முன்நீற்கும் பதிலை ஏற்காதது எது ?
குருவை மேலும் திறந்தவராக இருக்கவிடாமல் தடுப்பது, நம் கேள்விகள். அவை குருவைத் தடுத்து, நம் வார்த்தைகளுக்கான அவரது பதிலைக் கேட்கின்றன.
மேலும், நம்மால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதபொழுது, நாம் வாழும் குருவின் சான்றை, வாழும் சக்தியையே கேள்வி கேட்கிறோம். நாம் நம்முடைய பட்டறிவை அவரை மதிப்பிடுவதற்கான ஒரு அளவுகோலாக, பயன்படுத்துகிறோம். நாம் நம் வரையறைக்குட்பட்ட பட்டறிவால், அவரை வரையறைக்குட்படுத்துகிறோம்.
ஒரு சின்ன கதை
ஒரு இளைஞர், தம் கிராமம் அருகே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவரை அணுகி, தாம் ஒரு குருவைத் தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்.
அந்தப் பெரியவர், "எனக்கு ஒரு குருவைத் தெரியும்," என்று சொல்லிவிட்டு, அந்த குருவினுடைய தோற்றம், எங்கு அவரைக் கண்டுபிடிப்பது போன்ற பல விபரங்களைச் சொன்னார். அந்த இளைஞர் அந்தப் பெரியவருக்கு நன்றிசொல்லி விடைபெற்றுக்கொண்டார். பெரியவர் சொன்ன அடையாளங்களுடன்கூடிய ஒரு குருவை, முப்பது வருடங்களாகத் தேடினார். குருவைக் கண்டுபிடிக்க முடியாததால் தேடுவதை விட்டுவிட்டு, தம் சொந்த கிராமத்திற்கே திரும்பினார்.
அவர், தம் வீட்டையடையும் முன், குருவின் விளக்கத்திற்கு அப்படியே ஒத்துப்போகும் ஒரு வயதான மனிதரைப் பார்த்தார். அருகில் வந்த பிறகுதான், அந்த வயதானவர் வேறு யாரும் அல்ல, இவரிடமிருந்துதான் தம் தேடலைத் துவங்கினார் என்பதை அந்த இளைஞர் கண்டுகொண்டார்!
''உங்களைக் கண்டுபிடிப்பதற்கு என்னுடைய முப்பது வருடங்களை ஏன் வீணாக்கினீர்கள்?' என்று அந்த இளைஞர் கேட்டார்.
வயது முதிர்ந்தவர், ''வருடங்கள் அவை உன்னைப் பக்குவப்படுத்தின. நீ முப்பது வருடங்களுக்கு முன் என்னிடம் வந்தபொழுது, நான் அமர்ந்திருக்கும் இந்த மரத்தையும், என்னைப் பற்றியும் தெளிவாக விவரித்தேன். என்னால் உன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஏனென்றால், நீ யாத்திரை
செய்யும் அவசரத்திலும், அலைந்து திரிந்து உன் அஹங்காரத்தைத் திருப்திப்படுத்தும் அவசரத்திலும் இருந்தாய். உன் அஹங்காரத்திலிருந்து எழுந்த கேள்விகளைக் கரைப்பதற்கு, இந்தத் தேடல் அவசியமே. இப்போது நீ பக்குவமடைந்து, என்னை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறாய்,'' என்று சொன்னார்.
சீடர், உள் வாங்கும் தன்மையில் இல்லாவிட்டால், அவரால் குருவைக்கூடத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. கேள்விகள், அஹங்காரத்தில் இருந்து எழுகின்றன. சந்தேகங்கள், உணர்வில் இருந்து எழுகின்றன.
அர்ஜுனன் அத்தியாயத்தில், கிருஷ்ணர் ஆன்மாவைப் பற்றிப் பேசும்போது, ஆன்மாவை எந்த ஆயுதத்தாலும் வெட்ட முடியாது, எந்த நெருப்பாலும் எரிக்க முடியாது - நைநம் சிந்தந்தி ச’ஸ்த்ரானி நைநம் தஹதி பவக: | (2 – 23) என்கிறார்.
உடனே அர்ஜுனன் கேட்டார். ''ஒரு ஞானி எப்படிப் பேசுவார்?''
அவர் ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டார்? கிருஷ்ணரைப் பற்றிக் கணிப்பதற்காக, கிருஷ்ணர் ஞானமடைந்தவர்தானா என்று பார்ப்பதற்காக, அவரது அஹங்காரத்திலிருந்து எழுந்த கேள்வி அது. அர்ஜுனன், குருவின் சான்றைச் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அது வன்முறையோடு, கேள்வியோடு ஆரம்பித்தது.
ராஜவித்யா ராஜ குஹ்யம் என்னும் ஒன்பதாவது அத்தியாயத்தில், 'பிரபஞ்ச சக்தியே ஞானம்' என்கிற மேலான இரகசியத்தை கிருஷ்ணர் வெளிப்படுத்தியவுடன், கேள்விகள் மிக மெதுவாகத் தணிந்தன.
விபூதி அத்தியாயத்தில், கிருஷ்ணரின் மகிமைகளைக் கேட்டவுடன், அவருக்குள் அன்பு தர்ச் நியாகம் என்னும் பதினொன்றாவது அத்தியாயத்தில், பிரபஞ்ச
ஆன்மாவை எந்த ஆயுதத்தாலும் வெட்ட முடியாது, எந்த நெருப்பாலும் எரிக்க முடியாது. (கீதை - 2.23)
வெளிப்படுத்தியபொழுது, அர்ஜுனன் இறுதி அனுபவமாக உணர்ந்தார்.
ஒன்பதாவது அத்தியாயத்தில், தெய்விக அறிவும் தெய்விக இரகசியங்களும் வெளிப்படுத்தப்பட்டதில் உருமாற்றம் நிகழ்ந்தது. பத்தாவது அத்தியாயத்தில், தெய்விக வெளிப்பாடுகளைப் பற்றிய வர்ணனையால், பக்தியும் அன்பும் மலர ஆரம்பித்தது. பதினொன்றாவது அத்தியாயத்தில் கண்ட விஸ்வரூப தர்ச் னத்தால், அர்ஜுனனுள் 'இறுதி விழிப்புணர்வு' அனுபவம் நிகழ்ந்தது. இப்போது கேள்விகள் எல்லாம் தீர்ந்தன.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் அழகாகச் சொல்கிறார், ''விருந்துகளில்
உணவு சப்தமுமாக இருக்கும். உணவு பரிமாறத் தொடங்கியதுமே, பரிமாறும் சப்தமும் மட்டுமே கேட்கும். அதுபோல் முழுமையான அனுபவம் நிகழும்வரை, அங்குக் கேள்விகள் இருக்கும். அதன் பிறகு, அந்த அனுபவத்தின் வெளிப்பாடு மட்டுமே இருக்கும். மற்ற சப்தங்களும் காணாமல் போய்விடும்.''
கேள்விகள், குருவிடமிருந்து சான்றுகளைக் கேட்கும்; சந்தேகங்கள், அப்படியல்ல. அவை வெறும் சில குறிப்புகளை மட்டுமே கேட்கும்.
அர்ஜுனன், திறனையே கேள்வி கேட்டார். பிறகு, தம் சுய லாபத்தைப் பற்றிய கணக்கீடுகளை
நோக்கி நகர்ந்தார். இப்பொழுது, ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார். முதலில் இருந்தது எதிர்ப்பு, பிறகு அலட்சியம், இறுதியாக ஏற்றுக்கொள்ளுதல்.
உருவாக்கும் கண்ணி, கணக்கிடுவதிலிருந்து மாறுபட்டது. கடவுள் மட்டுமே உருவாக்க முடியும். யாராவது எதையாவது உருவாக்கினால், அந்த நேரத்தில் அவர்கள் தெய்விகத்தை அனுபவிக்கிறார்கள்.
அதனால்தான் வீர காலத்தில், கர்ப்பிணிகளை வணங்கும் வழக்கம் இருந்தது. அவர்களின் வெறும் தொடுதல் மூலமாகவே மக்கள் குணமடைவதாக நம்பப்பட்டது.
கட்டுமானப் பணியைப்பொறுத்தமட்டில், பொறியாளர்கள் நிறைய சம்பாதிப்பார்கள். ஆனாலும் கட்டிடக் கலைஞர்கள்தான் மன திருப்தியை அடைகிறார்கள். ஏனென்றால் கட்டிடக் கலைஞர்களே அங்குப் படைப்பாளிகள். உருவாக்கும் ஆற்றல் இல்லாவிட்டால், நாம் நம் வாழ்க்கையையே தவறவிடுகிறோம்.
இங்கு அர்ஜுனன் எல்லாவற்றையும் முடித்துவிட்டார். அவருடைய சுயலாபக்கணக்குகளும் முடிந்தன, கேள்விகளும் முடிந்தன. அவர், சந்தேகம் என்னும் நிலைக்கு இறங்கிவந்துவிட்டார். கேள்விகள் இருக்கும்போது, அவருடைய குரல் வித்தியாசமாக இருந்தது. கேள்விகள், குருவிடமிருந்து சான்றைக் கேட்கும்; சந்தேகங்கள்,
அப்படியல்ல. அவை வெறும் சில குறிப்புகளை மட்டுமே கேட்கும்.
அர்ஜுனன், தம் குருவை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார். அதனால்தான் இந்த அத்தியாயம் முழுவதும், அர்ஜுனன் அமைதியாக இருக்கிறார். அவர், குருவை உள் வாங்குவதற்குத் தயாராக இருக்கிறார். அவரை நோக்கி வீசப்படும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்.
நீங்களும் சந்தேகப்படலாம்
கேள்வி: அர்ஜுனன் அமைதியில் ஆழ்ந்ததாகச் சொல்கிறீர்கள். இன்னும் அவருக்குள் சந்தேகம் இருப்பதாகவும் சொல்கிறீர்கள். ஒருவர் தமக்கு இருப்பது சந்தேகமா அல்லது கேள்வியா என்று எப்படி வேறுபடுத்துவது ? நமக்குள் இருக்கும் சந்தேகங்களைக் கேள்விகள் என்றெண்ணி மறைத்தோமானால், அது இன்னும் அதிகமான குழப்பத்தை ஏற்படுத்தாதா?
நிச்சயமாக! அடக்குதல் ஒருபோதும் தீர்வாகாது. ஒருவரிடம் இருப்பது சந்தேகம் என்றால், அது தீர்த்துவைக்கப்படவேண்டும். ஒருவர் எப்படி சந்தேகத்திற்கும் கேள்விக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்வது ?
பெரும்பாலான நேரங்களில், நாம், மற்றவர்கள் நம்மிடம் சொல்வதைக் கவனிப்பதில்லை. அடுத்தவர் வாயைத்திறந்த கணமே, நாம் அடுத்து பேச்சை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து, பொறுமையின்றி, காத்துக்கொண்டிருப்போம். நாம் காத்துக்கொண்டிருக்கும்
அந்த பேச்சைத் தடுப்பதற்கும் மறுப்பதற்கும், நம்மைத் தயார்படுத்திக்கொள்வதற்கான நேரமாகத்தான் கவனிப்பது ஆகாது. அது, போருக்கான முன்னேற்பாடு.
நமக்குக் கேட்டலில் கவனம் இருக்க வேண்டுமானால், நம் எதிரில் இருப்பவரை மதிக்க மட்டுமே, அவர் என்ன சொல்கிறார் என்பதில் கவனம் செலுத்த முடியும். அவர்,
சொல்ல நினைப்பதற்கும் நாம் செவிசாய்க்க வேண்டும்.
நம்மிடம் சொல்வதற்கென்று, மதிப்பு மிக்க ஏதோ ஒன்றை தம்மிடம் வைத்திருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எதிரில் இருப்பவர் சொல்ல நினைக்கும் எதற்குமே எந்த மதிப்பும் இல்லை என்று நீங்கள் நம்பினால். பின்பு கவனிப்பதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இன்னும் அதிக உபயோகம் தரக்கூடிய ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள்.
மனம் மற்றும் உடலின் குறுக்கீடு இல்லாமல், அக்கறையோடு கவனித்தோமானால், சொல்லப்படும் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வோம். உள்வாங்குதல் நிகழ்ந்தால், சொல்லப்படுகிற கருத்தை
நீங்கள் சந்தேகப்படும்பொழுது, கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை நோக்கி எழுகிறீர்கள். கேள்விகேட்கும்பொழுது, கற்பிக்க வேண்டும் என்ற ஆவலோடு எழுகிறீர்கள்.
நாம் நமக்குள் எந்த எந்த ஒரு வன்முறையும் இருக்காது. அதனால் அங்கு எந்தக் கேள்விகளும் இருக்காது.
நீங்கள் உணர்ந்ததிலிருந்து ஏதோ ஒன்றைச் சொல்கிறார் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் அல்லது அவர் சொல்வதைத் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ளவேண்டும் ஆர்வமாக இருப்பீர்கள், மேலும் அவரின் புரிதலை, நோக்கத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். நீங்கள் அந்தக் கருத்தை
எடைபோட்டு, கண்டனத்தைத் தெரிவிக்கமாட்டீர்கள்.
நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை நோக்கி எழுகிறீர்கள். கேள்விகேட்கும்பொழுது, கற்பிக்க வேண்டும் என்ற ஆவலோடு எழுகிறீர்கள்.
நீங்கள் சந்தேகப்படும்போது, திறந்த மனத்துடன் இருக்கிறீர்கள்; கேள்விகேட்கும்போது, இறுகிய மனத்துடன் இருக்கிறீர்கள்.
நான் தியான வகுப்புகள் எடுக்க ஆரம்பித்த காலங்களில், அறையின் வெளியில் இருக்கும் ஒரு பலகையில், 'தயவுசெய்து உங்கள் காலணிகளையும் மனத்தையும் வெளியில் விட்டுவிட்டு வாருங்கள்' என்ற வாசகம் இருக்கும். உங்கள் முழு மனத்தையும் உள்ளே கொண்டு வரும்பொழுது, உங்கள் மனம் அறிவின் கர்வத்தினால் நிரம்பி வழியும்பொழுது, அங்கு நிகழ்வது பட்டறிவின் வன்முறையே! அது, எதையுமே உள்ளே நுழைய அனுமதிக்காது. பிறகு தியான வகுப்பின் உள்ளே வருவதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?
என் முன்னால் திறந்த மனத்துடன் அமர்ந்திருக்கும்பொழுது, என் சக்தியே உங்கள் கேள்விகளை உணர்ந்துகொள்ளும். நீங்கள் விழிப்புடனிருந்தால், பதிலைக் காண்பீர்கள், உங்கள் மனம் மூடியிருந்தால், நான் சொல்வதில் கவனம் செலுத்தாமல், கேள்விகளைத் தயார்செய்து கொண்டிருப்பீர்கள்.
நீங்கள் உண்மையாகவே கவனிக்கும்போது, கேள்விகள் கரைந்துவிடும். நான் சொல்வதைப் பொய்யென நிரூபிக்கும் வன்முறை இல்லாமல், நான் என்ன சொல்கிறேன், எதைச் சொல்கிறேன் என்பதைக் கற்பதில் மட்டுமே ஆர்வம் அதிகரிக்கும். நான் சொன்னதை நீங்கள் ஜீரணித்துவிட்டீர்கள். இன்னும் அதிகம் வேண்டும் என்ற பசியில் இருக்கிறீர்கள்.
உங்களுக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. இந்தச் சந்தேகங்கள் உங்கள் உள் உலகில் இருந்து எழுவதுபோல் தெரியும். ஸத்யம் என்னவென்றால், இவற்றுக்கான பதில்களும் உங்களுக்கு உள்ளேயே இருக்கின்றன. நீங்கள் வெறுமனே தேடினால் போதும், அவ்வளவுதான். உங்கள் எல்லா கேள்விகளுக்குமான விடைகளும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.