கடவுள் என்பது ஒரு கருத்து அல்ல; அவர் நிதர்சனம்
நாம் வளர்க்கப்பட்ட விதத்தைப் பொறுத்தும் நம்முடைய உள்வாங்கும் திறனைப் பொறுத்துமே, நாம் புருஷ்கத்துணைம் பல வகைகளில் பார்க்கிறோம்.
ஆறு முகங்களையும் பன்னிரண்டு கரங்களையும் உடைய கார்த்திகேயனாக சிலரும், நான்கு கரங்கள் கொண்ட பாலாஜியாக சிலரும், மயிலிறகால் அலங்கரிக்கப்பட்ட சிரசும் இரண்டு கரங்களுடன் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணனாக சிலரும் பார்க்கிறோம். நமக்கு எந்த வகையில் பார்க்க சௌகரியமாக இருக்கிறதோ, அந்த உருவத்தில் பார்க்கிறோம், அப்படியானால்தான் நாம் அவரை அடைய முடியும்.
மிகச்சிறந்த பக்திமானுமாகிய ஒருவர், சிவனை இடைவிடாது பல பல வருடங்களாக வழிபட்டுக் கொண்டிருந்தார். பல வருடங்களாக வழிபட்டும், சிவன் தரிசனம் அளிக்கவில்லை. ஒருநாள் அவருக்கு, தாம் இன்னும் அதிக நாள் வாழப்போவதில்லை என்ற பயம் வந்தது. இறப்பதற்கு முன் எப்படியேனும் இறைதரிசனத்தைப் பெற விரும்பினார். சிவனைவிட விஷ்ணு கருணை மிக்கவர் என்று அவர்
கேள்விப்பட்டதால், சிவனை வழிபடுவதை நிறுத்திவிட்டு, விஷ்ணுவை வழிபட முடிவெடுத்தார்.
தாம் இதுநாள்வரை வழிபட்டு வந்த சிவனின் சிலையை வெளியே தூக்கியெறிய, அவருடைய இதயம் ஒப்பவில்லை, அவரது இதயத்தின் இதயத்திற்குள் இன்னமும் அவர் சிவனின் பக்தராகவே இருந்தார். ஆகையால் அதனையெடுத்து பரணில் வைத்துவிட்டு, ஒரு அழகான விஷ்ணு சிலையை வைத்து வழிபட ஆரம்பித்தார். விஷ்ணு சிலைக்கு முன்பாக ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்துவிட்டு, பூஜையைத் தொடங்கினார்.
அந்த ஊதுபத்திப் புகை விஷ்ணு சிலைக்குப் போகாமல், பரணில்
இருந்த சிவனின் சிலைக்கு சென்றதைப் பார்த்து மிகவும் கோபமானார். உடனே அவர் எழுந்து சென்று, பரணில் இருந்த சி வன் சிலையின் மூக்கை மூடியபடியே, ''இது உனக்கான புகை கிடையாது, இனிமேலும் நான் உன்னை வழிபடப்போவதில்லை, " என்றார்.
இவ்வாறு செய்த அந்த வினாடியே அவர் சிவனின் இருப்பை அங்கு உணர்ந்தார், அவருக்கு சிவ தரிசனம் கிடைத்தது. உடனே அவர் மனமுருகிக் கதறியழ ஆரம்பித்துவிட்டார்.
கடவுளை நமக்கு எந்த வகையில் பார்க்க சௌகரியமாக இருக்கிறதோ அந்த உருவத்தில் நாம் அவரைப் பார்க்கிறோம், அப்படியானால்கான் நாம் அவரை அடைய முடியும்.
பல வருடங்களாக உங்களை முறைப்படி வழிபட்டுவந்தேன். அப்போதெல்லாம் நீங்கள் எனக்குக் காட்சி கொடுக்கவில்லை. ஆனால், இப்போது நான் உங்களை வழிபடாமல் தூரவிலக்கி வைத்தது மட்டுமல்லாமல், உங்கள் மூக்கை மூடி அவமதித்தேன். இருந்தும் நீங்கள் காட்சி தந்தீர்கள். இது ஏன்?'' என்று இறைஞ்சி வினவினார்.
அதற்கு சிவன் சொல்கிறார், 'இதுநாள்வரை உனக்கு நான் ஒரு கருத்தாகவே தெரிந்தேன். இன்றுதான் நீ என்னை ஸக்யமாக உணர்ந்தாய், அதனால்தான் என் மூக்கை மூடினாய்!''
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, இறைவன் என்பது ஒரு கருத்து, ஒரு கோட்பாடு, அவ்வளவுதான். நம்முடைய பயத்தையும் கவலையையும் மறைப்பதற்கும், கருத்துகளையும் வடிவமைத்து, நாம் அறிவாளி என்பதை நிரூபிப்பதற்கும் கிடைத்த ஒரு கோட்பாடு.
அதிகாரத்துவமிக்க உரிமையோடு கிருஷ்ணர், 'நானே அந்த புருஷாத்தமன்' என்கிறார். அதனால் தான் கீதை நம்பகத்தன்மையான வேத நூலாக இருக்கிறது.
கிரூஷ்ணா, ப்ரூற்ம, புருஷாத்தம, பரப்ரூற்ம, ப்ரக்ரு 'தி என்று எந்தப் பெயரைக்கொண்டு நாம் அழைத்தாலும், அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது? நாம் எந்தப் பெயரைக்கொண்டு அழைத்தாலும் நம் அனைவரையும் இயக்கும் மேலான இறைச்க்தி அவரே.
அதிகாரத்துவம்மிக்க THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM, 'நானே அந்த புருஷாத்தமன்' என்கிறார். அதனால்தான் கீதை, நம்பகத்தன்மையான வேத நூலாக இருக்கிறது.
வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஸ்தீயங்களுக்காகவோ, அல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் ஞானக் கருத்துக்களுக்காகவோ நாம் அதைக் கொண்டாடவில்லை.
கிருஷ்ணர் என்ற ஒரு தனிமனிதா், ''நானே எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறேன்,'' என்று துணிச்சலுடன் பிரகடனப்படுத்துவதுதான் கீதையைக் கொண்டாடக் காரணமாக இருக்கிறது. இதுவே ஒரு நிலையான அத்ய நூலாக வரையறுக்கிறது. அந்த புருஷோத்தமன், பரப்ரூற்ம கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும் !
இப்போது கிருஷ்ணர், பிரபஞ்ச கூட்டுவிழிப்புணர்வாக விளங்கும் தம்முடைய உண்மையான பிரதிநிதித்துவத்தைப் பற்றிய உயா ஸத்யங்களை முன்வைக்கிறார்.