KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/உங்களின் மதிப்பைக் கீர்மானிப்பது எது ?Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

உங்களின் மதிப்பைக் கீர்மானிப்பது எது ?

கிருஷ்ணர் 'கட்டுறு மனப்பாங்கு' என்னும் புதிய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

அண்மைக் காலத்திய ஆராய்ச்சி, மனிதர்கள் இரண்டு கால்களால் நடப்பதேகூட கட்டுறு மனப்பாங்கினால்தான் என்று கெரிவிக்கிறது.

சமீபத்தில் ஒரு விஞ்ஞான ஆராய்ச்சிக் குழு காட்டிற்குச் சென்றபொழுது, அங்கு ஒநாய்களால் வளர்த்து ஆளாக்கப்பட்ட ஒரு பதினேமு வயது வாலிபனைக் காண்நேர்ந்தது. அவனைத் தங்களுடன் அழைத்து வந்த அவ்விஞ்ஞானிகள் அவனுக்கு இரண்டு கால்களில் நடப்பதற்கும், சில வார்த்தைளைப் பேசுவதற்கும் கற்றுத்தர முயன்றார்கள். அவர்களால் இதைச் செய்ய முடியவில்லை, அவன் ஒரு வருடத்திற்குள் இறந்து விட்டான்.

மனிதன், தன் கட்டுறு மனப்பாங்கினால்தான் இரண்டு கால்களால் நடக்கிறான். மனிதனின் இயல்பு என்று நாம் நினைப்பவையெல்லாம் கட்டுறு மனப்பாங்கைத் தவிர, வேறொன்றுமில்லை.

ஜென் புத்த மதத்தில், கட்டுறு மனப்பாங்கை நீக்குவதற்கு ஒரு அழகான நுட்பம் இருக்கிறது.

சாதகன், ஒரு இருபத்தொரு நாட்களுக்குத் தொடர்ந்து ஒரு தனி அறையில் இருக்க வேண்டும். அவன் உணவருந்தலாம், தூங்கலாம். ஆனால், அவன் இதுவரை பார்த்தது, கேட்டது அனைத்தையும்

மனிதனின் கயல்பு என்று நாம் நினைப்பவையெல்லாம் கட்டுறு மனப்பாங்கைத் தவிர, வேறொன்றுமில்லை.

தன் மனத்திலிருந்து தூக்கியெறிந்துவிட வேண்டும். இப்படிச்செய்யும் பட்சத்தில், இருபத்தொரு நாட்களுக்குள் அவர் ஞானமடைந்திருப்பார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

இது ஒரு கடுமையான வேலை. இத்தகைய நிலையில் இருபத்தொரு இருப்பதுகூட ஒரு கடினமான வேலைதான்!

இங்கே உலகம்' என்று சொல்கிறார், எல்லாமே கட்டுறுத்தப்பட்டவைதான்.

சரி - தவறு, மரியாதை - அவமரியாதை என எல்லாமே கட்டுறு மனப்பாங்குதான். நாம், மரியாதை மற்றும் அவமரியாதை என்று நினைக்கக் கற்றுத்தரப்பட்டதால் அவ்வாறு நினைக்கிறோம்.

நாம் பல பல வகைகளில் கட்டுறுத்தப் பட்டவர்களாக இருக்கிறோம். ஒரு பிரிவு மக்கள் கூட்டமாகச் சேர்ந்து, நமக்குச் சான்றிதழ் அளித்து, கைகளைத் தட்டினால், அதை நாம் மரியாதை என்று எடுத்துக்கொள்கிறோம். அப்படித்தான் நமக்குச் சொல்லித் தரப்பட்டுள்ளது.

ஒருபோதும் அடுத்தவரின் கைகட்டல்களை வைத்து உங்களை எடைபோடாதீர்கள். இந்த அங்கீகார ஏக்கம், பலரைப் பைத்தியமாக மாற்றியுள்ளது.

ஆனால், ஒருபோதும் அடுத்தவரின் கைதட்டல்களை வைத்து உங்களை எடைபோடாதீர்கள். இந்த அங்கீகார ஏக்கம், பலரைப் பைத்தியமாக மாற்றியுள்ளது. கூட்டத்தின் தீர்ப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

ஒரு சின்ன கதை

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பத்தாயிரம் போ் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பத்திரிகையாளர் ஒருவர் சர்ச்சிலிடம், ''இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்து, நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

சர்ச்சில் உடனே சொன்ன பதில்: "ஒருபோதும் கூட்டத்தைவைத்து என் முக்கியத்துவத்தை எடைபோடாதீர்கள். இன்று பத்தாயிரம் மக்கள் இருக்கிறார்கள். நாளையே என்னைப் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்போவதாக நீங்கள் அறிவித்தால், அங்கு ஒரு லட்சம் மக்கள் கூடியிருப்பார்கள். அது பார்க்கவேண்டிய ஒருகாட்சி!''

சரி - தவறு, மரியாதை - அவமரியாதை என்பதையெல்லாம் கூட்டத்தின் அளவு முடிவுசெய்ய முடியாது. உங்களின் ஒருங்குவித்தல், சீர்த்தை, ஆழமான சுய - விழிப்புணர்வு இவையே உங்களின் மதிப்பைத் தீர்மானிக்கும்.