| ஜநார்தன் | ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர் |
| ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர் | |
| அனகன் | பாபம் அற்றவர் |