KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/ஆன்மிகப் பயணக்கின் ஆரம்ப இடம் ஆசிரமம்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

ஆன்மிகப் பயணக்கின் ஆரம்ப இடம் ஆசிரமம்

கேள்வி : ஸ்வாமிஜி, ஆன்மிக வளர்ச்சிபெற வேண்டுமானால், ஒருவர் ஆசீரம சூமலில் வாம் வேண்டியதன் முக்கியத்துவுக்கைப் பற்றிச் சொன்னீர்கள். ஆச்ரமங்களில் வாழ முடியாதவர்களின் நிலை என்ன ? அவர்கள் ஆன்மிகத்தில் முன்னேற முடியுமா ?

ஆச்ரமத்தில் இருக்கும் எல்லோரும் ஜீவன்முக்தா்கள் ஆவதில்லை. ஒருவர் ஜீவன்முக்தராக வேண்டுமெனில், அவர் ஆசீரமத்தில் வாழ்ந்தாக வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. ஜீவன்முக்தி என்பது நம் இயல்பான நிலை. நாம் அதைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.

அதனால், நாம் இந்த ஸ்தீயத்தை உணர்வதற்கு எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே மிகவும் முக்கியமானது.

நாம் ஜீவன்முக்கர்கள் என்றால், நாம் ஏன் அதை உணரவில்லை? நாம் கடவுள் என்பதை நாம் ஏன் உணரவில்லை? நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் என்பதை நாம் ஏன் உணரவில்லை ? இந்தப் பிரபஞ்சம், நம்முடைய எந்த முயற்சியுமே இல்லாமல், நம்மைப் பார்த்துக்கொள்ளும் என்பதை நாம் ஏன் உணரவில்லை ?

நமக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். நாம் நம்மை ஒரு தனி ஜீவனாக உணர்கிறோம். கடலில் எழும் அலையானது, தான் அந்தக்கடலில் ஒரு பகுதி அல்ல என்று நினைப்பதுபோன்றதே இது.

அந்த கடலோடு கலந்து, பின் மீண்டும் அலையாக எழுந்தாலும், அந்த அலை தன்னை, அந்தக் கடலினின்று வேறாகவே நினைக்கிறது. நாம் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து எழுந்து, மீண்டும் இந்தப் ஒடுங்கினாலும், நாம் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை உணருவதேயில்லை; 'நாம் தனி' என்றே உணர்கிறோம்.

ஜீவன்முக்கி என்பது நம் இயல்பான நிலை. நாம் அதைப் புரிந்து கொண்டு, எற்றுக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.

நாம் வெளி உலகில் பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், 'நாம் தனியானவர்' என்றே உணர்வைத் திணித்துக்கொள்கிறோம்.

நாம் மனிதர்கள் மீதும் பொருட்கள் மீதும் நிகழ்வுகள் மீதும் பற்றினை வைத்திருக்கும்போது, நமக்கும் நம்முடைய இயல்பான தன்மைக்குமிடையேகூட, ஒரு பெரிய தடுப்புச்சுவரை எழுப்பி விடுகிறோம்.

பந்தங்களை அடிப்படையாகக்கொண்டு இந்தப் பொருள்சார்ந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை, அதை உடைத்துக்கொண்டு வருவது கடினம்.

நாம் இந்தப் பந்தங்களுக்கான காரணங்களை வேறு உருவாக்குகிறோம். ஒரு தாய் சொல்கிறார்: ''நான் என் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். ''

ஒரு முதலாளி சொல்கிறார்: "நான் என் தொழிலாளிகளைப் பாதுகாக்க வேண்டும். ' '

ஒரு தலைவர் சொல்கிறார்: ''நான் என் தொண்டர்களை வழிநடத்த வேண்டும். '

இவையெல்லாம் ஸ்ரீயத்தை உணருவதைத் தள்ளிப்போடுவதற்காக நாம் பொடும் நாடகம் அல்லது நாம் விளையாடும் விளையாட்டு.

நாம் வரையறுக்கும் குழுக்களிடமும், நம்மைச் சுற்றி விரிந்து இருக்கும் உலகத்திலும் இவையெல்லாம் - கவனித்துக்கொள்வதும், பார்த்துக்கொள்வதும், வழிநடத்துவதும் - தானாகவே நிகழும்.

ஒரு ஆசீரமம், நம்மை இந்தப் பந்தங்களிலிருந்து விடுபடுத்திக்கொள்ள உதவுகிறது. குருவின் ஸாந்தீத்யமும், ஒத்த எண்ணம் கொண்டவர்களின் சேர்க்கையும் நம்மைப் புலனின்பம்சார்ந்த வெளி உலகிலிருந்து விடுதலைபெறச் செய்கிறது.

புற உலகம்சார்ந்த பந்தத்திலிருந்து, குரூவிடமான பர்தத்திற்கு மாறுகிறோம். குருவின் வழிகாட்டுதலால், நாம் அந்தப் பந்தத்திலிருந்தும் விடுபடுவோம்.

ஆச்ரமம் என்பது நம்மை யதார்த்த நிலையிலிருந்து விலகியிருக்கச் செய்யாது. ஆச்ரமவாசிகள் வெளியுலகம்சார்ந்த பல பொறுப்புக்களை ஏற்றுள்ளார்கள். பணத்தைக் கையாள்வதில் சிறந்தவர்களாக இருக்கக் கற்றிருக்கிறார்கள்; மேலும் புகைப்படம் எடுப்பது, கம்ப்யூட்டார் இயக்குவது, எழுதுவது, சிற்பம் போன்ற கலைசார்ந்த விஷயங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

இவை அனைத்துமே, பலனை எதிர்பாராமல் வாழ்வது மற்றும் பற்றற்று வாழ்வது என்ற விஷயங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.

'இறுதி லக்யத்தைத் தேடுபவர்கள் ஒன்றாகச் சேரும்போது, அது பந்தங்களிலிருந்து விடுபடுத்தும்; பந்தங்களிலிருந்து விடுபட்ட நிலை ஆசைகள் அற்ற நிலைக்கு எடுத்துச்செல்லும்; ஆசைகள் அற்ற நிலை ஒரு சலனமற்ற மனத்தை உருவாக்கும்; சலனமற்ற மனம் நம்மை ஜீவன்முக்தி அடையச் செய்யும்.' - இதைத்தான் சங்கரா் ஸ்த்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வும் என்கிறார்,

ஆச்ரமம், உள்ளுலகப்பயணத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு சிறந்த இடம்.