ணம்ஸ்காரத்தைச் செயலிமக்க வைக்கும் தந்திரங்கள்
கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்கள் சேர்த்துவைக்கப்பட்டுள்ள, காரண கீர்த்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். அவர் ஒரு அசாதாரணமான விஞ்ஞானி.
ஒரு விஞ்ஞானியால்தான் அத்யத்தை நேர்மையாகத் தேட முடியும். தம் சொந்த நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் விட்டுவிட்டு, தேடுதலின்போது படிப்படியாகக் கண்டுபிடிக்கப்படும் இரகசியங்களை வெளிப்படுத்துவதற்குத் தேவையான போதுமான தைரியத்தையும் அவரே பெற்றிருக்க முடியும்.
இந்தப் பண்புகளை நாம் கிருஷ்ணரிடம் காணலாம். அவர் தம்முடைய வெளிப்படுத்துதலிலும் தேடுதலிலும் நேர்மையானவராக இருக்கிறார். அவர் பெரிய லக்குத்திற்காக, தம்முடைய சிறிய புரிந்துகொள்ளுதல்களை விட்டுவிடத் தயாராக இருக்கிறார். அவர் இன்றைய புதுப்பிக்கப்பட்ட ஞானத்திற்காக, நேற்றைய ஸ்த்யத்தை விடத் தயாராக இருக்கிறார்.
நாம் கடந்த வருட ரயில்வே அட்டவணையைப் பார்த்துக்கொண்டு, இன்றைய புகைவண்டிக்குக் காத்திருக்க முடியாது. கிருஷ்ணர், தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்கிறார். இறுதியாக, அவர் இரகசியங்களைப் பொதுமக்களிடம் தைரியமாகத் திறந்துவைக்கிறார். அவர் பதிப்புரிமை பற்றியோ, பட்டறிவுசொத்துரிமை பற்றியோ கவலைப்படவில்லை.
க்ருஷ்ணர், இரகசியங்களைப் பொதுமக்களிடம் தைரியமாகத் திறந்து வைக்கிறார். அவர் பகிப்புரிமை பற்றியோ, பட்டறவு சொத்துரிமை பற்றியோ கவலைப்படவில்லை.
இந்து பாரம்பரியத்தில் அறிவு எல்லோருக்கும் சொந்தமானதாகவும், இலவசமாகக் கற்பிக்கப்பட நம்பப்பட்டது. ஒரு கருத்தே கிருஷ்ணர் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்தும் அளவிற்குத் தைரியமாக இருந்தார்.
அவர் அழகாகச் சொல்கிறார்: நரூபமஸ்யேறை த தோபலப்யதே - ஒருவராலும் இந்த மரத்தின் அமைப்பைப் புரிந்துகொள்ள முடியாது.
எவராலும் அது அது எங்கே துவங்குகிறது, எங்கே முடிகிறது அல்லது அதன் மூல ஆதாரம் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. இருந்தபோதிலும் பற்றின்மை என்ற ஆயுதத்தைக்கொண்டு. திடமான மனோ பலத்தினாலும் உறுதியான தீர்மானத்தினாலும் ஒருவர் இந்த மரத்தை வெட்ட வேண்டும்.
ஒருவர். கம் காரண சூரிக்கில் என்ன சேர்த்து வைத்திருக்கிறார் என்பதை என்பதை எவராலும் பார்க்க முடியாது. அது பண்டோரா பெட்டியைப் (Pandora's Box) போன்றது.
எல்லா ஸம்ஸ்காரங்களையும் பற்றின்மை என்ற உறுதியான கீர்மானத்தினால் வெட்டிவிட முடியும்.
பண்டோரா பெட்டி என்பது கிரேக்க பழங்கதை மரபுப்படி, மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் ஒருசேர உள்ளடக்கிய ஒரு பெட்டி. அதைத் திறந்துவிட்டால் போதும், அதன்பிறகு நிகழ்வது, நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்காது.
இந்தக் காரணச் ரீர்த்தில் சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் எல்லா ஸம்ஸ்காரங்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் நான்கை அழிக்கும்பொழுது, பத்து ஸம்ஸ்காரங்கள் மேற்பரப்பிற்கு வரும். உள்ளே என்ன இருக்கிறதென்று யாருக்கும் தெரியாது. ஒரே ஒரு விஷயம் மட்டுமே சாத்தியம், எல்லா ஸம்ஸ்காரங்களையும் பற்றின்மை என்ற உறுதியான கீர்மானத்தினால் வெட்டிவிட முடியும்.
உறுதியான தீர்மானத்தினாலும் புத்திசாலித்தனத்தாலும் முழு காரண ச 'ரீர்த்தையும் தூய்மையாக்க முடியும்.
மக்கள் தங்கள் குருவிடம், ஸம்ஸ்காரங்களிலிருந்து வெளியே வருவது எப்படி ? என்று கேட்கிறார்கள்.
திடமான தீர்மானத்தாலும் ஞானத்தாலும் மட்டுமே அப்படிச் செய்ய முடியும். உதாரணத்திற்கு, நாம் அறியாமல் நெருப்பில் கையை வைத்துவிட்டால், நெருப்பிலிருந்து கையை எடுக்க குருவின் உதவியைக் கேட்போமா ? இல்லை. நெருப்பு சுட்டவுடனேயே, கைகளை நாம் எடுத்துவிடுவோம். நம்மிடம் புரிதல் இல்லை என்றால் மட்டுமே குருவிடம் கேட்போம்.
புரிதல் இருந்தால், அதைத் தொடர்ந்து சரியான செயல்கள் நடைபெறும். தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், அங்கே புரிதல் நிகழவில்லை.
ஸ்ம்ஸ்காரங்கள் விடுபட, அவற்றைக் கரைக்க உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் புத்திசாலித்தனமும் பற்றின்மை என்ற உறுதியான தீர்மானமும் தான்.
கிருஷ்ணர் விவரிக்கிறார். அந்த ஸ்ம்ஸ்கார மரத்தை வெட்டியபின், 'திரும்ப வருதல்' இல்லாத நித்யமான அமைதியிடம் சரணடைந்தபின், நாம் மீண்டும் இங்கே திரும்பி வரமாட்டோம். அந்த இடமே மொத்தப் பிரபஞ்சமும் நிலைபெற்றிருக்கும் இடம்.