ஜென்ம ஜென்மமாக நம்முள் இருக்கும் பொக்கீஷம்
'நான்', 'எனது' என்ற இவை இரண்டும் சேர்ந்த கலவையைத்தான் குரு குறிப்பிடுகிறார். அஹங்காரத்திற்கு உள்முகம் மற்றும் வெளிமுகம், அதாவது அஹங்காரம், மமகாரம் என்ற இரண்டு முகங்கள் உண்டு.
நீங்கள், உங்களை மற்றவர்களிடம் என்னவாகக் காட்டுகிறீர்களோ, அதுவே வெளியில் நீங்கள் இருக்க விரும்பும் நிலை. இதுவே அணங்காரம் எனப்படுகிறது. இது பெரும்பாலும், நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதைவிட மிகைப்படுத்தியே, உங்களை வெளியே காட்டுவதாகவே இருக்கும். இங்கு உங்களுக்கு நீங்களே மாயையாக இருக்கிறீர்கள். அஹங்காரம், ஒரு மிகப் பெரிய மாயையாக இருக்கிறது.
நீங்கள், உள்ளுக்குள் உங்களைப் பற்றி என்னவாக நினைக்கிறீர்களோ, அதுவே மமகாரம் எனப்படுகிறது. அது எப்போதும் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதைவிட குறைந்ததாகவே இருக்கும்.
''இல்லை, இல்லை, என்னைப் பற்றி நான் உயர்ந்த மதிப்பீடுகான் வைக்கிருக்கிரேன், ' என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பல நேரங்களில் இந்த உயர் சுயமதிப்பீடு, உங்கள் பாதுகாப்பின்மை உணர்விலிருந்து பிறக்கிறது. அது, சமுதாயத்திடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, நீங்கள் எழுப்பிக்கொள்ளும் ஒரு சுவர். நீங்கள் அந்தச் சுவரின் பின்னால் ஒரு கைதியாகவே இருக்கிறீர்கள். இது, உங்களுக்குள் ஒரு குட்சுமமான வன்முறையை வை வளர்க்க ஆரம்பிக்கிறது.
உண்மையாகவே, உங்களைப் பற்றிய உயர் சுயமதிப்பீடு இருக்குமானால், 'நீங்கள்
கடவுள்' என்பதை ஏன் நீங்கள் ஒப்புக்கொள்வதில்லை ? ஏன் முடியாது.
நான், 'நீங்கள் கடவுள்' என்று உங்களுக்குச் சொல்கிறேன். என்னுடைய சங்கம் தொடங்கப்பட்டதே, 'நீங்கள் கடவுள்' என்பதை உங்களுக்குநிரூபிப்பதற்காகவே தவிர, நான் கடவுள் என்பதை நிலைநாட்டுவதற்காக அல்ல !
'நீங்கள் கடவுள்' என்பதற்குப் பதிலாக, 'நீங்கள் பாவிகள்' என்று உங்களை அழைக்கும் உங்கள் மதத்தை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். பாவம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ? அறியாமையே பாவம் !
'நீங்கள் தெய்வம்', 'நீங்கள் கடவுள்' என்ற வகுமத்தை உணராமல்
இருப்பதே அறியாமை; இந்த ஸ்தீயத்தை சமுதாயமும் மதமும் உங்களை உணர்ந்துகொள்ள விடாது. ஏனென்றால், அதை நீங்கள் உணர்ந்துகொண்டால், அவர்களால் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது.
மதங்கள், உங்களை அச்சுறுத்துவதின் மூலமும், ஆசைக்குட்படுத்துவதன் மூலமும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உங்களைக் கொண்டுவர ஆசைப்படுகின்றன. நரகத்தைப் பற்றிய பயம் மற்றும் சொர்க்கத்தைப் பற்றிய பேராசை என்பது, ஒரு கையில் சாட்டையையும் மற்றொரு கையில் காரட்டையும் வைத்துக்கொண்டு, உங்களை ஏமாற்றுவதற்கு பயன்படுக்காம் கருவிகளே!
சமுதாயமும் தன் பங்கிற்கு, பெற்றோர் மூலமாகவும் பெரியவர்கள் மூலமாகவும் ஏனென்றால் இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால், நீங்கள் கட்டுப்படுத்த முடியாதவர்களாவீர்கள். நீங்கள் மிகவும் சுதந்திரமாக இருப்பீர்கள்.
உங்கள்மீது இவர்களால் சுமத்தப்படும் கட்டுறு மனப்பாங்குகள்தான், உங்களுக்குள் ஸம்ஸ்காரங்களை உருவாக்குகின்றன. இந்த ஸம்ஸ்காரங்களினால் நீங்கள் பந்தத்திற்குள் சிக்கிக்கொள்கிறீர்கள். அதனால் அவர்கள், உங்களைப் பிறப்பிலிருந்தே கட்டுப்படுத்துகிறார்கள்.
அவர்கள் என்பது உயர் அஹங்காரம் - உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் மூத்த சகோதரர்.
இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர், பந்தத்தின் தன்மையைப் பற்றியும், நீங்கள் அதை உடைத்தெறிந்து, அதிலிருந்து விடுதலையடைவது எப்படி என்பதைப் பற்றியும் விளக்குகிறார்.