விஞ்ஞானத்தின் கடைசிப்படியே ஆன்மிகத்தின் முதல்படி!
கிருஷ்ணர் அர்ஜுனனை இன்னும் ஆழமான லட்சியத்திற்குள் அழைத்துச் செல்கிறார். கிருஷ்ணர், இந்தப் படைப்பின் ஆதார சக்தியான புருஷன் பற்றிப் பேசுகிறார்.
சாங்கியத் தத்துவம் புருஷன் பற்றியும், பிரக்ருதி பற்றியும் பேசுகிறது. புருஷ என்பது அங்கும் இங்கும் நகராத, செயல்படாத சக்தியையும், பிரக்ருதி என்பது இயங்கு பொருளின் அடிப்படைத் தன்மையையும் குறிக்கும். புருஷ என்பது ஆண் சக்தி, சிவன். பிரக்ருதி என்பது பெண் சக்தி, தேவி.
எல்லா உயிரினங்களும் அழியக்கூடியதே, ஆனால் அவை எல்லாம் அழியா சக்தியில் நிலை கொண்டிருக்கின்றன!
கிருஷ்ணர், இந்தத் தத்துவத்தையும் தாண்டி, இன்னும் ஆழமாகச் செல்கிறார். புருஷ என்பது இரண்டு அடுக்காக இருக்கிறது என்கிறார். ஒன்று, அழியக்கூடியது; மற்றொன்று, அழிவில்லாதது. அவர் சொல்கிறார், எல்லா உயிரினங்களும் அழியக்கூடியதே, ஆனால் அவை எல்லாம் அழியா சக்தியில் நிலை கொண்டிருக்கின்றன என்கிறார்.
முந்தைய அத்தியாயங்களில் கிருஷ்ணர், மனம், புலன்கள் மற்றும் முக்குணங்களின் மூலமாக இயங்கும் பிரக்ருதியின் அம்சங்களைப்பற்றி ஆழமாக விளக்கினார். இப்பிரபஞ்சம் உட்பட வெளிப்பட்ட அனைத்து சக்தியுமே பிரக்ருதி எனப்படுகிறது. இப்போது அவர் புருஷன் பற்றி விளக்கமளிக்கிறார். ஈசா வாஸ்யம் இதம் ஸாவம் - இருப்பது அனைத்துமே சக்தியே என்று ஈசா வாஸ்ய உபநிடதம் சொல்கிறது.
மிகப்பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீன், தம்முடைய கண்டுபிடிப்பான 'தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி'யின் (ஒவ்வொரு பொருளும் சக்தியை வெளிப்படுத்தக்கூடியவையே என்னும் சார்பியல் கொள்கையின்) அடிப்படையில் அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டபொழுது, தம்முடைய கண்டுபிடிப்பை, தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார்களே என்று வேதனை அடைந்தார்.
தம்முடைய கண்டுபிடிப்பு தாம் விரும்பாமலேயே பயன்படுத்தப்படுவதை நினைத்து அதிர்ச்சி அடைந்தார். அதனால், வேதனையடைய அவர் ஆன்மிகத்தை நாடினார்.
அப்போது, ஐந்தாயிரம் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, உபநிடதங்களில், பிரக்ருதி, புருஷன் பற்றி விளக்கப்பட்டிருந்ததைப் படிக்க நேர்ந்த ஐன்ஸ்டீன் சொன்ன வாசகங்கள்: 'பொருள் என்பது சக்தியே என்கின்ற விஷயத்தை நான் கண்டுபிடித்ததாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே, கிழக்கத்திய ஞானிகளும் ரிஷிகளும் சொல்லியிருக்கிற விஷயங்களையே, இப்போது விஞ்ஞானிகளும் சொல்லத் தொடங்கியுள்ளார்கள்.
ஆனால் இந்த ஞானிகள், பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே, இதைத் தெரிந்து வைத்திருந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இதற்கும் மேலான ஒரு லட்சியத்தையும் அவர்கள் சொல்லியிருக்கின்றனர், சக்தியிலிருந்தே பொருட்கள் தோன்றுகின்றன' என்கின்ற மிக சூட்சுமமான தத்துவத்தைப் புரிந்துவைத்திருந்தனர். விஞ்ஞானத்தின் கடைசிப்படியே ஆன்மிகத்தின் முதல்படி!
ஐன்ஸ்டீனின் இந்தக் கருத்து, பாரதத்தைப் பெற்றியும் உபநிடதங்களைப் பற்றியும் தவறான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கான ஒரு சவுக்கடி !
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கிழக்கத்திய ஞானிகளும் ரிஷிகளும் சொல்லியிருக்கிற விஷயங்களையே இப்போது விஞ்ஞானிகளும் சொல்லத் தொடங்கியுள்ளார்கள்.
சில நூறு வருடங்களுக்கு முன்புவரை மேற்கத்திய விஞ்ஞானிகள், தாங்கள்தான் இயற்கையின் விதிகளைக் கண்டுபிடித்து எழுதுவதாக நினைத்திருந்தனர். ஆனால், அந்த மனநிலை இப்போது இல்லை.
குவாண்டம் இயற்பியல், மூலக்கூறுகளின் உயிரியல் (Quantum physics. Molecular biology) போன்ற துறைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தினால், தங்களால் இயற்கையை ஓரளவிற்குத்தான் யூகிக்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர்.
மூலக்கூறு ஒரு உள்ளாற்றல் சக்தியைப் போன்றது. இந்த சக்தி இல்லாமல் எதுவும் இருக்க முடியாது.
ஒரே ஆராய்ச்சியை, ஒரே மாதிரியான முறையில், இரண்டு விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் முடிவின் மீது ஆராய்ச்சியாளரின் எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் ஒரேமாதிரியாக அல்லாமல் வேறுவேறாக இருக்கின்றன.
நமது சாஸ்திரங்கள் இதைப்பற்றி ஆயிரம் விஷயங்கள் குறிப்பிட்டுள்ளன. 'பார்ப்பவர், பார்க்கிற பொருளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார்' என்று சங்கரா் மீண்டும் மீண்டும் சொல்வதன் தாத்பர்யம் இதுவே.
இது, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்ட ஒரு சத்தியம்!
கடவுளே என்றாலும்
அடையாள அட்டை கேட்பார்கள்
மூல சீக்தியான புருஷ் என்பது ஒரு உள்ளாற்றல் சக்தியைப்போன்றது. அது ஒரு சீக்திதான். ஆனால் அது செயல்படாது. அதுதான் இந்த மொத்தப் பிரபஞ்சமும் இயங்குவதற்குப் பின்னணியில் இருக்கும் அடிப்படை விதி. இந்த சீக்தி இல்லாமல் எதுவும் இருக்க முடியாது.
கிருஷ்ணர் சொல்கிறார், இரண்டு வகையான முருஷ சீக்தி இருக்கிறது. ஒன்று, எங்கும் நிறைந்திருக்கும் அழியா சக்தி. மற்றொன்று, அழியக்கூடியது.
உடல் மனிதர்களுக்குள்ளும் இருக்கும் சக்தி தான், அழியக்கூடிய பருஷ ச க்க்கி இதற்கு ஒரு வரையறுக்கப்பட்ட, எல்லைக்குட்பட்ட வாழ்நாளே உள்ளது. இது நிலையானது அல்ல. இது சிதைவுற்று அழிவுறும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
புருஷவின் அழிவற்ற அம்சமான கூடஸ்த என்னும் சக்திய, ஒருபோதும் அழிக்க முடியாத, நம்முள் என்றென்றும் தொடர்ந்திருக்கும் ஆத்ம ச 'க்தி!
கிருஷ்ணர் ச் கீதியானது, அழியாதது என்று இரண்டு வகைகளில் வெளிப்படுகிறது. இந்த இரண்டுமே அடிப்படை ச'க்தியின் அம்சங்களே. ஒன்று, அழிக்கப்படுகிறது. மற்றொன்று தொடர்ந்து வாழ்கிறது. இரண்டிற்கும் உள்ள இந்த வித்தியாசத்தை அனுபவ உணர்பவர்களும், புருஷ் சக்தியின் அடிப்படை ஸ்தீயத்தைப் விடுகலையடைகிறார்கள்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்கிறார்,
ஒரு மேதாவியான பண்டிதா் ஒருவர், தாம் படித்துத் தெரிந்துகொண்ட விஷயங்களினால் மிகுந்த கா்வத்துடன் இருந்தார். அவர் அத்வைத (இரண்டல்ல) தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவர். அதனால், கடவுள் பல உருவங்களில் இருப்பார் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.
ஒருநாள் தேவி, தம்முடைய அனைத்து அலங்காரங்களுடனும் பராசக்தியாக அவருக்குக் காட்சி தந்தாள். அதைப் பார்த்த பண்டிதார், பிரமைபிடித்தது போலாகிவிட்டார். அவரால் அந்த நிலையிலிருந்து வெகு நேரத்திற்கு மீளமுடியவில்லை. பிரமை தெளிந்தபோது, அவரால் உச்சரிக்க முடிந்தது 'கா, கா, கா' என்பது மட்டும்தான். அவரால் தாம் கண்ட தெய்வத்தின் பெயரைக்கூட முழுதாகச் சொல்ல முடியவில்லை! வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாததுதான் தெய்வம்.
பண்டிதர்கள், புருஷவின் இயல்பு மற்றும் பல்வேறு ப்ரக்ரு 'திக்கும் வித்தியாசத்தைப் பற்றியும், முடிவில்லாமல் வாதம்செய்துகொண்டே இருப்பார்கள்.
வாகம் தொழிலாகவே அவர்களின் அஹங்காரத்தை மட்டுமே பலப்படுத்துகிறது. கெய்வமே அவர்கள்முன் காட்சியளித்தாலும், அவர்களால் அதை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
நாம் உள்ளுணர்வால் முடிவுகளை எடுக்கும்போது, அது தவறாக இருக்கவே முடியாது.
'தான் காளிதான்' என்பதை நிரூபிக்க, காளிதேவியேகூட, அடையாள அட்டையுடன் வரவேண்டி இருக்கிறது.
கேள்வி: சுவாமிஜி, மனம் எப்படி வேலை செய்கிறது என்பதை மிக அழகாக விளக்கினீர்கள். இதை, நம்முடைய தினசரி நடவடிக்கைகளில் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?