KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/நமது மனம் எப்படி இயங்குகிறதுSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

நமது மனம் எப்படி இயங்குகிறது

  • 15.15 நான் ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கிறேன். நினைவும் அறிவும் அவற்றின் இழப்பும் என்னிலிருந்துதான் வெளிப்படுகின்றன. வேதங்களினால் அறியப்படும்பொருள் நானே. உண்மையில் வேதாந்தத்தை உருவாக்கியவனும் நானே, வேதங்களை அறிந்தவனும் நானே.
  • 15.16 இந்த உலகில் அழியக்கூடியவை, அழியாதவை என்று இரண்டு வகையான விஷயங்கள் இருக்கின்றன. வாழும் உயிர் அனைத்தும் அழியக்கூடியவை. கூடஸ்தன் (ஆத்மா) அழியாதவன்.

உங்கள் மனத்தின் இருப்பிடம் எது ?

கிருஷ்ணர், 'அவரே நினைவாகவும் அறிவாகவும்' இருப்பதாக அறிவிக்கிறார். இதன் பொருள் என்ன?

நமது மனம் எப்படி இயங்குகிறது? அது எப்படி நம்பிக்கைகளைக் கண்டுபிடித்துக்கொள்கிறது ? நமக்கு நம்முடைய மனம் எங்கே இருக்கிறது என்பதுகூட தெரியாது.

உங்கள் மனம் எங்கே இருக்கிறது என்று உங்களைக் கேட்டால், உங்கள் தலையைக் காண்பிப்பீர்கள், அது உங்கள் மனம் அல்ல.

நம் உடலில் இருக்கும் அத்தனை திசுக்களுக்குள்ளும், ஒரு இயல்பான புத்திசாலித்தனம் நிறைந்திருக்கிறது. இந்தத் திசுக்கள் அனைத்தும், தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் திறன்கொண்டவை. அதனால் நமது புத்திசாலித்தனம் எப்போதுமே புதிதாகவும், காலத்திற்கேற்ப தன்னை உயர்த்திக் கொள்வதாகவும் இருக்கிறது. அது பழைமையானது அல்ல.

திசுக்களே நமது உடல் - மன அமைப்பை உருவாக்குகின்றன. அவை நம் உடலெங்கும் நிறைந்து இருக்கின்றன. அதனால், நம் மனம் உடலின் இந்தப் பகுதியில்தான் இருக்கிறது என்று நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது, நிச்சயமாக அது நம் தலையில் இல்லை.

இந்த மனமானது எப்படி இயங்குகிறது? திசுக்களினால் ஆன நமது உடல் - மன அமைப்பின் கூட்டு புத்திசாலித்தனம் எந்தவிதத்தில் இயங்குகிறது ? இன்றளவும் அறிவியல், இதற்கான ஒரு ஒரு சிறுகுறிப்பைக்கூட தர முடியவில்லை.

புலன்கள், எவ்வாறு வெளி உலகை உள்வாங்கிப் என்பதை இன்றைய விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

விஞ்ஞானிகளும், நரம்பியல் வல்லுனர்களும், உளவியல் அறிஞர்களும் மற்றும் பல துறை அறிஞர்களும், 'நமது சிந்தனை நடக்கிறது' என்று தாங்கள் நினைக்கிற ஏதோ ஒரு தூல பாதையைக் காட்டலாம். ஆனால், அதற்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது.

நம்முடைய ரிஷிகளும் ஞானிகளும் இந்த அமைப்பு எப்படி இயங்குகிறது என்று அழகாக விளக்கியிருக்கிறார்கள். அவர்கள், எப்படி எண்ணங்கள் ஒரு பாகத்திலிருந்து மற்றொன்றிற்குப் பரிமாறப்படுகிறது என்பதை கருத்து ரீதியாக விளக்கியிருக்கிறார்கள்.

திசுக்களே நமது உடல் - மன அமைப்பை உருவாக்குகின்றன.

அவர்களுடைய இந்த விளக்கங்கள் நம் மனம் எப்படி இயங்குகிறது என்பதை நமக்கு அழகாகத் தெளிவுபடுத்துகின்றன.

இப்போது, நாம் எப்படி உள்வாங்குகிறோம் என்பதை இந்தப் படத்தின் துணையோடு பார்ப்போம்.

இது கண்கள் வழியாக நாம் உள்வாங்கும் விஷயங்களுக்கு மட்டுமல்லாது, மற்ற புலன்களான காது, மூக்கு, நாக்கு மற்றும் உடலின் வழியாக நாம் உள்வாங்கும் அனைத்து விஷயங்களுக்கும் பொதுவானது.

ஒரு எடுத்துக்காட்டுக்காக, நாம் கண்களால் பார்க்கும் செயல்பாட்டை எடுத்துக்கொள்வோம் ஏனென்றால் புலன்சார்ந்த செயல்களில் கிட்டத்தட்ட 80% செயல்கள் கண்கள் வழியாக உள்வாங்கும் செய்திகளாகவே இருக்கின்றன.

உங்கள் கண்கள் இப்போது என்னைப் பார்க்கின்றன. ஸம்ஸ்க்ரு'தத்தில் இந்தப் பார்க்கும் திறனை, சக்ஷு என்று சொல்கிறோம்.

சக்ஷு என்பது கண்களுக்குப் பின்புலத்திலிருந்து இயக்கும் சக்தியே தவிர, இது ஒரு உறுப்பு அல்ல. இது காட்சிகளைச் சிக்னல்களாக மாற்றும் திறன் கொண்டது. ஆங்கிலத்தில் இதை 'டிஜிடல் சிக்னல் ப்ராஸசர் (Digital Signal Processor) என்று சொல்கிறார்கள்.

நாம் பார்க்கும் காட்சிகள், பயோ - சிக்னல் கோப்புகளாக மாற்றப்பட்டு, மனப்பதிவுகள் இருக்கும் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. இந்த நினைவுப் பகுதி, இப்போது வந்திருக்கும் பதிவுகளை ஆராய ஆரம்பிக்கும். அது ஏற்கெனவே தனக்குள் வைத்திருக்கும் பதிவுகளையும், புதிதாய் வந்திருக்கும் பதிவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்.

சித்தம் ஒரு வடிகட்டியாகச் செயல்படுகிறது. அது ஏற்கெனவே இருக்கும் பதிவையும், புதிதாய் வந்திருக்கும் பதிவோடு 'இது அதுவல்ல, இது அதுவல்ல' என்று ஒவ்வொன்றாக நிராகரிக்கும்.

'இப்போது நாம் பார்ப்பது, ஒரு விலங்கு அல்ல, ஒரு பாறை அல்ல', என்று ஒவ்வொன்றாக நிராகரிக்கும். ஸம்ஸ்க்ரூத்தில் இதை, ந கதி, ந இதி என்று சொல்வார்கள்.

'இதுவல்ல, இதுவல்ல' என்பதன் மூலம், ஒரு பகுதி மட்டுமே செயல்முறைபடுத்தப்பட்ட, வடிகட்டப்பட்ட ஆவணமானது முழுதாகச் செயல்முறை ஆக்கப்பட்டதல்ல.

அடுத்ததாக அந்த ஆவணம், நம்முடைய மனத்துள் அதாவது மனஸில் நுழைகிறது. அதன் பின்பு மனம், 'உங்கள் முன் இப்போது பேசிக் கொண்டிருப்பது ஒரு மனிதர்தான்' என்பதைச் சொல்லும். மனம்தான் நாம் பார்க்கும் பொருளை அடையாளம் காண்கிறது. தனக்குள் இருக்கும் மிகப்பெரிய நினைவுப்பதிவுக் கோப்புகளிலிருந்தே மனஸ் இதைச் செய்கிறது.

இன்றளவும் ஒரு கம்ப்யூட்டரால் இந்த அடையாளம் காணும் செயலைச் செய்ய முடியவில்லை. இந்த ஒரு செயலைச் செய்வதற்குத் தேவைப்படும் உபகரணங்களையும் சக்தி அளவையும் கணக்கிட்டுப் பார்க்கையில், அது ஒரு கடினமான காரியமாக இருக்கிறது.

மேலும் நம் உடல் - மன அமைப்பு, இந்தச் செயலைச் செய்ய எடுத்துக்கொள்ளும் வேகம், கம்ப்யூட்டரால் ஈடுசெய்ய முடியாததாகவே இருக்கிறது.

அஹங்காரம் தூங்குவதே இல்லை

இப்படி அடங்கிய கோப்பு, ஒரே தாவலாக நமது அஹங்காரத்தை அடைகிறது.

அஹங்காரம் என்பது, சிக்மண்ட் முஃபிராய்டும் (Sigmund Freud) மற்றவர்களும் விளக்கியதுபோல, அது மனிதனின் அடையாளம். அங்கேதான், நாம் சோதித்துப்பார்த்த அத்தனை விஷயங்களின் பதிவுகளும் இருக்கிறது.

ஆனால், நான் இங்குச் சொல்கின்ற வரையறை, மேற்கத்திய உளவியல் தத்துவங்கள் சொல்லும் வரையறையைக் காட்டிலும் வேறானது.

நம்முடைய அஹங்காரம், இந்தக் கோப்பை தனக்குள் ஏற்கெனவே பதிந்திருக்கும் எண்ணப்பதிவுகளோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும். அந்தப் பதிவுகளைப் பொறுத்தே, இந்தச் குழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்.

நாம் ஏற்கெனவே இப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்குகொண்டு, அதில் நமக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்திருந்தால், தொடர்ந்து அமர்ந்திருந்து அவருடைய பேச்சைக் கேட்போம் என்று தீர்மானிப்போம்.

அப்படி இல்லாமல், அந்த நபருடனான, அதுபோன்ற வேறுயாருடனான நமது முந்தைய அனுபவம் மோசமானதாக இருந்திருந்தால், நாம் அந்த இடத்தைவிட்டு உடனடியாகச் சென்று விடுவோம்.