KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/ஒரே மாதிரியான சக்தி ஒன்றையொன்று ஈர்க்கும்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

ஒரே மாதிரியான சக்தி ஒன்றையொன்று ஈர்க்கும்

இங்கே கிருஷ்ணர் சொல்கிறார், நாம் நமது ஸம்ஸ்காரங்களைப் பொறுத்தே, நமது புலன்களை அமைத்துக்கொள்கிறோம். இது நாம் இறந்து மீண்டும் பிறக்கும்போது மட்டும் நிகழ்வதில்லை. ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போதும், நாம் நமது ஸம்ஸ்காரங்களுக்கேற்ப புலன்களை மறுவடிவமைக்கிறோம்.

நாம் தூக்கத்திலிருந்து விழிக்கும் அந்தச் சில வினாடிகள் மிகவும் முக்கியமானவை. நாம் அப்போது என்ன உணர்கிறோமோ, அதுவே அந்த நாள் முழுவதும் பிரதிபலிக்கும்.

நாம் சரியான மன அமைப்புடன் விழிக்கும்பொழுது, நாம் அதற்கேற்ற புலன்களையே பெறுகிறோம். அதனால் அந்த நாள் முழுவதுமே நாம் சந்தோஷமாக இருப்போம். மாறாக, எதிர்மறை மன அமைப்புடன் விழிக்கும்போது, நாம் நாள் முழுவதும் துக்கப்படுகிறோம்.

நாம் தூக்கத்திலிருந்து விழிக்கும் அந்தச் சில வினாடிகள் மிகவும் முக்கியமானவை. நாம் அப்போது என்ன உணர்கிறோமோ, அதுவே அந்த நாள் முழுவதும் பிரதிபலிக்கும். அப்போது நேர்மறையை வெளிப்படுத்தினால், நம்முடைய அந்த நாள் முழுதும் சந்தோஷமாக இருக்கும்; எரிச்சலை வெளிப்படுத்தினால், அந்த நாள் முழுதும் எரிச்சலாகவே இருக்கும்.

சூஃபி குருமார்கள், சூஷ்ம சரீரம் ஸ்தூல சரீரத்தில் நிலைகொள்ளும், கண்விழிக்கும் அந்த நேரத்தில் இந்த அருமையான தியானத்தை நாள்தோறும் பயிற்சிசெய்வார்கள்.

கண்களை மூடிக்கொண்டே, கைகளால் தலையைத் தடவியபடியே, மிகுந்த விழிப்புணர்வுடனும் அழகான உடல் - மன அமைப்பை கொடுத்ததற்காகப் பிரபஞ்சத்திற்கு நன்றியை வெளிப்படுத்துங்கள்.

நம்பிக்கையுடனும், ''என் தலையையும் தலைமுடியையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அவை மிகவும் அழகாக இருக்கின்றன. இவ்வளவு அழகான தலையையும் தலைமுடியையும் தந்ததற்காக, நான் இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்,'' என்று சொல்கிறார்கள்.

இப்படியே, உடலின் ஒவ்வொரு பகுதியையும் தொட்டு, பிரபஞ்ச சக்திக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.

நாளைமுதல் நீங்களும் இந்த தியானத்தைச் செய்யுங்கள். உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் மிகுந்த அன்புடன் தொடுங்கள். அந்த உடல் பாகத்திற்கு உங்கள் அன்பினை வெளிப்படுத்துங்கள். அந்தப் பாகத்தின் அழகுக்கும் கருணைக்கும் பாராட்டுதலைத் தெரிவியுங்கள். இவ்வளவு அழகான உடல் - மன அமைப்பை கொடுத்ததற்காகப் பிரபஞ்சத்திற்கு நன்றியை வெளிப்படுத்துங்கள்.

இதை உங்கள் உடல் முழுவதும், தலை முதல் பாதங்கள்வரை செய்யுங்கள். இறுதியாக உங்கள் பாதங்களை மிகுந்த அன்புணர்வுடன் தொட்டபடி, "'என் பாதங்களை நான் நேசிக்கிறேன். இவை மிகவும் அழகாக இருக்கின்றன. இவ்வளவு அழகான பாதங்களைக் கொடுத்ததற்கு, பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்கிறேன்,'' என்று உணர்வுபூர்வமாகச் சொல்லுங்கள்.

இதை விழிப்புணர்வுடன், குறைந்தபட்சம் ஒரு இருபத்தியோரு நாட்களுக்குத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றத்தைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நேசிக்க ஆரம்பிப்பீர்கள். அதன் விளைவு, நீங்கள் அடுத்தவரையும் மிகச் சுலபமாக நேசிக்க முடியும்.

கிருஷ்ணர் சொல்கிறார், நாம் உருவாக்கும் புலன்களைப் பொறுத்தே, நாம் அனுபவிக்கும் விஷயங்கள் அமைகின்றன. நாம் நேர்மறையான உணர்வுகளை உருவாக்கும்போது, நம்முடைய வாழ்க்கை இனிமையாய் இருக்கும். நாம் எதிர்மறையான புலன்களை உருவாக்கும்போது, எதிர்மறையான வாழ்க்கையால் கஷ்டப்படுகிறோம்.

நாம் உருவாக்குகிறோமோ, பொருட்களும் நம்மை ஈர்க்கின்றன. நாமும் அதை அனுபவிக்கிறோம்.

நம்முடைய உணர்வுகளும், பக்தியும், உடல் - மன அமைப்பும் நம்மைச் சுற்றி ஒரு சக்தி ஒட்டக்களத்தை ஏற்படுத்துகிறது. அந்த சக்தி ஓட்டம், அதே மாதிரியான சக்தி ஒட்டக்களத்தையே ஈர்க்கும். நாம் எதிர்மறையான எண்ணம் கொண்டவராக இருந்தால், எதிர்மறையான மன அமைப்பு கொண்டவர்களையே ஈர்ப்போம். அப்படியே அந்த விஷச்சூழலில் சிக்கிக் கொள்வோம்.

அதனால் நம்முடைய எதிர்மறை மன அமைப்பை, நேர்மறை மன அமைப்பாகவும் நேர்மறை உணர்வுகளாகவும் மாற்றினால், அதே மன அமைப்புள்ள மகிழ்ச்சியான மனிதர்களை நம்மை நோக்கி ஈர்ப்போம்.

இது, ஒரு மனிதரின் ஆன்மிக வளர்ச்சியில் மிகவும் முக்கியமான பங்குவகிக்கிறது. குருவோடு இருக்கும்போது இந்த வளர்ச்சியும் முன்னேற்றமும் சுலபமாக நடக்கும். ஆனால் அதே பாதையில் பயணிக்காதவர்களோடு நாம் சேர்ந்திருக்கும்போது, நாம் நம்முடைய ஆன்மிகப் பாதையிலிருந்து எளிதாக விலகி விடுவோம். அந்த உற்சாகத்தைத் தவறவிட்டுவிடுவோம்.

ஒரே இலக்கை ஆழமாகத் தேடும் ஒத்த மன அமைப்பு உள்ளவர்களின் சேர்க்கை, நம்மைப் பந்தங்களிலிருந்து விடுவிக்கும். இதுதான் ஆன்மிகப் பயணத்தின் முதல் அடி, முக்கியமானதும்கூட.

சங்கம் சரணம் கச்சாமி என்கிறார், அதனால்தான் புத்தா சங்கத்தை ஏற்படுத்தினார். கிறிஸ்து ஒரு பிரிவு சீடர்களை, தம்முடைய ஞான விளக்கை எடுத்துச்செல்வதற்கெனவே உருவாக்கினார். குருவின் உபதேசங்களைப் போல, அவருடைய சங்கமும் மிக முக்கியமானது. சங்கங்கள்தான் ஞானத்தை நிலைத்திருக்கவும் ஒளிரவும் எரிபொருளாய் இருக்கின்றன.

அதனால்தான் நான், ஒத்த மனமுடைய மக்கள் சங்கத்தை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறேன். ஏனென்றால், இது போன்ற சூழலில் வாழும் மக்கள், ஆன்மிகத்தில் மிக விரைவாக முன்னேற முடியும்.

இந்த இடங்களில் ஒன்றாக வாழ்வதினால், ஏற்படக்கூடிய சக்திப் பெருக்கத்தை வெளி உலகத்தில் உருவாக்க முடியாது. இங்கே, இந்த சங்கத்தில் உருவாகும் சக்தியை, வெளி உலகில் ஏற்படுத்த முடியாது.

எங்கிருந்தாலும் என்னால் தியானம் செய்ய முடியும் என்று நாம் சாதுர்யமாக பேசலாம்.

குருவின் உபதேசங்களைப் போல, அவருடைய சங்கமும் மிக முக்கியமானது. சங்கங்கள்தான் ஞானம் நிலைத்திருக்கவும் ஒளிரவும் எரிபொருளாய் இருக்கின்றன.

ஆனால், உண்மையைச் சொல்லவேண்டுமானால், ஆன்மிகம் செழித்து வளர்வது என்பது தனிமையிலோ அல்லது அதே மன அமைப்புள்ளவர்களோடு சேர்ந்துவாழும்போதோ மட்டுமே நிகழ முடியும்.

ஒரே மாதிரியான சக்தி ஒன்றையொன்று ஈர்க்கும்; வளப்படுத்தும்.