நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதியே
முதல் சிரிம் ஸ்தூல சூரீரம். அடுத்தாக ப்ராண சூரிரம். இப்படி ஒவ்வொன்றாக செல்கிறது.
ஸ்தூல் உடலைப்பொறுத்தவரை, நீங்கள் - நான் - கிருஷ்ணர் ஆகிய மூவரும், இந்த வட்டத்தில் இருக்கும் மூன்று வெவ்வேறு புள்ளிகள். இவை மூன்றும் மிகுந்த தொலைவில் இருக்கின்றன. மேலும் ஒவ்வொன்றும் 120 டிகிரி இடைவெளியில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இடையே நிறைய இடைவெளி இருக்கிறது.
அடுத்ததாக, ப்ராண சூரீரத்திற்குச் செல்லும்போது, அந்தத் தூரம் கொஞ்சம் குறைகிறது. இன்னும் உள்ளே, மன சூரீரத்திற்குச் செல்லும்போது, உங்களுக்கும் எனக்குமான தூரமும், உங்களுக்கும் கடவுளுக்குமான தூரமும் இன்னும் குறைகிறது.
இவ்வாறு ஆழமாகப் பயணித்து, இறுதியாக நிர்வாண சூரீரத்தில் அங்கே மூன்றும் ஒன்றாகவே ஒடுங்குகிறது. ஆழமாக உள்ளே செல்லச் செல்ல, நீங்கள் - நான் - மற்றும் கடவுள் ஆகிய மூவருமே ஒன்றாகிறோம்.
ஆம், நமது பட்டறிவால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இதுதான் ஸத்யம். நான் ஏற்கெனவே சொன்னதுபோல், நாம் இந்த ஸத்யத்தைக் கேட்க விரும்புவதில்லை. ஏனென்றால் இந்த ஸகத்யம், நம் உணர்வு நிலையையே உயர்த்திவிடும், இந்த ஸத்யம், நம்மை உணர்வுமாற்றம் செய்துவிடும் என்பதால்தான்!
ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள், நாம் இந்த உள் நிலையை அடைந்துவிட்டால், கடவுளும் நாமும் ஒன்றே. நாம்தான் கடவுள். கடவுள்கான் நாம்.
கூட்டுவிழ்ப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம் என்கிற விழிப்புணர்வு நமக்கு இல்லாததே நமது துக்கங்களுக்குக் காரணம்.
ஸ்தூலமாக நாமெல்லோரும் தனித்தனியானவர்களாகத் தெரிகிறோம். ஒருவரை நாம் மிகவும் விரும்பும்பொழுது, அவருடைய அன்பும் துன்பமும் நம்மைப் பாதிக்கிறது. இது நம்முடைய இருப்பு நிலையிலிருந்து வருகிறது, செல்கிறது.
ஆழ்ந்த நிலையில் நமக்கென்று தனித்தனி அடையாளங்கள் இல்லை. நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதியே.
துக்கங்களை நாம் விரும்புவதில்லை. ஆனாலும், அவற்றிலிருந்து நம்மால் தப்பிக்க முடிவதில்லை. அது உடல் வலியாக இருந்தாலும் சரி, மன வேதனையாக இருந்தாலும் சரி அல்லது ஆன்மிகப் பந்தமாக இருந்தாலும் சரி, நாம் மீண்டும் மீண்டும் அதற்குள்ளேயே சுழன்றுகொண்டே இருக்கிறோம்.
கூட்டுவிழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம் என்கிற விழிப்புணர்வு நமக்கு இல்லாததே இதற்குக் காரணம்.
நமக்கென்று தனிப்பட்ட அடையாளம் என்று ஒன்று இல்லை, நாம் கூட்டு விழிப்புணர்வின் ஒரு பாகம் என்பதை உணர்ந்து புரிந்துகொண்டவுடன், நமக்கென்று பிடித்துக்கொள்ளவோ, பாதுகாத்து வைத்துக்கொள்ளவோ, ஒரு தனிப்பட்ட அஹங்காரம் என்று ஒன்று கிடையாது என்பதை உணருகிறோம்.
நமக்கென்று சொந்தமான ஒரு பட்டறிவு ரீதியான அடையாளம் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். பிரபஞ்ச இருப்புநிலையில், அப்படிப்பட்ட தனிப்பட்ட அடையாளம் என்று எதுவுமில்லை. இந்த லக்யத்தை நாம் உணரும்போது, வலி, துன்பம், கஷ்டம் வியாதி போன்றவற்றைக் கடந்துசெல்கிறோம்.
இயற்கையை எதிர்க்காதீர்கள்
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம், 'ஒரு தனிப்பட்ட விழிப்புணர்வு' என்ற விஷயத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும்வரை, நாம் தொடர்ந்து உடலளவிலும் மனதளவிலும் ஆன்ம அளவிலும் துன்பப்பட்டுக் கொண்டேகான் இருப்போம்.
நாம் ஏன் தொடர்ந்து இயற்கையை எதிர்த்துக்கொண்டே இருக்கிறோம் ? இயற்கை எதைக்கொடுத்தாலும் நாம் அதைக் கடுக்கிறோம், எதிர்க்கிறோம்.
சூழ்நிலை குளிராக இருந்தால், உடனே நாம் குளிரை எதிர்க்கிறோம். பிரபஞ்ச இருப்பு நிலையிலிருந்து நம்மை நினைக்கிறோம். இமயமலையில், நான் ஞானிகளையும் பார்த்திருக்கிறேன், அவர்களெல்லோரும் அந்தக் குளிரிலும், நிர்வாணமாகவே வாழ்கிறார்கள்.
நமக்கென்று கூனித்தனி அடையாளங்கள் இல்லை என்ற ஸத்யத்தை நாம் உணரும்போது, வலி, துன்பம், கஷ்டம் வியாகி போன்றவற்றைக் கடந்துசெல்கிறோம்.
நான், அதேமாதிரி பாதிக்கப்படாமல், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருந்திருக்கிறேன். வேறுபட்டவனாக, என்னை நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. இயற்கையிலிருந்து விலகியிருப்பதாக உணர்ந்ததும் கிடையாது. நாம், இந்தச் சூழலிலிருந்தும், நம்மைச் சுற்றியிருக்கும் காற்றிலிருந்தும் வேறுபட்டவர்களாக நம்மைக் கருதும்போதுதான், நாம் அவற்றைத் தடுக்க ஆரம்பிக்கிறோம்.
மிகவும் குளிராக நாம் உணரும்போதுகூட, நம்மால் இயல்பாத இருக்க முடியும். அதற்கு ஒரு எளிமையான நுட்பம். அதை நாம் இப்போதே முயற்சிசெய்து பார்ப்போம். குளிராகஇருப்பதாக உணர்ந்தீர்களென்றால், தளர்வாக இருந்து, உடலின் எந்தப் பகுதியில் குளிர்கின்றது என்பதை அடையாளம் காணுங்கள். அந்தப் பகுதியில், குளிர் உடலைத் தடுக்க நினைக்க வேண்டாம். இயற்கையைத் தடுக்கவேண்டாம். பிரபஞ்ச இருப்பைத் தடுக்க வேண்டாம்.
உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள், "இயற்கையை நான் தடுக்கப்போவதில்லை. இந்தக் குளிரை நான் தடுக்கப் போவதில்லை. பிரபஞ்சத்தை நான் தடுக்கப்போவதில்லை. ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்திருப்பேன்.'' விழிப்புணர்வுடன் இதை முடிவுசெய்யுங்கள்.
இதைச் செய்யும்போது, உங்கள் உடல் இறுத்தமில்லாமல் தளர்வாக இருப்பதை நீங்களே பார்ப்பீர்கள். குளிர் என்ற விஷயம், உங்கள் உடலின் அந்தப் பகுதியை விட்டுப்போயிருக்கும். மிகவும் லேசாக உணர்வீர்கள்.
இதை நம்மால், கடினமான சூழ்நிலைகளிலும் பயிற்சிசெய்ய முடியுமா, இதைப் பனிப்பிரதேசத்திலும் முயற்சிசெய்து குளிரைத் தடுக்க முடியுமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.
மனம் எப்போதுமே ஒரு அதீதமான சூழ்நிலையையே விரும்பும். அதுவே அதன் இயல்பு. நாம் முழுமுமைத்தன்மையோடு இதைச் செய்தால், நம்மால் பனிப்பிரதேசத்திலும், குளிரால் பாதிப்படையாமல் இருக்க முடியும். ஆனால் அந்த அளவிற்கு நம்மிடம், முழுமைத்தன்மையோ தெளிவோ இல்லாததுதான் பிரச்சினை.
நாம் இயற்கையோடு முழுமையாக இசைந்து செல்ல முடிந்தால், எந்தவொரு சூழ்நிலையின் உச்சத்திலும் சௌகரியமாக உணர்வோம்.
நாம் இயற்கையோடு இசைந்துசெல்ல முடிந்தால், எந்தவொரு சூழ்நிலையின் உச்சத்திலும் சௌகரியமாக உணர்வோம். எத்தனையோ போ பேர் இதைக் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமும் இயற்கையோடு இசைந்து செல்லும்போது, நமக்கும் இது சாத்தியமே. இயற்கையிலிருந்து ஒருவகையில் வேறுபட்டவர்கள் என்று நினைக்கும்போதே, நாம் இயற்கையால் பாதிப்படைகிறோம்.
பிரபல மருத்துவக்குழு ஒன்று, திபெத்தில், இமயமலையிலுள்ள புத்த மடாலயங்களில் வாமும் புத்த பிட்சுக்களிடம் பல விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.
அதில் ஒரு சடங்குசம்பிரதாயங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் செய்யப்பட்டது. இதில், அப்புத்த பிட்சுக்கள் ஈரத் துணிகளை உடுக்திக்கொண்டு, இரத்தத்தையே உறையவைக்கும் கடுங்குளிரில் அமர்ந்து, தங்களுடைய உடல் சூட்டை அதிகப்படுத்துவதற்கு தியானம் செய்தார்கள்.
நாம் இயற்கையோரு இசைந்து இருக்கும்போது, நம் உடலிற்குள் நுழையும் க்ரூமியானது. தானாகவே வெளியேறிவிடும்.
இப்படிச் செய்ததனால், அவா்களது உடல் வெப்பம் அதிகரித்து, அது அவர்களது உடலை வெதுவெதுப்பாக வைத்திருந்தது மட்டுமல்லாமல், அந்த ஈர உடைகளையும் உலரச் செய்துவிட்டது. இது உண்மை, இந்தச் சம்பவம் புகைக்காட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இன்னொரு விஷயம் என்னவென்றால், நம்மைச் சுற்றியிருக்கும் காற்றில், பாக்டீரியா, வைரஸ் போன்ற எல்லா வகையான கிருமிகளும் கலந்தே இருக்கின்றன. எந்த ஒரு தருணத்திலும் ஏதாவதொரு நோய்க் கிருமி நமக்குள் நோய்களை உண்டாக்கும் சாத்தியமும் இருக்கிறது.
ஆனால் நாம் இயற்கையோடு இசைந்து இருக்கும்போது, நம் உடலிற்குள் நுழையும் கிருமியானது, தானாகவே வெளியேறிவிடும். நாம் அதனால் பாதிக்கப்படமாட்டோம். நாம் எப்போது, நாம் ஒரு தனிப்பட்ட உடல், பிரபஞ்சத்தில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நினைக்கிறோமோ, அப்போதே நமது மொத்த உடலும் நமக்கு எதிரியாகிறது.