KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/ஆசை, அச்சம் என்ற வாசல் வழியே நுழையாதீர்கள்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

ஆசை, அச்சம் என்ற வாசல் வழியே நுழையாதீர்கள்

இந்த அத்தியாயத்தின் நடுவில் கிருஷ்ணர் நறுக்குத்தெரித்தாற்போன்ற ஒரு வாக்கியத்தைச் சொல்கிறார்: ''ஆன்மாவானது எப்படி ஒரு உடலைவிட்டு இன்னொரு உடலுக்குச் செல்கிறது என்பதையோ, குணங்களின் அடிப்படையில் அவன் எப்படிப்பட்ட உடலை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதையோ முட்டாள்களால் புரிந்துகொள்ள முடியாது. அறிவினால் பயிற்றுவிக்கப்பட்ட கண்களுக்கே, இந்த விஷயங்கள் புலப்படும் ! '

இங்கு, மூட - 'முட்டாள்' என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார், கிருஷ்ணர்.

காலையில் எழும்போது நமக்குள் தோன்றும் முதல் எண்ணத்தைப் பொறுத்தே, அந்த நாள் முழுவதற்குமான அனுபவம் அமையும்!

ஆனால் பொதுவாக நம்முடைய முதல் எண்ணம் எதுவாக இருக்கிறது? முதலில் நாம் எழுந்துவிட்டதை உணர்கிறோம், பிறகு நம் உடலை உணர்கிறோம், அடுத்து நமக்குள் எழுவது, 'நாம் ஆபீஸ் போகவேண்டுமே என்ற அச்சம் அல்லது நமக்குப் பிடித்தமான ஏதோ ஒரு வேலையை முடித்தாக வேண்டுமென்ற ஆசை'.

ஆசையாலோ அச்சத்தாலோ உந்தப்பட்டுத்தான் நாம் படுக்கையிலிருந்து துள்ளி எழுகிறோம். ஆசை அல்லது அச்சத்தின்மூலமே, நாம் நம் உடலுடன் தொடர்பை உணர்கிறோம்.

கிருஷ்ணர் சொல்கிறார், 'நம்முடைய உடலை ஆசையாலோ அச்சத்தாலோ பிடித்தோமானால், அந்த நாள் முழுவதும் ஆசை அல்லது அச்சம்சார்ந்த விஷயங்களையே ஈர்ப்போம்.

ஒவ்வொரு நாளும் நாம் தூங்கி எழுவது, இந்தப் பூமியில் நாம் இன்னொரு நாள் வாழ நமக்குக் கிடைத்த நீட்டிப்பே.

உடம்பிற்குள் வாயில்கள் இருக்கின்றன. ஆசை, அச்சம் என்ற வாசல் வழியே நுழையாதீர்கள். ஆன்மிக ஒரு படுக்கையிலிருந்து எழுங்கள். உங்கள் குருவையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ நினைத்துக்கொண்டு எழுங்கள். இதைச் சில நாட்களுக்குத் தவறாமல் விழிப்புணர்வோடு செய்யுங்கள். பின்பு, இது உங்கள் இயல்பாக மாறிவிடும். உங்கள் உடலோடு ஆசை அல்லது அச்சத்தின் மூலமாக இணைய வேண்டாம். அது மேலும் மேலும் ஆசையையும் அச்சத்தையுமே ஈர்க்கும்.

உங்களுடைய முதல் எண்ணம் ஆன்மிகம் இருக்கட்டும். சம்பந்தப்பட்ட உங்கள் குருவையோ அல்லது தெய்விகமானவர்களையோ நினைவுபடுத்தி, அவருக்கு நன்றிசொல்லுங்கள். வாழ்க்கையை மேலும் ஒருநாள் நீட்டித்ததற்காக நன்றிசொல்லுங்கள்.

ஒவ்வொரு நாளும் நாம் தூங்கி எழுவது, இந்தப் பூமியில் நாம் இன்னொரு நாள் வாழ நமக்குக் கிடைத்த நீட்டிப்பே. இந்த நீட்டிப்பை அளித்த பிரபஞ்சத்தின் கருணைக்கு நன்றிசொல்லுங்கள்.

உங்கள் குருவையோ, கடவுளையோ அல்லது தெய்விகமானவர்களையோ நினைவுபடுத்தி, வாழ்க்கையை மேலுமொருநாள் நீட்டித்ததற்காக அவருக்கு நன்றிசொல்லுங்கள்.

நீங்கள் பத்திசாலியா அல்லது முட்டாளா ?

தூக்கத்திலிருந்து எழுவது பிறப்புரிமை கிடையாது. சொல்லப்போனால், பிறப்பே நமது உரிமை கிடையாது. அது பிரபஞ்ச இருப்பு நிலையின் தூய்மையான பரிசு. நம் வாழ்க்கை, இன்னொரு நாள் நீட்டிக்கப்பட்டதற்குப் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

ஆன்மிக எண்ணத்துடன் படுக்கையிலிருந்து எழும்போது, அந்த நாள் முழுவதுமே அந்த விழிப்புணர்வு நமக்குள் நீடிக்கும். லெளகீக எண்ணத்துடன் எழும்போது, அந்த நாளை எரிச்சலுடன் தொடங்குவோம். நாள் முழுவதுமே அந்த எரிச்சல் மனநிலை தொடரும்.

ஆழ்ந்த தூக்கத்தில், நாம் காரண ச்ரீர்த்துடன் தொடர்புகொள்கிறோம். தூங்கி எழும்போது, மற்ற மூன்று சீரீரங்கள் வழியாகப் பயணம்செய்துதான், ஸ்தூல உடலைச் சேருகிறோம். இந்த மூன்று சீர்ரங்களும் பலவிதமான ஸம்ஸ்காரங்கள் இருக்கும் ஒரு பெரிய கடைவீதி. நம்முடைய காரண ச் ரீர்த்திலிருக்கும் ஸம்ஸ்காரங்களைத் தேர்ந்தெடுத்தே, நாம் அன்றைய தினத்து ஸ்தூல உடலையும் புலன்களையும் தீர்மானிக்கிறோம்.

ஒரு இருபத்தியோரு நாட்களுக்கு மட்டும் ஆன்மிக எண்ணத்துடன் எழுங்கள். அதற்குப் பிறகு உங்கள் முகத்தைப் பாருங்கள். முகம் மாறியிருப்பதைப் பார்த்து, நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் கண்களில் ஒரு புதிய பொலிவு தெரியும்.

நான் இங்கே 'கோட்பாட்டை' (Theory) வைக்கவில்லை. நான் இதை உணர்ந்திருக்கிறேன்.

உலகெங்கும் லட்சக்கணக்கானவர்கள், இந்த வார்த்தைகளைப் பயிற்சிசெய்து, வெற்றி பெற்றிருக்கிறார்கள். உரிமையில்தான் நான் இதை 'மிகவும் சக்தி வாய்ந்த, உயிர்ப்புள்ள ஒரு நுட்பம்' என்று சொல்கிறேன்.

மன அழுத்தத்துடனோ அல்லது அமைதியற்ற தன்மையுடனோ, அதாவது அதிகாலையில் சில வினாடிகளுக்காவது ஆனந்தமான மனநிலையில் இருங்கள். உங்கள் உள்வெளி புத்துணர்ச்சியுடனும் புத்தாகவும் இருக்கும்.

தமஸ் அல்லது ரஜஸ் தன்மையுடனும் உடலுக்குள் நுழையாதீர்கள். ஆசை அல்லது அச்சத்துடன் எழும்போது, ஆசை அச்சத்தை வெளிப்படுத்தும் உடலையே வடிவமைப்பீர்கள். உங்களை ஆசை அச்சத்தில் போடக்கூடிய விஷயங்களையே ஈர்ப்பீர்கள்.

காரண ச்ரீரத்திலிருந்து, ஸ்தூல் ச்ரீர்த்திற்குத் திரும்பிவரும்போது, ஆனந்தம் மற்றும் அமைதிசார்ந்த லத்வ ஸம்ஸ்காரங்களையே எடுத்து வரவேண்டும். அதனால்தான், நமது ரிஷிகளும் ஞானிகளும் நம்மை அதிகாலையில் தியானம் செய்யச் சொல்கிறார்கள்.

சில வினாடிகளுக்காவது ஆனந்தமான மன நிலையில் இருங்கள். உங்கள் உள்வெளி புத்துணர்ச்சியுடனும் புதிதாகவும் இருக்கும்.

கிருஷ்ணர் மட்டுமே, இந்த அறிவியலின் ஸ்ரீயத்தைப் புரிந்துகொள்ள முடியும்!

அனைத்துமே உங்கள்முன் இருக்கிறது, ஆனால் முட்டாள்களால் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. புத்திசாலித்தனமான கண்களை உடையவா்களால் மட்டுமே, இந்த ஸ்தீயங்களைப் பார்க்க முடியும் !

முட்டாளாக இருப்பதோ அல்லது புத்திசாலித்தனமான கண்களுடன் இருப்பதோ, நம் கையில்தான் இருக்கிறது. அது முழுக்க முழுக்க நம்முடைய விருப்பமே.