KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/எதிர்மறை நம் உடல் எடைக்குக் காரணம்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

எதிர்மறை நம் உடல் எடைக்குக் காரணம்

தியானத்தின் மூலம் இந்த ஸம்ஸ்காரங்களை மாற்றியமைத்து, நாம் மீண்டும் புதிதாகப் பிறக்கலாம். ஸம்ஸ்காரங்களைச் சீரமைப்பதன் மூலம், நம்முடைய குணம், நடத்தை மற்றும் பண்புகளை மாற்றியமைக்கலாம்.

அதனால்தான், தியானம் செய்ய ஆரம்பித்தபின் மக்கள், தங்கள் கருணையை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.

அழகு, ஒப்பனை செய்வதால் உருவாக்கப்படுகிறது; கருணை, தியானத்தினால் அதிகப்படுத்தும், அடுத்தவரை அமைதியற்ற தன்மைக்கு (ரஜஸ் ) எடுத்துச்செல்லும். ஆனால் கருணை, தன் அருகில் இருப்பவர்களை தங்கள் இல்லத்தில் இருப்பதுபோன்றே உணரச்செய்யும். அது சூழ்நிலையையே அமைதிப்படுத்தும். கருணை, சத்வத்தை உருவாக்கும், அடுத்தவருக்குள் சக்தி பொங்கச் செய்யும்.

த்யானத்தின் மூலம் ஸம்ஸ்காரங்களை மாற்றியமைத்து, நாம் மீண்டும் புதிதாகப் பிறக்கலாம்.

ரமணர் நினைவுகூறும் மக்கள் சொல்கிற ஒரு விஷயம் என்னவெனில், அவர்கள் மெளனத்தின் மூலமாகவே ஞானத்தை அடுத்தவருக்குள் பாய்ச்சினார்கள் என்பதுதான்.

ஜ்ஞானகுருமார்களின் ஸாந்நித்யம் நம்மைச் சுற்றி இருக்கும் சூழலின் சக்தியில் ஊடுருவி, மாற்றியமைக்கிறது. ஸாந்நித்யத்தில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இதுவே, 'நாம் வெறுமனே இருப்பது!'

நம்மைத் திறந்துவைத்து, அமைதியாக, குருவின் அருளை அனுமதித்தாலே போதும். இங்கு நாம் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. என்ன செய்ய வேண்டுமோ அதை குருவின் கருணை செய்துவிடும்.

பாரதத்தின் தலைசிறந்த காப்பியமான இராமாயணத்தில் அருமையான பகுதி இது: இளவரசி சீதை, தமது தந்தையான ஜனகரின் அரசவையில் நுழையும்போது, அங்கே அமர்ந்திருந்த ஞானிகளும் பேரரசர்களும் தாமாகவே எழுந்து நின்றார்கள். இது அரசவையின் நடைமுறை வழக்கம் அல்ல. சீதை வெளிப்படுத்திய கருணையே அவர்களுக்குள் இத்தகைய பதில்செயலை நிகழ்த்தியது.

அழகு, அடுத்த மனிதருக்குள் ஏக்கத்தையே ஏற்படுத்தும். கருணை ஒன்றே மரியாதையை ஏற்படுத்தும். சீதையின் 'இருப்பிலிருந்து' வெளிப்பட்ட கருணையானது அனைவரையும் எழுந்து நிற்கச்செய்தது.

ஜென் புத்தமதம் சொல்கிறது, ஒரு மனிதர் புல்வெளியில் நடக்கும்போது, அவர் நடந்த இடத்திலிருக்கும் புல் சாகாமலும், அங்குப் பாதை ஏற்படாமலும் இருக்குமேயானால் அவருக்கு சந்நியாசம் சாத்தியம் என்று சொல்கிறது.

நான்கூட முதலில் இதை நம்பவில்லை. 'நம்முடைய முழு உடலின் பாரத்தையும் எப்படிப் புல்லால் தாங்க முடியும், அதுவுமல்லாமல் அந்த இடத்தில் பாதை ஏற்படாமல் எப்படி இருக்க முடியும், இது சாத்தியம் இல்லை' என்றே நினைத்தேன்.

ஒருமுறை, தென்னிந்திய காட்டுக்குள் யானைசவாரி செய்யும் வாய்ப்புகிட்டியது. எங்கள் இருப்பிடத்திற்குத் திரும்புகையில் நேரமாகிவிட்டதால், இருட்டிவிட்டது. அந்த யானைப் பாகனிடம் டார்ச் லைட்டோ அல்லது வேறெந்த விளக்கோ இல்லை. இந்த இருட்டில் எப்படிப் பாதையைக் கண்டுபிடிப்பீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, 'நான் தினமும் நடப்பதால், இங்கே ஒரு பாதை அமைந்திருக்கிறது. அந்தப் பாதையில், இந்த இருட்டில்கூட என்னால் நம் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துச் சென்றடைய முடியும், ' என்றார்.

உடனே நான், அந்த யானையைப் பற்றிக் கேட்டேன். ஏனென்றால், அந்த யானையும் தினமும் அந்தப் பாதையில் அவருடன் நடக்கிறது, அப்படியானால் அது நடக்கும் பாதையும் இருக்க வேண்டுமே என்கிற காரணத்தால் அதைப் பற்றிக் கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. யானை நடப்பதால் பாதை உருவாகாது. யானை மட்டுமல்ல, எந்த விலங்கு நடந்தாலும்கூட பாதை உருவாவதில்லை, என்பதுதான் அந்த பதில்.

ஒரு புல் நுணியைக்கூட சேதப்படுத்தாமல் நம்மால் புல்வெளிமீது நடக்க முடியுமானால், நாம் சந்நியாசத்திற்குத் தகுதியானவர்கள்! நடக்கும்போது புல்லை சேதப்படுத்துவது கிடையாது! என்பதுதான் அந்த பதில்.

நான் ஒரு சிறிய கணக்குப் போட்டேன். யானையின் ஒரு காலால் பூமியில் ஏற்படும் அழுத்தம், குறைந்தபட்சம் ஒரு சராசரி மனிதர் ஏற்படுத்தும் அழுத்தம்போல் நான்கு மடங்கு அளவுக்காவது அதிகமாக இருக்கும். அப்படியிருந்தும், அது பாதையை உருவாக்குவதில்லை, ஒரு சிறு புல் நுனியைக்கூட சேதப்படுத்துவதில்லை, சுற்றுச்சூழலுக்குச் சேதாரம் செய்வதில்லை.

அதனால்தான் ஜென் புத்தமதம் சொல்கிறது: 'ஒரு புல் நுணியைக்கூட சேதப்படுத்தாமல் நம்மால் புல்வெளிமீது நடக்க முடியுமானால், நாம் சந்நியாசத்திற்குத் தகுதியானவர்கள்! "

நம்முடைய காரண சரீரத்தில் பதிந்திருக்கும் வன்முறை மற்றும் எதிர்மறை ஸம்ஸ்காரங்கள், நம்மைப் பூமிக்குப் பாரமானவர்களாக உணரச் செய்கிறது.

நம்முடைய பாரத்தை உணர்ந்தோமென்றால், ஸம்ஸ்காரங்களைச் சுமந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள்.

பாரம் என்பது நம் உடல் எடையோடு சம்பந்தப்பட்டதல்ல, அது, நம் உள் வெளியில் இருக்கும் பதிவுகளோடு சம்பந்தப்பட்டது. தம்மை எடையற்று உணரும் ஒருவர், தம்முடைய இருப்புத்தன்மையிலிருந்து கருணையை வெளிப்படுத்துவார். அவர் புல்வெளியில் நடக்கும்போது பாதை உருவாவதில்லை, ஒரு புல் நுனியைக்கூட சேதப்படுத்துவதில்லை.

நம்முடைய பாதங்கள் பாதையை ஏற்படுத்தாதபோதும், காற்றில் மிதப்பதுபோல் செயல்படாதபோதும் மட்டுமே, நாம் ஆன்மிகத்தில் மலர்ந்தவர்களாக ஆகிறோம் என ஜென் மதம் வரையறுக்கிறது.