KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/செயலும் செய்பவரும்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

செயலும் செய்பவரும்

  • 15.1 பகவான் சொல்கிறார்: மேலே வேரும், கீழே கிளைகளும் பரப்பி வளரும் ஆலமரமானது அழியா வாழ்வெனும் மரத்திற்கு உருவகமாக இருக்கிறது. இதுத்தளின் துதிப்பாடல்கள்தான் இலைகள் என்று சொல்லப்படுகிறது. இந்த அழியா மரத்தை அறிந்துகொள்ளும் ஒருவர் வேதங்களையும் அறிந்தவராகிறார்.
  • 15.2 பூமிக்குக் கீழேயும் மேலேயும் பரவியுள்ள இந்த மரத்தின் கிளைகள் மனிதனின் மூன்று குணங்களால் வலுவூட்டப்படுகின்றன. புலனின்பப் பொருட்களே அதன் மொட்டுகள். கீழே செல்லும் வேர்கள், மனித நிலையிலிருந்து செய்யும் செயல்களின் விளைவுகளால் கட்டுண்டு உள்ளன.

காரண சரீரத்திற்குள்ளான பயணம்

கிருஷ்ணர், காரண சரீரத்தை ஆலமரம் எனக் குறிப்பிடுகிறார். இது சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி. அத்தியாயம் பதினான்கு முதல் பதினேழுவரை, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்பொழிவுகள்.

பதினான்காவது அத்தியாயமான குணத்ரய விபாக யாகத்தில், கிருஷ்ணர் நம் இருப்பின் முதல் நான்கு சரீரத்தைப் பற்றிப் பேசுகிறார். புரூஷாத்தம யாகம், என்னும் இந்த அத்தியாயத்தில் அவர் ஐந்தாம் சரீரத்தைப் பற்றிப் பேசுகிறார்.

நம்மைச் சுற்றி ஏழு சக்தி அடுக்குகள் இருக்கின்றன. நாம் இதைப் பற்றி மிக விளக்கமாக தியானந்த ஸ்புரண தியான முகாமில் விளக்கமாகப் பேசியுள்ளோம்.

இந்த மரணத்தின்பொழுது எதிர்கொள்ளப்போகும் அந்த அனுபவத்திற்குள் எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அப்போது அந்த ஆன்மா, தன் இந்த உடலைவிடுவதற்குமுன், தன்னைச் சுற்றியிருக்கும் ஸ்தூல, ப்ராண, மனோ, ஸூக்ஷ்ம, காரண, ஆனந்த மற்றும் நிர்வாண என்னும் ஏழு சக்தி சரீரங்களைக் கடந்து செல்கிறது.

இந்த ஏழு அடுக்குகளையும் உள்ளடக்கியதுதான் நம் உடல் - மன - ஆன்மா அமைப்பு. முதல் அடுக்கு, எலும்புகளாலும் சதையாலும் ஆன நம் ஸ்தூல சரீரம். மற்ற அடுக்குகள் நம் இருப்பின் அங்கங்கள். இரண்டாவது அடுக்கு ப்ராண சரீரம். இது நம் ஸ்தூல சரீரத்திற்குள் இருக்கும்

சுய முரண்பாடுடைய ஆசைகள், நம்மை ரஜஸ்ஸிலும் தமஸ்ஸிலும் மூழ்கடித்து விடுகின்றன.

ப்ராண, அபான, உதான, வியான, ஸமான போன்ற வெவ்வேறு காற்றின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும்

சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர், இந்த ப்ராண சரீரம் ஆசைகளால் நிறைந்தது என்று விளக்கினார். அவர் மேலும், நாம் எப்படி முரண்பாடுடைய ஆசைகளை உருவாக்கித் துக்கப்படுகிறோம் என்பதையும் விளக்கினார். ஆசைகள், நம்மை ரஜஸில் (அமைதியின்மை) ஆழ்த்துகின்றன. துக்கப்படச் செய்கின்றன. மேலும் தமஸில் (சுறுசுறுப்பற்ற நிலை அல்லது மனச்சோர்வு) நம்மை மூழ்கடித்து விடுகின்றன.

ஐந்தாவது அடுக்கு காரண சரீரம். இங்குதான் நம் எல்லா ஸம்ஸ்காரங்களும் விதை வடிவில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இரவும் ஆழ்ந்த தூக்கத்தில், நாம் இந்தக் காரண சரீரத்திற்குள் நுழைகிறோம். இந்த அடுக்கிலிருந்து ஸம்ஸ்காரங்களை எடுத்துத்தான் உலகத்தை உருவாக்குகிறோம்.

இந்த காரண இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர், ஆசையின் சக்தியை பயன்படுத்துவது என்று விளக்கினார்.

ஆசைகளும் ஒரு சக்தியே, அவற்றை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றைக் கடந்துசெல்ல முடியும்.

ஆசைகளும் ஒரு சக்தியே, சுய முரண்பாடுடைய ஆசைகளை உருவாக்குவதன் மூலம், அந்தச் சக்தி தவறாக உபயோகப்படுத்தப் படுகிறது. சுய முரண்பாடுடைய ஆசைகள் நம்மை அமைதியின்மையில் தள்ளுகின்றன. அதன் பிறகும் நம்மை நாமே சரிசெய்து கொள்ளவில்லையென்றால், நாம் மனச்சோர்வில் விழுகிறோம். அவர், சுய முரண்பாடுடைய ஆசைகளை நீக்குவதற்கான நுட்பத்தைத் தருகிறார்.

சில ஆசைகள் மட்டுமே நம்முடைய சொந்த ஆசைகள், நாம் சென்ற பிறவியிலிருந்து கொண்டுவந்த மன அமைப்பிலிருந்து பிறந்தவை. இதை ப்ராரப்த கர்மா என்றும் சொல்வோம். நாம் பிறக்கும்போதே எடுத்து வந்தவை. இந்த ஆசைகள், அவற்றுக்கான அடிப்படை தேவைகளையும் நோக்கத்தையும் கொண்டிருப்பதால், அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கான சக்தியையும் தங்களுடன் எடுத்து வந்துவிடுகின்றன.

ஜைன மதத்தைத் தோற்றுவித்த மஹாவீரர், 'நமக்குத் தேவையான எல்லாவற்றோடும்தான் நாம் இந்தப் பூமிக்கு அனுப்பப்படுகிறோம்' என்கிறார்.

ரமண மகரிஷி சொல்கிறார், ''இந்தப் பிரபஞ்சத்தால், இப்பூவுலகில் வாழும் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும். ஆனால் ஒரே ஒரு ஒரு நபரின் ஆசையைக்கூட முழுமையாக அதனால் பூர்த்திசெய்ய முடியாது!''

எவ்வளவு உண்மை!

இந்தப் பிரபஞ்சம் நம்முடைய உண்மையான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்வதற்கான ஆற்றலை நமக்கு வழங்கி இருக்கிறது. இருந்தாலும் இங்கு வந்தவுடன், மேலும் பல ஆசைகளைச் சேர்த்துக்கொள்கிறோம். ஒப்பிடுதல், பின்பற்றுதல், பொறாமைப்படுதல் மூலமாக மற்றவர்களின் ஆசைகளைக் கடன் வாங்குகிறோம்.

கடன் வாங்கப்பட்ட ஆசைகள், இன்னும் ஆழமாகச் சொல்லப்போனால், மற்றவர்களின் உடைமைகளை அடைய வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்த ஆசைகளாக இருந்தால், அங்கு நம் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் இருக்கும்.

நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்வது என்பது நமக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுவே அதனால்தான், தம் எளிய உணவான ரொட்டிகளையும் பருப்பையும்கூட ஒரு ஏழை மனிதர் அவ்வளவு சுவைத்து உண்கிறார்!

கடன்வாங்கிய ஆசைகள் துன்பத்தையே தரும். துக்கத்திற்கே அடிகோலும். நீங்கள் எப்போதாவது ஒரு செல்வந்தர் மகிழ்ச்சியுடன் உண்மையான உணவருந்துவதைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்

அவருக்குக் குடல்புண், சர்க்கரை நோய், இதயக் கோளாறு போன்ற பிரச்சினைகளைக் கொடுத்திருக்கும். அதனால் அவருக்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட திட்டமிட்ட உணவு தேவைப்படும். அவருக்குத் தம்மைச் சரியாகப் பராமரித்துக்கொள்வதற்கும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்குமே, தனிப்பட்ட பயிற்சியாளர்களும் உணவு ஆலோசகர்களும் தேவைப்படுகிறார்கள்.

நம்முள் ஆழமாகப் பதிந்துள்ள ஸம்ஸ்காரங்கள் எனப்படும் புலனின்ப உணர்ச்சிகளின் அனுபவப் பதிவுகளே, ஆசைக்குக் காரணமாகின்றன. ஸம்ஸ்காரங்கள், விழிப்புணர்வற்ற மன சரீரத்தில் சேர்த்துவைக்கப்பட்டுள்ளன.

நம் புலன்களால் உணர்பவற்றுள், தொண்ணூறு சதவீதத்திற்கு மேலானவை விழிப்பறு பகுதியில்தான் பதிந்து வைக்கப்படுகின்றன. மீதமுள்ள பத்து சதவீதமே விழிப்புணர்வுப் பகுதிக்குள் செல்கிறது. ஆனால், அதைக்கூட சமாளிக்க முடியாமல் நம் மனம் தடுமாறுகிறது. அதுவே நூறு சதவீதமாக இருந்தால், எப்படியிருக்கும் என்று கற்பனைசெய்து பாருங்கள்.

நம்முடைய ஸ்ம்ஸ்காரங்கள், நம் செயல்களை நடத்திச்செல்கின்றன.

ப்ருறைதாரண்யக உபரிஷத் சொல்கிறது, 'நம்முடைய ஆசைகளே நாம்; நம்முடைய ஆசைகளின் உருவகமே நாம். நம்முடைய ஆசைகளே நம் மன சக்திக்கு வடிவம் தருகின்றன. நம் மனசக்தி, நம் செயல்களுக்கு வடிவம் தருகிறது. நம் செயல்கள் நம்மை உருவாக்குகின்றன. அதாவது, நாம் இப்போது என்னவாக இருக்கிறோம் என்பதை நிர்ணயிக்கின்றன. ''

கடன்வாங்கப்பட்ட இந்த ஆசைகளை நிரைவேற்றிக் கொள்வதற்கான சக்தியைக் உண்மையான இல்லை என்பதை நாம் உணர்வதில்லை. இவை பொறாமையினாலும் ஒப்பிடுதலினாலும் மற்றவர்களிடமிருந்து மட்டுமே பொறுக்கியெடுக்கப்பட்டவை. பெரும்பாலும் நம் ஸம்ஸ்காரங்களை நம்மை வரையறுக்கின்றன.

இப்போது கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்கள் விதை வடிவத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அடுத்த அடுக்கிற்கு நகர்கிறார். நாம் ஆசை, கடன்வாங்கிய ஆசைகள் துண்பத்தையே கரும்.

அச்சம், கவலை என்ற மூன்று அடுக்குகளைக் கடந்துசென்றாலும்கூட, விதை வடிவத்தில் இருக்கும் இந்த ஸம்ஸ்காரங்கள் நீக்கப்படவேண்டும்.

கிருஷ்ணர் இந்த ஸம்ஸ்காரங்களை அழிப்பதற்கான நுட்பத்தைச் சொல்கிறார். இவை, இந்த நிமிடம் நம்மிடம், தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருக்கலாம்; இருந்தாலும், அவற்றை விதை வடிவத்தில் இருக்க அனுமதித்தோமென்றால், ஒரு சமயம் இல்லாவிட்டாலும் இன்னொரு சமயம் அவை நம்மை உபயோகப்படுத்தியே தீரும்.

ஒரு அலுவலகத்தில், சில கோப்புகள் மேஜைமீது இருக்கும்; சில அலமாரியில் இருக்கும்; மற்றவை நிலவறையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருக்கும். சென்ற மூன்று அடுக்குகளும் அலுவலக மேஜை மற்றும் அலமாரியைப் போன்றவை.

இந்தக் காரண ச்ரீரம், நிலவறை பாதுகாப்பு பெட்டகத்தைப்போன்றது.

சென்ற அத்தியாயத்தில் கிருஷ்ணர், மேஜையைக் காலிசெய்வதற்கான நுட்பத்தை விளக்கினார். இப்போது, பாதுகாப்புப் பெட்டக அறையைக் காலிசெய்யும் நுட்டத்தைத் தருகிறார்.

கிருஷ்ணர் சொல்கிறார், மரத்தின் வேர்கள் வெளியில் இருக்கின்றன. அதன் கிளைகள் உள்ளே இருக்கின்றன. ஒரு மரத்திற்கு அதன் வேர்கள்தான் ஆகாரம் அளிக்கின்றன. வேர் வழியாகத்தான் தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் அவை எடுத்துக்கொள்ளும். ஒரு வளர்ச்சியை அதன் வேர்கள்தான் தீர்மானிக்கின்றன.

ஸ்தூல் ஐம்புலன்களே ஸ்மீஸ்காரங்களை வலுப்படுத்துகின்றன. அதனால்தான் கிருஷ்ணர், ''மரத்தின் வேர்கள், ஸ்தூல ச'ரீரத்தில் இருக்கின்றன," என்கிறார்.

காரண ச்ரீர்த்தில் விதை வடிவில் இருக்கும் ஐம்புலன்களால் உருவாக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

கிருஷ்ணர் மேலும் சொல்கிறார், இதன் இலைகள் வேத மர்த்ரங்கள் என்றும், யார் ஒருவர் இந்த மரத்தைத் தெரிந்துவைத்துள்ளாரோ அவரே

நாம் ஆரை, அச்சம், கவலை என்ற மூன்று அருக்குகளைக் கடந்துடுசன்றாலும்கூட, விதை வடிவத்தில் இருக்கும் ஸ்மீஸ்காரங்களை நீக்கியே ஆகவேண்டும்.

வேதங்களை அறிந்தவர் என்றும் சொல்கிறார்.

அவர் வேத மந்தரூற் - - எதுவெல்லாம் மனத்தைக் கட்டுப்படுத்துகிறதோ, நிலைநிறுத்துகிறதோ, அவை வரையறுக்கப்படுகின்றன. மேலும் மனிதனின் வாழ்க்கையை மீட்டுக்கொடுப்பவை மந்திரங்கள் என்றும் வரையறுக்கப்படுகின்றன.