KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/பிரபஞ்ச கூட்டுவிழிப்புணர்வுSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

பிரபஞ்ச கூட்டுவிழிப்புணர்வு

இது உங்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம் அல்லது, இது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயமாகக்கூட இருக்கலாம்.

இந்த ஸ்தீயம் புதியதா, பழையதா என்று ஆராயாமல், இந்த ஸக்யத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உள்வாங்குங்கள், ஆராயுங்கள்.

உங்கள் தர்க்க அறிவு சோர்வடைந்து, தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரை, இதைப் பற்றி சிந்தனை செய்துகொண்டே இருங்கள்.

முதல் ஸக்யம் என்னவென்றால், நம்முடைய மனதில் எண்ணங்கள் தோன்றுவது நம்முடைய தனிப்பட்ட விஷயம் கிடையாது. நம் எல்லாருடைய மனமும், இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே. நம் மனங்கள் அனைத்துமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

நம் மனங்கள் அனைத்துமே ஒன்றோடு ஒன்று கொடர்புகொண்டவை. அவை ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை மட்டுமல்ல, அவை அவை ஒன்றையொன்று நேரடியாகப் பாதிக்கவும் செய்யக்கூடியவை. நம் மனம், நேரடியாகவே மற்றவரைப் பாதிக்கும். இதைத்தான் கூட்டு விழிப்புணர்வு என்கிறோம்.

ஜலதோஷத்தைப் போல நமது எண்ணங்களும் பரவக்கூடியதே!

ஜலதோஷம் பிடித்திருக்கும் ஒரு மனிதரிடம் இருந்து, நமக்கு ஜலதோஷம் பரவாமல்கூட, சுலபமாகத் தப்பித்து விடலாம். ஏனென்றால் ஜலதோஷம் அவ்வளவு தீவிரத்தன்மையுடன் பரவுவதில்லை. ஆனால், நமது எண்ணங்கள் ஜலதோஷத்தைவிட தீவிரமாகப் பரவக்கூடியவை.

நமக்கு வேறு யாரிடமிருந்தாவது ஜலதோஷம் தொற்றிக்கொண்டால், சில நாட்களுக்கு உடலளவில் மட்டுமே பாதிக்கப்படுவோம். அதுவுங்கூட விரைவில் சரியாகிவிடும். ஆனால், நாம் மற்றவரிடமிருந்து எதிர்மறை எண்ணங்களைப் பி டி த் து க் கொள் (ளு ம் பொ முது , நாம் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். அதுமட்டுமல்ல, அது நீண்ட நாள் தொடரும் ஒரு பாதிப்பாகவும் பிரச்சினையாகவும் இருக்கிறது.

ஜலகோஷத்தைப் போல நமது எண்ணங்களும் பரவக்கூடியதே!

நம்முடைய ஒரு சிறிய செயல் எதுவாக இருந்தாலும், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சுற்றியிருப்பவர்களை மட்டுமல்லாமல், இந்தப் பூமியில் வாழும் அனைவரையும் பாதிக்கிறது.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நம்முடைய பட்டறிவு இதை நம்ப மறுக்கும். இது எப்படி ஸத்யமாகும்? இதை நாம் கேள்வி - பதில் நேரத்தின்போது ஒவ்வொன்றாக அங்குலம் அங்குலமாகப் பார்ப்போம்.

முதல் வேறுவேறு உயிரினங்களும் கிடையாது, மனங்களும் கிடையாது, நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டவர்கள். நாம் ஒருவரோடு ஒருவர், எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் இணைக்கப்பட்டுள்ளோம். என்னுடைய எந்த ஒரு எண்ணமும் உங்களுக்குள் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல், உங்களுடைய எந்த ஒரு எண்ணமும் என்னைத் தொடும். நாம், தனித்தனியானவர்கள் அல்ல.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் அனைவரும் தனித்தனி தீவுகள் கிடையாது. நாம் அனைவரும் மற்றவர்களால் பாதிக்கப்படாத தனித்தனி மனிதர்கள் இல்லை. கூட்டு விழிப்புணா்வு என்ற ஒரு ஸத்யம் நம் அனைவரையும் இணைக்கிறது.

அடுத்த லட்சியம்.

மனதளவில் மட்டுமல்ல, ஆழமான விழிப்புணர்வு அளவிலும்கூட நாம் இன்னும் ஆழமாக இணைக்கப்படுகிறோம்.

இந்த வரைபடத்தைப் பாருங்கள், மொத்தம் ஏழு சூரீரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு உள்வட்டமும் ஒவ்வொரு சூரீரத்தைக் குறிக்கிறது.