KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/கூட்டு விழ்ப்புணர்விற்குள் கரைந்துவிடுங்கள், சுதந்திரமடையுங்கள்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

கூட்டு விழ்ப்புணர்விற்குள் கரைந்துவிடுங்கள், சுதந்திரமடையுங்கள்

ஒரு சின்ன கதை

இரண்டு எறும்புகள், சாகாவரம் அளிக்கக்கூடிய அமிர்தம் இருக்கும் ஒரு பாத்திரத்தின் விளிம்பில் அமாந்திருந்தன. பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒரு எறும்பு தன் அமிர்தத்துக்குள்ளே விழுந்துவிட்டது. தட்டுத் தடுமாறி எப்படியோ தம்மை நிலைப்படுத்திக்கொண்டு மீண்டு வந்தது.

இதைப்பார்த்த இன்னொரு எனும்பு, ''நீ ஏன் அமிர்தத்துக்குள் விழ விரும்பவில்லை ? அமிர்தத்துக்குள்ளே ഴில சாகாநிலையைத்தானே அடையப்போகிறாய்!'' என்று கேட்டது.

அதற்கு அந்த முதல் எறும்பு, "இருந்தாலும், எனக்கு அமுதத்தில் மூழ்குவதில் விருப்பம் இல்லை!'' என்றது.

கூட்டு விழிப்புணர்விற்குள் கரைவதே, நம்மை முழுமைத்துவத்தில் சுதந்திரமடையச் செய்யும் என்பதை நாம் உணருவதில்லை.

'நான்' என்ற அஹங்காரத்தைப் பிடித்துக்கொண்டு, இதை நாம் தடுக்கிறோம். கூட்டு விழிப்புணர்வுடன் கரையாதவரை, நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நாம் தொடர்ந்து நரகத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்போம்.

பண்டைய சீனத் தத்துவமான தாவோயிசமும் இதையே சொல்கிறது. தாவோ, இயற்கையுடன் மிதந்து செல்வதைப்பற்றியது.

இயற்கை ஒட்டத்திற்கு, தண்ணீர், ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அது நிலத்தோடு இயைந்து பாய்கிறது. அது, அழகாகவும் உத்சாகத் துள்ளலுடனும் சக்திப்பிரவாகமாகப் பாய்கிறது.

தாவோ, பற்றியும் வேகமாகப் பாயும்போது, நாணல் நீரின்போக்கிலேயே வளைந்து கொடுக்கிறது. தண்ணீரின் வேகம் குறைந்ததும், அது நேராக நிமிர்ந்து நிற்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையிலிருந்து நம்மை வேறுபடுத்திப் பார்க்காதபோதுதான், நமக்கு இது சாத்தியம்.

நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையிலிருந்து நம்மை வேறுபடுத்திப் பார்க்கும்போதுதான், உடலிலும்கூட நோய்களை வரவேற்கிறோம்.

இன்னொரு ஆழமான அத்யும். மன சூரீர் அளவில் நாம் தனிப்பட்டவர்கள் என்று நினைக்கும்போகே, வன்முறைக்கான விதை விதைக்கப்படுகிறது. நம்மைத் தனிப்பட்டவர்களாக உணரும்போதும், நமக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நினைக்கும்போதுதான், வன்முறைக்கான விதை உருவாகிறது.

மேலும் நாம், சுயநலம்மிக்கவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் எதையும் தீவிரவாதிகளாகவே மாறிவிடுகிறோம்.

கூட்டு விழிப்புணர்வு ஒன்றுபடுகிறோம், தனி விழிப்புணர்வால் பல்வேறு துண்டுகளாகப் பிளவுபடுகிறோம். பட்டறிவு, எதையும் துண்டு துண்டுகளாக்குகிறது. விழிப்புணர்வு ஒன்றிணைக்கிறது.

ஆன்ம அளவில் தனிப்பட்டவர்களாக இருந்தால், ஆன்மிக அடியைக்கூட எடுத்து வைக்க முடியாது.

முதலாவது விஷயம், ஸ்தூல உடலளவில்கூட, நாம் தனிப்பட்டவர்கள் கிடையாது.

நம்முடைய உடலும் சூரியனுடைய உடலும் இணைக்கப்பட்டுள்ளது.

சூரியனின் ஒரு சிறு மாற்றம், நம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். நம் உடலில் ஏற்படும் ஒரு சிறு மாற்றம், சந்திரனின் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். நம் தா்க்க அறிவால் இதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், லட்சியம் இதுதான்.

ஆன்ம அளவில் நம்மைத் தனிப்பட்டவர்களாக நினைக்கும்போது, ஆன்மிக வளர்ச்சிக்கான சாத்தியமே இல்லை.