KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/ஆழ்ந்த தூக்கம் -Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

ஆழ்ந்த தூக்கம் -

நம்முடைய மரண செயல்முறைக்கான ஒத்திகையே

அழியா ஆன்மாவானது, ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்குச் செல்லும் போது, அடிப்படையில் புதிய உடலையெடுத்து, கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தொடுவுணர்வுடன், தன் புது மன அமைப்பை அனுபவிக்கிறது.

உங்களுடைய அடிப்படையில்தான், உங்களுடைய உடலையே உருவாக்குகிறீர்கள் என்கிற உண்மையை ஆன்மா வெளிப்படுத்துகிறது.

நம்முடைய காரண சரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களைப் பொறுத்தே, நம்முடைய புலன்களை நாம் உருவாக்குகிறோம். உடற்கூறுகளுக்கும் மனத்திற்கும் இடையேயான தொடர்பு சாஸ்த்ரத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்நூலைக் கற்றுத்தேர்ந்தவர்கள், நம்முடைய உடற்கூறுகளை வைத்தே, நம்முடைய மன அமைப்பைக் கணித்துவிடுவர்.

நம்முடைய காரண சரீரத்தில் பதிந்திருக்கும் ஸம்ஸ்காரங்களைப் பொறுத்தே, நம்முடைய புலன்களை அதாவது, நம்முடைய மன அமைப்பைப் பொறுத்தே, ஆன்மாவானது புலன்களைத் தேர்வுசெய்கிறது என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

இது, நாம் இன்னொரு உடல் எடுக்கும்போது மட்டும் நடப்பதல்ல. ஒவ்வொரு நாளும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து நாம் வெளிவரும்போதும், நம்முடைய புலன்கள் மீண்டும் பிறக்கின்றன. அதனால், நம்முடைய மன அமைப்பினை மாற்றுவதாலேயே, சிறிதுகாலத்திலேயே நம்முடைய முக அமைப்பை மாற்றிவிட முடியும்.

உடல் முழுதும் பரவியிருக்கிற புத்திசாலித்தனத்தைத்தான் மனஸ் என்கிறோம் ! நம்முடைய ஒவ்வொரு திசுவிலும் இந்த புத்திசாலித்தனம் உறைந்துள்ளது. ஒவ்வொரு திசுவும், மரபுசார்ந்த புத்திசாலித்தனத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலும் மனமும் தனித்தனி அமைப்பு அல்ல. அது உடல் - மனம் அல்லது மன - உடல் என்கிற ஒரே அமைப்புதான்.

இந்த உடல் - மன அமைப்பிற்குள், ஒவ்வொரு வினாடியும், ஆயிரமாயிரம் திசுக்கள் இறக்கின்றன, புதிதாய் ஆயிரமாயிரம் திசுக்கள் பிறக்கின்றன என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இத்தொடர் செயல்முறை, இயற்கை அல்லது பிரபஞ்ச புத்திசாலித்தனத்தின் ஆணைப்படிதான் நடக்கிறது. இது நம்மால் நடக்கவில்லை, நம்மையும் மீறி நடக்கிற ஒரு விஷயம்.

இந்தச் வருடத்திற்குள்ளாகவே, உடலின் ஒவ்வொரு பாகமும், ஒவ்வொரு திசுவும் புதுப்பிக்கப்படுகின்றன. இன்று இருக்கும் நமது இந்த உடலும், ஒரு வருடத்திற்கு முன்னால் இருந்த நமது உடலும் ஒன்றல்ல. அதேபோல இன்று இருக்கும் நமது உடலும், ஒரு வருடத்திற்குப் பிறகு இருக்கப்போகும் நமது உடலும் ஒன்றாக இருக்காது. இது வெறும் கட்டுக்கதையல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை

உடலும் மனமும் தனித்தனி அமைப்பு அல்ல. அது உடல் - மனம் அல்லது மன - உடல் என்கிற ஒரே அமைப்புதான்.

பின் ஏன் நம் நடத்தை மட்டும் பல வருடங்களாக ஒரேமாதிரியாகவே உள்ளது? அதே திசுக்கள் நம் உடலில் இல்லாவிட்டாலும்கூட, ஏன் அதே நோய்கள் தொடர்ந்து நீடித்து நாம் தொந்தரவுக்குள்ளாகிறோம் ?

ஒவ்வொரு திசு இறக்கும்போதும், புதிதாய்ப் பிறக்கும் திசுவும் பின்பற்றும்படியாகச் சில பதிவுகளை விட்டுச்செல்கின்றன. அவைதான் நம்முடைய ஸம்ஸ்காரங்கள்.

நம்முடைய உடல் - மன அமைப்பே முழுமையாக மாறிவிட்ட பின்னருங்கூட, அதே உடல் - மன அமைப்பு தொடர்வதை, இந்த ஸம்ஸ்காரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஸம்ஸ்காரங்கள், உடல் - மன அமைப்பைவிட சக்திவாய்ந்தவை. இவையே எல்லா முடிவுகளையும் எடுக்கின்றன, அதன்படி நம்மைச் செலுத்தவும் செய்கின்றன.

ஒவ்வொரு நாளும் நாம் ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்வது, நம்முடைய மரண செயல்முறைக்கான ஒத்திகையே. நாம் ஒவ்வொரு நாளும் இறந்து மீண்டும் பிறக்கிறோம். நாம் அனுமதித்தால், நம்முடைய ஸூக்ஷ்ம சரீரம் ஸ்தூல சரீரத்தை விட்டு வெளியேறி, சக்தியூட்டப்பட்டு மீண்டும் வருகிறது. நாள்தோறும் இயல்பாகவே நடக்கும் இந்தப் புத்துணர்வாக்கல், இந்தச் சக்தியூட்டல் செயல்முறையை எந்தளவிற்குப் பயனுள்ளதாக்குவது என்பது நம் கையில்தான் இருக்கிறது.