KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/இயற்கைக்கு எதிரானதால் பாதையை மறந்துவிட்டோம்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

இயற்கைக்கு எதிரானதால் பாதையை மறந்துவிட்டோம்

இயற்கைக்கு எதிராகப் போய் விட்ட ஒரே மிருகம் மனிதன் மட்டுமே!

ஒரு சின்ன கதை,

ஒருவர் தம்முடைய வளர்க்கும் செல்லப் பூனையிடமிருந்தும் விலக நினைத்தார். ஆனால் பாரதத்தில், ஒரு கணவர், தாம் நினைத்தவுடன் தம் மனைவியை சிறு சிறு காரணங்களுக்காக விவாகரத்து செய்ய முடியாது. அதனால் பூனையிடமிருந்தாவது தப்பிக்கலாம் என்று முடிவுசெய்தார்.

அந்தப் பூனையைக் காரில் எடுத்துக்கொண்டு, ஒரு பத்து மைல்களுக்கு அப்பால் சென்று விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தார். அவர் ஆச்சரியப்படும் வகையில், அவர் வீட்டிற்குள் நுழையும்போது பூனையும் உள்ளே நுழைந்தது.

அடுத்த நாள் அந்தப் பூனையைக் காரில் எடுத்துக்கொண்டு, நாற்பத்தைந்து நிமிடங்கள் பயணம்செய்தார். அவரே இதுவரை பார்த்திராத ஒரு அடர்ந்த காட்டைப் பார்த்தார், அங்கே அந்தப் பூனையை விட்டுவிட்டு திரும்பி காரோட்டிக்கொண்டு ஒருவித நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தார். அந்தப் பூனை, அமைதியாக வீட்டு வாசலில் அமர்ந்திருந்தது, அவர் அதிர்ச்சியடைந்தார்!

மூன்றாவதுநாள், அவர் முன் ஜாக்கிரதையாக, அந்தப் பூனையின் கண்களைக் கட்டி, ஒரு சாக்கில் போட்டு காரில் ஏற்றினார். மிகவும் குழப்பமான பாதைகளைத் தேர்ந்தெடுத்து, வண்டியை ஒட்டிச்சென்று, ஏதோ ஒரு இடத்தில் பூனையை விட்டுவிட்டார். அதன்பின் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

ஒரு மணிநேரம் பயணம்செய்தபிறகு, அவர் தம் மனைவிக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ''அம்மா, அந்தப் பூனை வீட்டில் இருக்கிறதா?'' என்று கேட்டார். அதற்கு அவருடைய மனைவி, ''ஆம், இப்போது என் அருகில்தான் இருக்கிறது, '' என்றார். உடனே அதற்கு அவர் 'தயவுசெய்து, நான் வீட்டிற்கு வர, நீதான் எப்படியாவது உதவ வேண்டும். நான் வந்த வழியை மறந்து விட்டேன்,'' என்றார்.

விலங்குகள் இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. மனிதர்களாகிய நாம்தான் இயற்கைக்கு எதிராகச் சென்றுவிட்டோம், அதனால் பாதையையும் மறந்துவிட்டோம்.