KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/பிரபஞ்சம் நமது நண்பனேSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

பிரபஞ்சம் நமது நண்பனே

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள் . நாம் இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. இந்த மொத்த பிரபஞ்சத்துடன், நாம் இசைந்து நடக்கும்போது, பிரபஞ்சம் நமக்கு நண்பனாகிறது. நாம் எப்போது பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைத்து, பிரபஞ்சத்திற்கு எதிராக நடக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது பிரபஞ்சம் நமக்கு எதிரிபோல் நடிக்க ஆரம்பிக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் . பிரபஞ்சம் இங்கு அழிப்பதற்காகவோ இல்லை.

இந்த என்றும் ஹோலோகிராமில் (Hologram) நாமெல்லோரும் ஒரு பகுதி.

ஒன்றிலிருந்து முழுமையான ஏதாவது ஒன்று பிரித்தெடுக்கப்பட்டாலும், அது அந்த பிரதிபலிக்கும்வகையில் இருக்கும். அதை ஆங்கிலத்தில் ஹோலாகிராம் என்கிறோம்.

பிரபஞ்சத்திற்கு எதிராக நாம் எப்போது நடக்க ஆாம்பிக்கிரோமோ. அப்போது பிரபஞ்சம் நமக்கு எதிரிபோல் நடிக்க ஆரம்பிக்கிறது.

ஹோலோகிராமிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒவ்வொரு பகுதியும், அந்த மொத்த ஹோலோகிராமையும் எப்படிப் பிரதிபலிக்கிறதோ, அதுபோலவே நாமும் முழுமைத்துவத்தை அதாவது பிரபஞ்சத்தைப் பிரகிபலிக்கிறோம்.

அடுத்ததாக, இன்னுமொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஒருவர் நீரில் முழ்கி இறந்துவிட்டால், அங்கே என்ன நிகழ்கிறது ? இறந்த உடல் தண்ணீரில் மிதக்கிறது. இறந்த உடல் தண்ணீரைவிட கனமானது, இருந்தும் மிதக்கிறது. ஆனால், உயிரோடு இருக்கும் உடல், தண்ணீரைவிட லேசானது. இருந்தும் அது மிதப்பதில்லை, தண்ணீரில் முழ்கிவிடுகிறது !

இது ஏன் நடக்கிறது? நாம் உயிரோடு இருக்கும்போது, தண்ணீருடன் நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்வதில்லை. நம்முடைய அஹங்காரம், அதைத் தடுக்கிறது. நம்முடைய மனம் அதைத் தடுக்கிறது.

இறந்த உடலில் மனமும் கிடையாது, அஹங்காரமும் கிடையாது. நம்முடைய மனமும் அஹங்காரமும்தான் உடலின் கனத்திற்கு காரணங்களாகின்றன.

நயாகரா நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து, மீண்டு வந்த ஒருவரின் பேட்டியை, நான் சமீபத்தில் படித்தேன். நயாகரா வீழ்ச்சியிலிருந்து விழுந்த ஒருவர், உயிர்பிழைத்திருப்பதைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். நயாகரா நீர் வீழ்ச்சியை நீங்கள் பார்த்திருந்தால், அதன் வேகத்தையும் பிரம்மாண்டத்தையும் பார்த்திருந்தால், உங்களுக்கு இது புரிந்திருக்கும். எல்லாப் பத்திரிகையாளர்களும், அவரிடம் அந்த அசாதாரணமான குழ்நிலையைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் மிக அழகானதாகும்: ''நான் நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்தபோது, நான் அதன் ஒரு பாகமாகவே மாறிவிட்டேன். அதன் ஒரு பகுதியாகவே என்னை உணர்ந்தேன். அதனின்று வேறாக என்னை நினைக்கவில்லை!''

நாம், கூட்டு விழிப்புணர்வுடன் இசைந்து இருக்கும்போதும், கூட்டு விழிப்புணர்வின் ஒரு பாகமாக மாறும்போதும், இயற்கை நம்மோடு இருக்கும். இயற்கை நமக்கொரு நண்பனாக இருந்து நம்மைப் பாதுகாக்கும். இயற்கை நம்மைத் துன்பப்படுத்தாது.

நாம் நம்மை, இந்த இயற்கையிலிருந்து வேறுபட்டவர்களாக நினைத்துக் கொண்டிருக்கும்வரை, நம்மை ஒரு தனிப்பட்ட விழிப்புணர்வாக நினைத்துக்கொண்டு இருக்கும்வரை, இயற்கை நமக்கு எதிராகவே இருக்கும்.

சமூக மற்றும் பொருளாதார வெற்றிகளை அடையவேண்டும் என்று நாம் நினைத்தால், நாம் அந்தச் சூழ்நிலையோடும், அந்த முழுக் குழுவோடும் இசைந்து இருக்கும்போது மட்டுமே, அது சாத்தியமாகிறது. நாம், நம்முடைய இலக்கை அடைவது சாத்தியமாகிறது.

நாம், கூட்டு விழிப்புணர்வுடன் இசைந்து நடக்க வேண்டும்! நாம் தனிப்பட்டவர்கள் என்றும், நாம் வேறு ஒருவர் என்றும் அடையாளப்படுத்தும்வரை, நாம் எந்தச் குழ்நிலைக்கும் ஒரு தடையாகவே இருப்போம். அதுபோல் நாமும் தடைபடுத்தப்படுவோம்.

இது நாம் வேலைசெய்யும் இடத்திலோ, வீட்டிலோ, தொழிற்கூடத்திலோ அலுவலகத்திலோகூட நடக்கலாம்.

கூட்டு விழிப்புணர்விற்குள் கரையும்போது, நாம் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுகிறோம். நம்மை அந்தக் கூட்டு விழிப்பணர்வே பார்க்குக்கொள்ளும். இதனால், நாம் சமூக மற்றும் பொருளாதார வெற்றிகளை அடைவது மட்டுமல்லாது, இந்த விழிப்புணர்வை அனுபூதியாக உணர்வோம். இது ஒரு பூரணத்துவமான உணர்வு. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், நாம் தடுக்க ஆரம்பிக்கும் அக்கணமே, நமக்கே நாம் ஒரு நரக அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம்.