KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/தலைவனாக வாழ்வோம் அல்லது தொண்டனாக வாழ்வோம்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

தலைவனாக வாழ்வோம் அல்லது தொண்டனாக வாழ்வோம்

மன ச்ரீர் அளவில்கூட, நாம் தனிப்பட்டவர்கள் கிடையாது. யாரோ ஒருவருக்குள் ஏற்படும் ஒரு எண்ணமானது, நம்மை வந்தடைகிறது. அதுபோல, நம்முடைய மனத்தில் ஏற்படும் ஒரு எண்ணமானது, மற்றவரையும் சென்றடைகிறது.

யாரோ ஒருவரால் விதைக்கப்பட்ட ஒரு எண்ணம், நம்மையும் பாதிக்கிறது. இது, ஒரு குளத்தில் உருவாக்கப்படும் அலையைப் போன்றது.

நாம் ஒரு வலிமையான அலையை உருவாக்கும்போது, வலிமையான எண்ணத்தை உருவாக்கும்போது, நம்முடைய அந்த எண்ணத்தால் தாக்கத்தை ஏற்படுத்துகிறோம். நமது எண்ணங்களால் மற்றவர்களை வழிநடத்தவும் உற்சாகப்படுத்தவும் செய்கிறோம். நம்முடைய எண்ணங்கள் போதுமான அளவிற்கு வலிமையாக இல்லாதபோது, மற்ற அலைகள் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாழ்ந்தால், ஒரு தலைவனாக வாழ்வோம். இல்லையென்றால், தலைவனைப் பின்தொடரும் ஒரு தொண்டனாக வாழ்வோம். இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை என்று எதுவுமில்லை.

'நான் தலைவன் இல்லை, என்னால் அவ்வளவு வேலையெல்லாம் செய்யமுடியாது. அதேசமயம் நான் தொண்டனும் இல்லை, என்னுடைய சொந்தப் பாதையில் செல்வேன்,'' என்று நாம் சொல்லலாம்.

இது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். 'என்னுடைய தனிப்பட்ட நிலை' என்று எதுவுமில்லை. வழிநடத்துதல் அல்லது பின்தொடர்தல், இவை இரண்டுதான் இருக்கின்றன.

மனச் ரீர் அளவில், மீண்டும் மீண்டும் நம்மைத் தனிப்பட்டவர்களாக நினைக்கும்வரை, விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் நாம்' என்பதை உணரும் அந்த ஏற்றுக்கொள்ளப்படுவோம்.

மூன்றாவது

இறுதிநிலையில், மொத்தக் குழுவோடு, மொத்தப் பிரபஞ்சத்தோடு ஆழமாக இணைக்கப்பட்டவர்கள்தான், வலுவாகவும் ஒன்றிணைக்கப்பட்டவர்கள்தான் என்பதை உணரும் அந்த வினாடியே, நாம் THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM ஐ உணர்வது மட்டுமல்லாது, 'இருப்புத்தன்மையின்' பல பரிமாணங்களை நாம் வாழ ஆரம்பிப்போம். அப்போதுதான் நாம் உண்மையிலேயே வாழ்கிறோம்.

இப்போது இருக்கும் கடுகடுப்பாக இருக்கிறோம். தொடர்ந்து ஏதோ ஒன்று நம்மைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது. அதனால் நாம் தொடர்ந்து அளவுக்கதிகமாகவே சிந்திக்க வேண்டியதிருக்கிறது.

நம்முடைய தனிப்பட்ட உடல் மற்றும் மனத்தைக்கொண்டு நாம் நிறைய சிந்திக்க வேண்டியதிருப்பதால், இருப்பதற்கு, நாம் கடினமாக முயல வேண்டியதிருக்கிறது.

கூட்டு கரையும்போது, நமக்குள் நாம் புதுப்புது பரிமாணங்களையும் சாத்தியங்களையும் உயிர்ப்பிப்போம்.

கூட்டு விழிப்புணர்விற்குள் நாம் கரையும்போது, நமக்குள் நாம் புதுப்புது பரிமாணங்களையும் சாத்தியங்களையும் உயிர்ப்பிப்போம்.

இந்த ஒரு உடலைக் கொண்டே, நம்மால் இவ்வளவு ஆனந்தத்தை உணர முடிகிறது. கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். இரண்டு உடல்கள் இருந்தால், இன்னும் எவ்வளவு ஆனந்தத்தை உணரலாம். பல உடல்கள் இருந்தால், எவ்வளவு சாதிக்கலாம் என்பதைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள்.

உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஆனந்தமும் மகிழ்ச்சியும் அதிகமாகும். கூட்டு விழிப்புணர்வின் ஒரு பகுதி நாம் என்று உணரும்போது, இது நமக்கு அனுபவமாகிறது.