வெறும் சாட்சியாக இருந்தாலே போதும்
நம் மனம், முன்று விதமாக வேலை செய்கிறது. அது, இயல்பூக்க நிலையில், விழிப்புணர்வற்றும் இயங்க முடியும். அறிவு நிலையில், விழிப்புணர்வோடும் இயங்க முடியும். உள்ளுணர்வு நிலையில், உயர்விழிப்புணர்வோடும் இயங்க முடியும்.
நம் மனம் முழுக்க, எதிர்மறை உணர்ச்சிகளைச் சுமந்து கொண்டிருக்கும் ஸ்ம்ஸ்காரங்கள் நிலையிலேயே செயல்படுகிறது. சிறு வயது முதல் திரும்பத் திரும்ப நம்முள் ஏற்படுத்தப்பட்ட கட்டுறு மனப்பாங்கின் காரணமாக, இந்த ஸ்ம்ஸ்காரங்கள் நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதியில் மிக ஆழமாகப் புதைந்துள்ளன.
நாம் ஒரு கஷ்டத்தில், வலியில், வேதனையில் இருக்கும்போது, தெளிந்த மனத்துடன் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணத்தில்,
விழிப்புணர்வற்ற பதிந்திருக்கும் இந்தப் பதிந்தப் பதிவுகள் சட்டென தீர்மானத்தை, நம்மையறியாமலேயே எடுக்கச் செய்கின்றன. நாம் என்ன செய்ய
ரும்முடைய ஸ்ம்ஸ்காரங்களை முடிவுசெய்கின்றன. நம்முடைய மனத்தின் பட்டறிவுப்பகுதி, விழிப்புணா்வுப் பகுதி அதைச் செய்வதில்லை.
பத்து சதவீத விஷயங்களில் மட்டுமே, நம் மனத்தின் விழிப்புணர்வுப் பகுதி முடிவுகளை எடுக்கிறது. அப்போதும்கூட, நம்முன் விரிந்து கிடக்கும் பல்வேறு வாய்ப்புகளிலிருந்து எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழப்பம் அடைகிறோம்.
நம்முடைய தர்க்க அறிவைப் பயன்படுத்தி, சரியானது என்று முடிவுசெய்து ஒரு தீர்மானத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். பின், அவ்வாறு தேர்ந்தெடுத்ததற்காக வருந்துகிறோம். எந்த ஒரு தேர்வுமே நூறு சதவிகிதம் சரியாக இருப்பதில்லை.
உண்மையிலே, நாம் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இருக்கிறதா ? ஆம். இருக்கிறது! எடுக்கும்போது, அது தவறாக இருக்கவே முடியாது.
எப்படி நாம் இந்த உள்ளுணர்வு நிலைக்குள் நுழைவது ?
நம் மனது ஒருநிலைப்படும்போது உள்ளுணர்வு வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இதைத்தான் நாம் நிகழ்காலத்தருணம் என்கிறோம். நாம் எப்போதும் கடந்தகாலத்திலேயோ அல்லது எதிர்காலத்தைக் கணிப்பதிலேயோதான் புதைந்திருக்கிறோம். நாம் எப்போதாவதுதான் நிகழ்காலத்திற்கு வருகிறோம். நம் நிகழ்கால எண்ண ஓட்டங்கள், நமக்குக் கொடுக்கும் பரிசு உள்ளுணர்வுதான்!
நம் மனம் எப்போதாவதுதான், நம் உடல் தியானத்தின்பொழுது ஒருநிலைப்படுகிறது. ஒருவரின் விழிப்புணர்வு நிகழ்காலத்தில் நிலைக்கிறது ; விளைவு, எண்ணங்கள் நிற்கிறது; உள்ளுணர்வு செயல்படுகிறது.
இருக்கும் அந்த இடத்திலேயே இருக்கிறது. கடந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தொடர்ந்து தாவிக்கொண்டே இருக்கும் மனத்தின் அசைவே எண்ண ஒட்டங்கள். எண்ணங்கள் நிற்கும்போது மனம் நின்றுவிடும்.
தியானம், நமது எண்ணங்களை நிறுத்துகிறது. இது மிகவும் சுலபமானது. தியானத்தின்பொழுது, ஒருவரின் விழிப்புணர்வு நிகழ்காலத்தில் நிலைக்கிறது; விளைவு, எண்ணங்கள் நிற்கிறது; உள்ளுணர்வு செயல்படுகிறது. இந்தத் தருணத்தில் நாம் எடுக்கும் எந்தவொரு முடிவுமே சரியானதாகவே இருக்கும்.
எண்ணங்கள் நிற்கவேண்டும் என்றுகூட அவசியமில்லை. உங்கள் எண்ணங்களை நீங்கள் பின்தொடராமல் இருந்தாலே போதும். உங்களது எண்ணப்போக்கில் மாட்டிக்கொள்ளாமல், சாட்சியாக மட்டும் இருக்கும் இந்த நுட்பத்தை நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டால் போதும் நீங்கள் உங்கள் போரில் வெற்றியடைந்துவிட்டீர்கள்.
இந்த நுட்பத்தில் நீங்கள் கைதேர்ந்தவராக ஆகும்போது, நீங்கள் விரும்பும்போதெல்லாம், நிகழ்கால தருணத்தில் நிலைகொள்கிறீர்கள். நிகழ்கால தருணத்தில் நிலைத்து, நீங்கள் முடிவுகளை எடுக்கும்போது, 'இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்து விட்டோமே' என்று எதிர்காலத்தில் அந்த முடிவுகளைக் குறித்து வருந்தும் நிலை, ஒருபோதும் ஏற்படாது.
இதை கடைபிடிக்கும்போது, எத்தனை கோடிக்கணக்கான பணத்தைச் சேமிக்க முடியும் என்பதை கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். பணத்தை சேமிப்பது மட்டுமே இதன் பலன் அல்ல.
இயல்பூக்க உணர்ச்சி நிலையிலிருந்து வெளிப்படும் ஆசை அல்லது அச்சத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளிலிருந்து நாம் விடுபடுகிறோம். உள்ளுணர்விலிருந்து நாம் இயங்கும்போது, ஒருபோதும் நாம் இயற்கைக்கு முரணாக இருக்க மாட்டோம். உள்ளுணர்வே இயற்கை !