சுத்திகரிக்கும் நுட்பம்
- 15.5 அஹங்காரத்திலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுபட்டவர்கள், தனக்குள் வசிப்பவர்கள், காமத்தைக் கடந்தவர்கள், சுகதுக்கம் என்ற இருமையிலிருந்து விடுபட்டவர்கள், குழப்பம் இல்லாதவர்கள் மற்றும் அந்த மேலான புருஷரிடம் எவ்வாறு சரணடைய வேண்டும் என்று அறிந்தவர்கள்- இவர்கள் அழியா ஞானத்தை அடைகின்றனர்.
- 15.6 என்னுடைய அந்த நித்யமான விழிப்புணர்வு நிலை சூரியனாலும் சந்திரனாலும் அல்லது அக்னியாலும் பிரகாசிப்பதல்ல. யார் அந்த வெளியை அடைகிறார்களோ, அவர்கள் இந்தப் பொருள்சார்ந்த உலகிற்குத் திரும்புவதில்லை.
காமத்தைக் கடக்கும் நட்பம்
கிருஷ்ணர், முந்தைய அத்தியாயங்களிலும், இந்தக் கருத்தையே வெளிப்படுத்தினார். ஆனால் அப்போது அர்ஜுனனால் அதைப் புரிந்துகொள்ள கேள்விகேட்கும் மனநிலையில் இருந்தார்.
கேள்விகேட்கும் மனநிலையில் இருக்கும்பொழுது, நாம் முழு பாடத்தையும் தவறவிட்டுவிட்டு, மும்முரமாகக் குகள்விகளைத் தயாரித்துக் கொண்டிருப்போம். ஆனால் இப்பொழுது அர்ஜுனனுக்கு, கேள்விகேட்கும் மனநிலை போய்விட்டது. இப்போது அங்கே சந்தேகங்கள் மட்டுமே இருக்கின்றன, கேள்விகள் இல்லை. கிருஷ்ணர், அதே ஸ்த்யத்தை இப்போது மீண்டும் ஆழமாக விளக்குகிறார்.
சீடர், சந்தேகங்களோடு அமர்ந்திருக்கிறார், ஆனால் உள்வாங்கும் திறந்த மனத்துடன்! அவர் தம்முடைய இருப்புத்தன்மையைத் திறந்துவைத்து, குரு தமக்குள் ஊடுருவக் காத்துக்கொண்டிருக்கிறார்.
அர்ஜுனன், கிருஷ்ணரை உள்வாங்கத் தயாராக இருந்தார். அவர் குருவின் வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய உள்பேச்சு நின்றுவிட்டதால், அங்கே எந்தக் கேள்விகளும் எழுவில்லை. இப்போது அவர், கிருஷ்ணரை உள்வாங்குவதற்குரிய உள்தளத்தையும் விழிப்புணர்வையும் பெற்றிருக்கிறார். அதனால்தான் இப்போது அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஜென் புத்த மதத்தில், விடுகதை போன்ற அல்லது புதிர் போன்ற
வாக்கியங்களை 'கோன்' (Koan) என்று அழைக்கிறார்கள். ஒரே ஒரு வாக்கியம் மட்டும் கொடுக்கப்படும். உதாரணத்திற்கு, 'ஒரு கை இசை ஓசை எப்படி இருக்கும் ?' உன்னுடைய தாயும் தந்தையும் பிறக்கும் முன் உன்னுடைய முகம் எப்படி இருந்தது ? - என்பது போன்ற ஜென் கோன்கள் பல இருக்கின்றன.
அந்தச் சீடர்கள், இந்தக் கோனைப் பற்றி தீயானம் செய்துவிட்டு, அதற்கான பதிலுடன் தங்கள் குருவிடம் திரும்புவார்கள். அந்த குரு, அவர்கள் முதுகில் பலமாக ஓசைவருமாறு ஒரு தட்டுதட்டி, அவர்களை அவர்களுளைய சொந்த வழியில் செல்லுமாறு அனுப்புவார். இறுதியில், அவர்கள் 'ஒரு கை ஓசையை' அனுபவமாகப் பெறுவர்.
'கோன்' என்பது விவரிக்கக்கூடிய பதில் இல்லை. அது ஒரு அனுபவம் மட்டுமே!
இங்கே அஹங்காரத்திலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்களோ, யாரெல்லாம் தமக்குள் வசிக்கிறார்களோ, யாரெல்லாம் வைராக்யும் என்றால் பந்தத்தையும் பந்தமில்லாக் கன்மையையும் கடந்தநிலை.
காமத்தைக் கடந்தவர்களோ, சுகம் துக்கம் என்ற இருமையிலிருந்து சுதந்திரம் பெற்றவர்களோ, யாரெல்லாம் குழப்பமடையாதவர்களோ, பரமாத்மாவிடம் சரணாகதியடைவது பற்றி அறிந்தவர்களோ, அவர்கள் எல்லோருமே அழிவில்லாத நித்ய விழிப்பு நிலையை அடைகிறார்கள், '' என்று சொல்கிறார்.
வார்த்தைகள் என்ன அழகாக உபயோகிக்கப்பட்டுள்ளன. அவர் காமத்தைத் துறந்தவர்கள் என்று சொல்லவில்லை. ஏனென்றால் துறத்தலால் மட்டுமே காமத்தைக் கடந்துவிட முடியாது!
வைராக்யம் என்றால் பந்தத்தையும் பந்தமில்லாத் தன்மையையும் தாண்டியது. ராக என்றால் பற்று என்று அர்த்தம். ஆராக என்றால் பற்றற்ற தன்மையையும் விராக அல்லது வைராக்ய என்றால் பற்று மற்றும் பற்றின்மை இரண்டையும் கடந்தது, எதனோடும் இணைத்துக் கொள்ளாதிருக்கலையே வைராக்ய என்கிறோம்.
ஏழு வயதுவரை நாம் பொம்மைகளின் மீது பற்றாக இருக்கிறோம். எட்டு ஒன்பது வயதில், அவற்றை அவிட்டுவிட நாம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். இருபது வயதில், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் மீது பற்று அல்லது பற்றின்மை என்பதைத் தாண்டிய நிலையில் இருப்போம். ஆனால் கட்டாயப்படுத்துதலின்பேரில் கைவிடுதலால்,
வேண்டுமானால் கைவிட்டிருக்கலாம்; அனால் அவற்றின் மீதான ஏக்கம் நம் உள் மனத்தில் இருந்துகொண்டே இருக்கும்.
அதனால்தான் உபயோகிக்கிறார். அவர், 'யாரெல்லாம் காமத்தைக் கடந்தவர்களோ' என்று சொல்கிறார்.
இந்த நிலையில், நம்மால் என்ன இயலும் என்பதும் நமக்குத் தெரியும். அது அங்கு இருப்பதும் நமக்குத் தெரியும். நம் தேவைக்கு ஏற்றவாறு அகை உபயோகிக்கலாம் அல்லது தூக்கியெறிந்து விடலாம்.
வாழ்க்கையும் ஒரு பொம்மை மாதிரி தான். இதை முழுதாகப் புரிந்துகொண்டால், நீங்கள் ராஜாவைப்போல் உலகியல்சார்ந்த ராஜாவாக அல்ல, ஞான ராஜாவாக, ராஜரிஷியாக ! வாழ்க்கையும்
ஒரு இது இது புரிந்துகொள்வதற்காக அல்ல, அல்ல, தீயானிப்ப தற்காக! இந்த நுட்பத்தை தீயாணித்தால், இந்தப் பண்புநலன்கள் உங்களுள் மலரத் துவங்கும். மேலும், காரண ச்ரீர்த்தைப் பற்றிய ஒரு தெளிவான கருத்தை உங்களுக்குத் தரும்.
முன்பு அழிப்பதற்கான வழிகளைச் சொன்னார். இப்போது, சரியான ஒரு ச் ரீர்த்தைக் கட்டமைப்பதைப் பற்றிப் பேசுகிறார். அது உங்கள் காரண ச 'ரிரத்தைப் புனரமைப்பது பற்றியது.
கிருஷ்ணர், காரண சீர்ர்த்தைப் புதுப்பிக்கும் யுக்திகளைக் கொடுக்கிறார்.
கிருஷ்ணருடைய வார்த்தைகள் ஜென் கோன்களைப் போன்றவை. உண்மையில் கிருஷ்ணர், அதே வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் உபயோகிக்கிறார். வார்த்தைகளையும் வெளிப்படுத்துதல்களையும் மட்டுமல்ல, அவர், அதே எழுத்துக்களையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். ஆரம்பத்தில் அவர், இந்த வார்த்தைகளை அறிவுரைகளாகப் பயன்படுத்தினார். இப்பொழுது அதே வார்த்தைகளை, செயல்முறை யுக்திகளாகப் பயன்படுத்துகிறார்.
இந்த அத்தியாயம், நம்முடைய காரண சூரித்தைக் கட்டமைப்பதைப் பற்றியது, ஸ்மீஸ்காரங்களைக் கட்டமைப்பதைப் பற்றியது.
இந்தச் செயல்முறை, நம்முடைய காரண சீர்ரத்தில் நேர்மறையான லம்ஸ்காரங்களை உருவாக்குகிறது. அர்ஜுனன் கேள்விகேட்கும் மன நிலையில் இருந்தவரை, அதே வார்த்தைகள் அறிவுரைகளாகச் சொல்லப்பட்டன. அவர் சந்தேக மனநிலைக்குள் நுழைந்தவுடன், அதே வார்த்தைகள் நுட்பங்களாகத் தரப்படுகின்றன.
சீடர், கேள்விகேட்கும் மன நிலையில் இருக்கும்பொழுது, குருவின் வார்த்தைகள் எப்போது சீடர், கேள்வி கேட்பதை நிறுத்தி,
கவனிக்க ஆரம்பிக்கிறாரோ, அப்போது அதே வார்த்தைகள் வார்த்தைகள் க இருக்கும்.
வார்த்தைகள், அறிவுரைகளாக மட்டுமே இருக்கும்வரை, திறக்க, உங்களுக்குச் சாவிகள் தேவைப்படுகின்றன. அனால் அவை நுட்பங்களாக அதுகும்பொழுது, அந்த நுட்பங்களே சாவிகள் ஆகின்றன. அவை கதவைத் திறக்கத் தயாராக இருக்கின்றன.
அர்ஜுனன், இந்த அத்தியாயங்களின் முந்தைய சாராம்சத்தைப் பெற்றுக்கொண்டார்.
வட இந்து மடாலயங்களில், ஒவ்வொரு முறை உணவருந்தும் முன்பும் இந்த 15வது அத்தியாயம் ஒருப்படுகிறது.
வட இந்து மடாலயங்களில், ஒவ்வொரு முறை உணவருந்தும் முன்பும், இந்த அத்தியாயம் ஓதப்படுகிறது. இந்த 15வது அத்தியாயம் உள் ஒளிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி என்பதால், ஒவ்வொரு உணவுக்கு முன்னும் உச்சாடனம் செய்யப்பட வேண்டும்.
இந்த அத்தியாயத்தின் சொற்களே, உங்கள் காரண ச்ரீர்த்தைப் புனரமைப்பதில் அதிசயங்களை நிகழ்த்தும்.
இதை உச்சாடனம் செய்வதற்கு சில நிமிடங்களே தேவைப்படும். எவராலும் இதைச் செய்ய முடியும். அதன் பொருளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குப் பொருள் விளங்கினால், மிகவும் நல்லது, உங்களுக்குப் பொருள் தெரியாவிட்டாலும், அதை உச்சாடனம் செய்வது மிகுந்த பயனை நல்கவல்லது.
இச்சொற்களை உச்சாடனம் செய்வது, கொரண சிரித்தைச் சீரமைக்கும். குறிப்பாக ச்ரணாகதி மன நிலையில், குருவின் மீதான அலாதி செய்யும்போது, இது நேரடியாகக் காரண ச 'ரீர்த்தைத் தொடுகிறது.
சீடன் குருவுடன் முழுமையாக இசைந்திருந்தால், பிர்பஞ்ச கருப்பு குருவின் மூலமாக அவருக்கு உதவுகிறது.
அர்ஜுனன், முழுமையாக ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறார். அவர் குருவாடு
முழுமையாக இணங்கியிருக்கிறார். சீடன் குருவுடன் முழுமையாக இசைந்திருந்தால், பிரபஞ்ச இருப்பு குருவின் மூலமாக அவருக்கு உதவுகிறது.
அர்ஜுனனுக்கு விளக்கங்களோ, தர்க்கமோ தேவையாக இல்லை. அவர் குருவை உள்வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறார். அதனால் கிருஷ்ணர், காரண ச்ரீர்த்தைச் சீரமைப்பதற்கான சொற்களை உச்சரிக்கிறார். அவர், நல்ல ஸம்ஸ்காரங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தருகிறார்.
புலன்கள் எனும் மாய வலை
அவர் சொல்கிறார்: கா்வம், தவறான நம்பிக்கைகள், பெந்தம் இவற்றிலிருந்து நிலைத்திருப்பவா்களும், காமத்தைக் கடந்தவர்களும், சுக துக்கம் என்ற இருநிலைகளிருந்து விடுபட்டவர்களும், குழப்பமில்லாதவர்களும், மேலான பிரபஞ்சத்திடம் ச ரணாகதி அடைய அறிந்தவர்களும், எல்லையற்ற ரீத்யமான விழிப்புணர்வை அடைகிறார்கள்.
காமத்தை விடுவது என்பது ஒரு மனிதனுக்குக் கடினமானது. மாமுனிவர்களும்கூட காமத்திற்கு அடிபணிந்திருக்கிறார்கள். காமம், உடலைப் பொறுத்தது. உடலைப் பற்றிய உணர்வு இருக்கும்வரை, காமம் இருக்கும். உடல் உணர்வுக்கு அப்பால் சென்றுவிட்ட ஒருவரே, காமத்தைத் துறக்க முடியும்.
ஒரு சிறுவன், தன் பெற்றோருடன் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படத்திற்குச் சென்றான். அது, வனவிலங்குகளைப் பற்றிய படம். சிறுவன் அத்திரைப்படத்தை முழுமையாக ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென ஒரு காட்சி, அந்த சிங்கக் குட்டி வேடனின் பொறியில் சிக்கிகொண்டு, பயத்தால் திகிலடைந்துபோயிருக்கும் நிலையைக் காட்டுவதாக இருந்தது.
இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அவனால் பொறுக்க முடியவில்லை. அவன், தன் இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்திறங்கி, திரையின் பக்கம் ஒடினான். சிங்க குட்டியைக் கூண்டில் அடைக்க இருந்த வேடனுடன் சண்டையிடுவதுபோல், தன் கை, கால்களை வேகமாக ஒங்கி வீசினான்.
அப்போது திரையில், மற்ற வன விலங்குகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து வேடனை விரட்டி, சிங்கக் குட்டியைக் காப்பாற்றுவதுபோன்ற காட்சி வந்தது.
சிறுவன், தன் இருக்கைக்குத் திரும்பி, தன் சொன்னான்: ''பாருங்கள், நான் முதலில் சென்றதால்கான், எல்லா விலங்குகளும் என்னைப் பின்தொடர்ந்து வந்தன. நாங்கள் எல்லோருமாக அந்த சிங்கக் குட்டியைக் காப்பாற்றினோம். ' '
காமத்தை விடுவது என்பது ஒரு மனிதனுக்குக் கடினமானது. உடல் உணர்வுக்கப்பால் சென்றுவிட்ட ஒருவரே காமத்தைத் துறக்க முடியும்.
சிறுவன், சினிமாவை உண்மையென்று நினைத்ததுபோல், நாம், நம் புலன்கள் மூலம் கிரகிக்கப்பட்ட விஷயங்களை உண்மையென்று நம்புகிறோம். நாம், நம் புலன்கள் உருவாக்கிய மாயையில் சிக்கிக்கொள்கிறோம். நமக்குள் இருக்கும் காமம்தான் மிகவும் சக்தி வாய்ந்த மாயை.
ஆதி சங்காராச்சாரியார் பஜகோவிர்தத்தின் ஸ்லோகங்களில் சொல்கிறார்: நாரி ஸ்தன பர நாபி தேசம் த்ரு 'ஷ்ட்வ மா கா மோறைடவேசம் ஏதரு மாம்ஸ வசா ²தி விகாரம் மனஸி விசிந்தய வாரம் வாரம்
பஜகோவிடுத்தம் கருதப்படுகிறது.
இங்கு சங்கரர், 'பெண்களின் மார்பையும் நாபியையும் பார்ப்பதனால் மாயையின் தீவிரமான ஆசைகளைக் கடந்துவிட முடியாது; இவை வெறும் சதைப் பிண்டங்களே, விரைவில் அழுகக்கூடியதே என்று மீண்டும் மீண்டும் உணருங்கள்' என்கிறார்.
காமத்தை அடக்குவதும், தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பதும் ஒருவரை ஒருபோதும் ஜீவன்முக்தராக ஆக்குவதில்லை. அது ஒருவரைப் பைத்தியமாகத்தான் ஆக்கும்.
மனத்தின் கற்பனைகளை நீக்காமல், உடலால் மட்டும் ப்ரூரிமசாயத்தைக் கடைபிடிப்பது, உடலுறவில் ஈடுபடுவதைவிட, அதிகமான துக்கத்தை உருவாக்கும். ஞானம், ஒருவர் தம் புலன் உணர்ச்சிகளைக் கடப்பதற்கும், மனமற்ற நிலையை அடைவதற்கும் உதவுவதன்மூலம், காமத்தையும் பாலுறவையும் கடக்க உதவுகிறது.