KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறைSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு 'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால், அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கிவிடுகிறோம்.

ஆனால், ஸம்ஸ்க்ரு ்த மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம் சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில் இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ருத உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப் படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ரு 'த்த்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துகளும் நான்குவிதமான உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை1234
எழுத்து
ககடவுள் (ka)அக்கா
(kka)கங்கை (ga)கடம் (gha)
சசரம் (cha)சச்சரவு
(chcha)ஜூடி (ja)மஜ்ஜை (jha)
டபட்டம் (ta)பட்டம்
(tta)படம் (da)டம்ஸ் (dha)
ததங்கை
(tha)தாததா
(ththa)தானம் (da)தா்மம் (dha)
பபசு (pa)அப்பா
(pha)பம்பரம் (ba)பந்தம் (bha)
ச்,ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு 'த அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ருதத்தின் முதல் வகை எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸம்ஸ்க்ரூ த்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக இருந்தால், அதை ஸ்மீஸ்க்ரு ்தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும், தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை ஸ்ம்ஸ்க்ரு 'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸ்மீஸ்க்ரூ தத்தில் மூன்று வகை'ஸ்' க்கள் உண்டு.

1. ஸ 2. ஷ. ஆனால், மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது 'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ் எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறியை இந் நூலில் பயன்படுத்தியுள்ளோம்.

ச்ரணாகதி, சி'வன் - இது போன்ற வார்த்தைகளில், ச' - என ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள் அதனை, தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும் எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில் வரும் ssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு'வைப்போல உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ரு தத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா' என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும் இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் ≤ என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ' என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத் தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால், ஸ்ம்ஸ்க்ரு த்த்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது. அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில் எல்லாம்கூட, ஸ்மீஸ்க்ரு 'த வார்த்தைகளைப் பொறுத்தமட்டில், 'ந'என்று மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந், வாஸநா என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், படிப்போரின் வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில், 'ன' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பகவுத்ததை ஒரு அறிமுகம்