சிரத்தை - ஜீவன்மக்திக்கான சாதனம்
கிருஷ்ணர் உபயோகிக்கிறார். அவர் இந்த வார்த்தையின்மூலம் என்ன சொல்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
யோகா என்பது இன்றைய மனிதர்களால், ஒரு சொகுசு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். அதில், 'உடனடி ஜீவன்முக்திக்கு - குடப்பர் டீலக்ஸ் குண்டலினி யோகா 'என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.
வகுப்புகளில், சூப்பர் டீலக்ஸ் குண்டலினி யோகங்களைப்பற்றிய குறிப்புகளைக் கண்டேன். ஜீவன்முக்திக்கென்று எந்த ஒரு வாகமும், நமது வேத பாரம்பரியத்தில் குறிப்பிடவில்லை.
யோகா என்பது தனி உணர்வான ஆன்மாவிற்கும், பிரபஞ்ச விழிப்புணர்வான ப்ரூமத்திற்குமான இணைப்பு.
இந்த இணைப்பைப் பற்றிய விழிப்புணர்வு அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற விழிப்புணர்வு நம்மை விடுதலையடையச் செய்யும். இந்தப் புரிதல் உடனடியாக நடக்கும். ஆனாலும், இதை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் சாதனா முறைகள், வரையறுக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறைகளைக் கொண்டதாக இருக்கின்றன. அவற்றை சீர்த்தையுடன்செய்யும் மனிதனுக்கு மட்டுமே 'ஜீவன்முக்தி' சாத்தியமாகிறது.
யோகா என்பது குனி உணர்வான ஆன்மாவிற்கும் பிரபஞ்ச விழ்ப்புணர்வான ப்ரூற்மத்திற்குமான இணைப்பு. பழங்கால இந்தியாவின் மிகச் சிறந்த அறிவியலாளரும் ஞானியுமான பதஞ்சலி, தம்முடைய வயாக ஸூத்ரத்தில் வாகம் பற்றிச் சொல்லியிருக்கிறார்.
'நாம் கடவுள்' என்ற விழிப்புணர்வைப் பெறுவதற்கும், கடவுளுடனான நமது இணைப்பை அறிவதற்கும் பாதைகளை நமக்குக் காட்டுகிறார். இந்த எட்டுப் பாதைகள் தொடர்ந்துவரும் எட்டுப்படிகள் அல்ல. அவை வெவ்வேறு பகுதிகள்.
அதில் முதல் பாதை, யம -. ஆன்மிக நடத்தை விதிகளைப் பற்றியது. இதில் ஐந்து விதிகள் உள்ளன. 1. ஸ்தீய - எண்ணம், சொல் மற்றும் செயல்களில் உண்மை. 2. அஹிம்ஸா - எண்ணம், சொல் மற்றும் செயல்களில் கொல்லாமையைக் கடைபிடிப்பது. 3. ஆஸ்ரேய - திருடாமை. 4. அமரிக்ரூர் - எளிமையான வாழ்க்கையை வாழ்வது. 5. பரவர்மசாய - இயல்பு நிலையில் வாழ்வது.
ஜீவாக்மாவும் பரமாக்மாவும் ஒன்றே என்ற விழிப்பணர்வ நம்மை விடுதலையடையச் செய்யும்.
இந்து பாரம்பரியத்தில், ஆன்மிகத் தேடுதல் உடைய ஒருவர், ஸந்நியாஸ வாழ்க்கைக்குள் நுழைவற்கான தீட்சையைப் பெறும்போது, 'ஆன்மிகத்தின் இந்த ஐந்து விதிகளையும் நான் சிரத்தையுடன் கடைபிடிப்பேன்' என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும்; அதைத் தீவிரமாகக் கடைபிடிக்கவும் வேண்டும்.
நான் ஒவ்வொரு வருடமும் பக்தர்களுடன், இமயமலையில் இருக்கும் ஆன்மிக ஸ்தலங்களுக்கு, சார்தாம் யாத்திரை செல்வேன். முதல் புனித கங்கைக்கரையில், ஒவ்வொருவரும் இந்த ஐந்து விதிகளையும் உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். அந்த ஆன்மிகப் பயணம் முழுவதும் அவர்கள், இந்த விதிகளை சீர்த்தையுடன் கடைபிடிக்கும் ஆன்மிக சாதகர்களாக இருப்பார்கள்.
இரண்டாவது பாதை, ரியம் - உடலளவிலும் மனதளவிலும் ஆன்ம அளவிலும் ஒருவர், தூய்மையாகவும் மேன்மையாகவும் தம்மை உயர்த்திக்கொள்வதற்கான தினசரி பயிற்சிகளை உள்ளடக்கியது.
மூன்றாவது பாதை, ஆஸன. ஆஸனம் என்பது தியானத்திற்கு சௌகரியமான நம் உடலின் நிலை, அதாவது நாம் அமரும் முறை. இன்றையை காலக்கட்டத்தில் இந்த ஆஸனங்களும் யோகாவும் ஒன்றாகிவிட்டது.
நான்காவது பாதை, ப்ராணாயாமம் - சுவாசத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது. இது உடலையும் - மனத்தையும் உள்முகப்படுத்த உதவுகிறது.
ஐந்தாவது பாதை, பிரத்யம்ஹரா - புலன்களிடமிருந்தும் புலனின்பப் பொருள்களிடமிருந்தும் புலனின்பங்களிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்வது. இதுவும் நம்மை உள்முகப்படுத்த உதவும்.
ஆறாவது பாதை தாரணா. மனத்தைக் கட்டுப்படுத்த, தேர்ந்தெடுத்த ஒரு பொருளின் மீது நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவது.
ஆன்மிக முன்னேற்றத்திற்கும், 'நாம் இந்தப் பிரபஞ்ச இருப்பின் ஒரு பாகமே' என்பதை உணர்வதற்கும் தியானமே சிறந்த பாதை.
எப்போது ஒருவரால், ஒரு பொருளின் மீது தம் கவனத்தை ஒருமுகப்படுத்த முடிகிறதோ, அப்போது அவரது மனம் கூர்அறிவைப் பெறுகிறது. அந்த நிலையை அடையும்பொழுது, அதே கவனத்தை எந்தவொரு பொருளின் மீதும் அவரால் செலுத்த முடியும்.
ஏழாவது பாதை, தியானம் - தம்முடைய இருப்புத்தன்மையின் மீது தியானிப்பது.
எட்டாவது மற்றும் கடைசிப்பாதை ஸமாதி. நம்முள் முழு விழிப்புணர்வு நிகழ்ந்து, முழுமையான இணைப்பு நிலையினை இது குறிக்கிறது.
தொடர்ந்து சிரத்தையுடன் இந்த யோக முறைகளைக் கடைபிடிக்கும் ஒருவர், 'இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் தாம்' என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறார்.
மிக ஆழமான ஈடுபாடுகொண்ட சில சாதகர்கள், இடைப்பட்ட பாதைகள் எதிலும் பயணிக்காமலேயே ஸமாதி அனுபவத்தைப் பெறுகிறார்கள். இது மிகவும் அரிதாக நடப்பது.
என்னைப் பொறுத்தவரை, இன்றைய நவீன உலகத்தில், ஆன்மிக முன்னேற்றத்திற்கும், 'நாம் இந்தப் பிரபஞ்ச இருப்பின் ஒரு பாகமே' என்பதை உணர்வதற்கும் தியானமே சிறந்த பாதை என்று கருதுகிறேன்.
இருளும் ஒரு சக்தீயே
விழிப்புணர்வு ஏற்படாதவரை, ஒருவர் என்னதான் முயற்சிசெய்தாலும் தம்மை அடைய முடியாது என்கிறார் கிருஷ்ணர். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் இப்போது பேசிக்கொண்டிருப்பது விழிப்பைப்பற்றி, அடைவதைப் பற்றி அல்ல.
ஸ்தீயம் என்னவென்றால், நம்முடைய தனி இருப்பானது, இந்தப் பிரபஞ்ச இருப்பின் ஒரு பாகமே. நாம் இந்தப் பிரபஞ்ச இருப்பைச் சென்றடைய வேண்டியதில்லை. நமக்குத் தேவை, அதைப் பற்றிய விழிப்பே!
இந்த ஸ்தீயத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதில்லை. 'அது இருக்கிறது' என்ற இந்த ஸ்தீயத்தை உணரவேண்டும் அவ்வளவுதான்.
தனிப்பட்ட நம்முடைய அஹங்காரத்தினால், கண்கள் கட்டப்பட்டிருப்பதால், 'நாம் இந்தக் கூட்டு விழிப்புணா்வின் ஒரு பாகமே' என்ற ஸ்தீயத்தை மறந்துவிட்டோம்.
தங்களை உணர்வதற்கு, மாயை என்னும் திரையை விலக்கி, மயக்கத்தை விட்டொழிக்கிறார்கள்.
இந்தத் திரையை விலக்குவதற்கான ஒரு நுட்பமே, ஒரு பாதையே தியானம். தியானம் ஒருவரை தமக்குள் மேலும் மேலும் ஆழமாகச் செல்லவைக்கிறது; விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஒளி என்பது விழிப்புணர்வு. ஒளி என்பது வாழ்வின் ஆதாரம். பைபிளில் 'அங்கு ஒளி இருந்தது. அந்த ஒளி இருக்கட்டும்!' என்ற வாசகம் இருக்கிறது.
ஒளி, கடவுளால் இந்தப் பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் படைப்புக்களில் ஒன்று. குரியனின் ஒளியும் வெப்பமும் இல்லாமல், இப்பிரபஞ்ச வாழ்வு சாத்தியமற்றது என்ற உண்மை நமக்குத் தெரியும். ஒவ்வொரு பொருளும் ஜீவனும், சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளியிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் சக்தியைப் பெற்றுத் தம்மை மையமாகக்கொண்டுதான் சுழல்கின்றன.
குரியன், இருளைப் போக்கும் சக்தி. கிருஷ்ணர், 'சூரியனையும் சந்திரனையும் நம் வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரமான நெருப்பினையும் இந்தப் பிரபஞ்சத்தையும் படைத்தது தாமே' என்று மட்டும் சொல்லவில்லை, 'இருளைப் போக்குவதும் தாமே' என்றும் சொல்கிறார்.
கிருஷ்ணர், இருளை அழிக்கும் குரு. குரூ என்றுதான் பொருள். குரியன், சந்திரன் மற்றும் நெருப்பைப்போன்று ஒரு தலைசிறந்த குருவாக இருந்து, நம்மை விழிப்புணர்வை நோக்கி அழைத்துச்செல்கிறார்.
கிருஷ்ணர் நம்முடைய ஸம்ஸ்காரங்களை அழிப்பவர். ஸம்ஸ்காரங்கள் என்பது நம்முடைய விழிப்பற்ற தன்மையின் படைப்பு. இருளுக்கு 'நேர்மறையான இருப்பு' கிடையாது. அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முடியாது. ஆனால், இருளை ஒளியைக்கொண்டு அழிக்க முடியும்.
இருப்பு ஒளியில்லாதவரையில்தான் இருள் இருக்க முடியும். இருளை நாம் உருவாக்க முடியாது; ஏதோ ஒன்றின் இல்லாமையே இருள். எப்போது ஒளி வருகிறதோ அப்போது இருள் அழிந்தே தீரும். விழிப்புணர்வின் வருகையினால் இருள் அகல்கிறது.
கண்பார்வை இல்லாத ஒருவர், இருளால் பாதிக்கப்படுவதில்லை. இருளைப்பார்த்து அவர் பயப்படுவதில்லை. குருடருக்கு இருள்தான் அவருடைய இயல்பு நிலை. ஒரு குருடா், தாம் இருளில் ஒரு பேயையோ அல்லது ஆவியையோ பார்த்ததாகச் சொல்வதில்லை. இருளில்தான் அவர் எப்போதுமே இருக்கிறார்.
உண்மையிலேயே துணிவும் தைரியமும் உடைய ஒருவர்கூட, இருளினால் பாதிக்கப்படுவதில்லை. எதைப்பற்றியும் பயப்படாத ஒருவருக்கு தம்முடைய ஆணவம் அழியும்போதும், அடையாளம் அழியும்போதும், மரணத்தின்போதும்கூட பயம் இருக்காது. அவருக்கு இருள், பயத்தை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது. அவரால் ஒளியையும் இருளையும், எந்தவொரு ஆசையும் அச்சமும் இல்லாமல் கையாள முடியும்.
இந்த இரண்டு வகையான மனிதர்களைத் தவிர, அனைவருக்குமே இருள் ஒரு பிரச்சினையாகவும் பயம்தரக்கூடியதாகவுமே இருக்கிறது. நம்முடைய ஆனந்த ஸ்புரண தியான முகாமிலும். நித்யானந்த ஸ்புரண தியான முகாமிலும் பங்கேற்பாளர்கள் இருளைத் தியானிப்பதற்கு வழிநடத்தப்படுவார்கள். இது மிகுந்த சக்தியளிக்கக்கூடிய தியானம். உங்களுக்கு இது ஆச்சரியமாகக்கூட இருக்கலாம், ஆனால் இருள் என்பது சக்தி.