KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/Part 5: Bhagavad Gita Explained _ Chapter 15Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

Part 5: Bhagavad Gita Explained _ Chapter 15

நம் அஹங்காரம்தான், நாம் இந்த நிகழ்ச்சியைக் கவனிக்க வேண்டுமா அல்லது இங்கிருந்து எழுந்து செல்ல வேண்டுமா என்பதை முடிவுசெய்கிறது. நாம் அந்த முடிவை வெளிப்படுத்துகிறோம், அந்த முடிவைப் பொறுத்துச் செயல்படுகிறோம்.

இந்த அஹங்காரத்தளமானது நம்முடைய விழிப்புணர்வு, தர்க்க அறிவு, பட்டறிவு மனத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது.

இந்த அஹங்காரமானது, தொடர்ந்து தன்னுள் முத்திரைகளையும், கடந்தகால நினைவுப் பதிவுகளையும், நிறைவேறாத ஆசைகளையும், மற்ற உணர்ச்சிமயமான எதிர்ச்செயல்களையும், ஒரு பதிவுகளாகத் தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருக்கிறது.

நாம் இந்த அனுபவங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது நமக்குள் நடந்துகொண்டேதான் இருக்கிறது. அஹங்காரம் தூங்குவதே இல்லை.

இந்த விழிப்புணர்வற்ற பகுதியானது எதிர்மறை நினைவுகளாலும் அமைதியற்ற தன்மையாலும் நிரம்பி இருக்கிறது. நம்முடைய எல்லாக் கடந்தகால நினைவுப்பதிவுகளும், நமது எண்ண அமைப்புகளும், இந்த விழிப்புணர்வற்ற பகுதியில் கோப்புகளாக இருக்கின்றன.

உளவியலில், இவ்வாறு நினைவுப்பதிவுகளை engrams (பதிக்கப்பட்ட நினைவுகள்) என்று அழைக்கிறார்கள். இந்த விழிப்புணர்வற்ற பகுதியில்தான், அனைத்து விதமான கோப்புகளும் சேகரிக்கப்படுகின்றன. எந்த ஒரு தர்க்க ரீதியான

எண்ணப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான், நாம் எப்போதும் ஓய்வின்றி இருக்கிறோம்.

தொடர்புமின்றி, எல்லாச் சம்பவங்களும் அப்படியே வரிசைப்படி பதிவாகின்றன.

எண்ணப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான், நாம் எப்போதும் ஓய்வின்றி இருக்கிறோம்.

ஏற்கெனவே சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் இந்த விழிப்புணர்வற்ற தாவலாக இந்தக் கோப்பும் தாவும்போது என்ன நடக்கிறதென்றால், ஒரு தீர்மானத்தை எடுக்கவிருக்கும் அஹங்காரப் பகுதிக்குள் இந்தக் கோப்பு முழுமையாகச் சென்று சேருவதில்லை.

ஒரு கம்ப்யூட்டரில், தகவல்களைச் சேகரிக்கப் பயன்படும் ஹார்ட் டிஸ்கானது (Hard Disc) பதிவுகளால் நிறைந்திருந்தால், புதிதாகத் தகவல்கள் ஏதும் சேகரிக்கும் அளவிற்கு இல்லாமல்போனால், அப்போது கம்ப்யூட்டா் இயங்க முடியாமல் நின்றுவிடும்.

நம்முடைய விழிப்பணர்வற்ற பகுதியும் இதேபோல்தான் இருக்கிறது. பழைய எண்ண அமைப்புகளுடனும் அது நிரம்பியிருப்பதால், நம்முடைய அஹங்காரமானது, சரியாக ஆராய்ந்து சிறந்ததொரு முடிவை எடுக்காமல், அவசர கதியில், ஒரு திறமையற்ற முடிவை எடுத்துவிடுகிறது.

உதாரணத்திற்கு, புகைபிடிப்பதை எடுத்துக்கொள்வோம். நம்முடைய ஞாபகங்களைப் பொறுத்தவரை புகைபிடிக்கும் பழக்கம் கெடுதலானது என்பது நமக்குத் தெரிந்ததே. அது நம் உடலுக்குக் கேடானது என்பதும் தெரிந்ததே. நாம் நம்முடைய விழிப்புணர்வு நிலையில் இருக்கும்வரை, இந்த முடிவையே நாம் பிடித்துக்கொண்டிருப்போம்.

இருந்தாலும், விழிப்புணர்வற்ற பகுதிக்குள் ஒரு எண்ணம் நுழையும்போது, ஏற்கெனவே இருக்கும் மனப்பதிவுகள் அதற்கு இடும் கட்டளை, 'புகைபிடி' என்பதுதான். உடனே நாமும் புகைபிடிக்கத் தீர்மானிக்கிறோம்.

விழிப்புணா்வுப் பகுதி 'புகைபிடித்தல் உடல் நலத்திற்குத் தீங்கானது, அதனால் நாம் புகைபிடிக்க வேண்டாம்' என்று சொல்லும். ஆனால் விழிப்புணர்வற்ற பகுதியோ, 'புகைபிடிக்க வேண்டும்' என்றுகூட சொல்வது கிடையாது, 'புகைபிடித்தாக வேண்டும்' என்ற தீர்மானத்தையே அது எடுத்துவிடும். நாம் அதைச் செயல்படுத்துவோம் ! முழுக்க முழுக்க இது ஒரு இயல்பூக்க நிலையிலான முடிவு.

இந்த விழிப்புணர்வற்ற பகுதியானது, மிகவும் சக்தி வாய்ந்தது. இதை மூன்று வகையாக உபயோகப்படுத்தலாம். இயல்பூக்க நிலை, தர்க்க நிலை மற்றும் உள்ளுணர்வு நிலை.

விழிப்புணர்வற்ற நினைவுப்பதிவுகளாலும் அமைதியற்ற தன்மையாலும் நம் முடிவுகள் இயல்பூக்க நிலையிலேயே இருக்கின்றன. இயல்பூக்க நிலையிலும் விழிப்பற்ற நிலையிலும், ஒரு விலங்கு போலவே அவசர நிலையில், பதட்டமான முடிவுகளை எடுக்கும்போது, தவறான முடிவுகளையே எடுக்கிறோம்.

நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதிக்குள் அமைதியையும் விழிப்புணர்வையும் நிரப்பும்போது, நாம் உள்ளுணர்வு நிலையிலே இருப்போம்.

அடுத்ததாக தர்க்க ரீதியாக முடிவெடுக்கும் நிலை. இந்த நிலையில், நாம் விழிப்புணர்வுடன் இருக்கிறோம். தர்க்க ரீதியான முடிவுகளை எடுத்தாலும் அதில் மிகப்பெரிய உற்சாகமோ, சக்தியோ இருப்பதில்லை. நாம் இந்த நிலையில், புதிதாகவும் படைப்புத்திறனுடன் சிந்திப்பதில்லை. நம்மால் மகத்தான முடிவுகளை எடுக்க முடியாது. நாம் மேலும் முன்னேறுவதில்லை. நாம் காரண காரியங்களை ஆராய்ந்து விழிப்புணர்வுடன் முடிவு எடுக்கிறோம். அவ்வளவுதான்.

தர்க்க ரீதியான முடிவெடுக்கும் நிலையில், நாம் சோர்வடைவதும் இல்லை, புத்துணர்வுடன் இருப்பதும் இல்லை. நாம் ஒரு சுமாரான மனநிலையில் இருக்கிறோம். இந்த நிலையில், நாம் நமது ஆற்றலை முழுவதுமாகப் பயன்படுத்துவதில்லை.