KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/பாவம் தொடர்வதில்லை மனப்பான்மையே தொடர்கிறதுSign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

பாவம் தொடர்வதில்லை மனப்பான்மையே தொடர்கிறது

காற்று மணத்தை எடுத்துச்செல்வதுபோல், உடல் - மனத்தைத் தாங்கி இந்தப் பொருள்சார்ந்த உலகில் வாழும் ஆன்மா, ஒரு உடலிலிருந்து வேறொரு உடலுக்குச் செல்லும்பொழுது, இந்த ஸம்ஸ்காரங்களையும் தன்கூடவே எடுத்துச்செல்கிறது.

ஒரு உடலில் இருக்கும் ஸம்ஸ்காரங்கள் அந்த உடலை விட்டுச் சென்றவுடன்,

வேறொரு ரு உடலில் தஞ்சமடைகிறது. கிருஷ்ணர், இவ்விதம் தொடர்ந்து நடக்கும் ஸம்ஸ்காரங்களின் விஷச் சுழற்சியை ஸம்ஸாரம் என்று குறிப்பிடுகிறார்.

கிருஷ்ணர், 'இவற்றை எடுத்துக்கொண்டு' என்று சொல்கிறார். 'இவற்றை' என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார்? முந்தைய ஸ்லோகத்தில் கிருஷ்ணார், மனத்தையும் சேர்த்து ஆறு புலன்களைப் பற்றிப் பேசினார். அதைத்தான் இங்குக் குறிப்பிடுகிறார்.

காற்றானது நறுமணத்தை எடுத்துச்செல்வதுபோல், ஆன்மா ஒரு உடலைவிட்டு வேறொரு உட்டலுக்குச் செல்லும்பொழுது, ஸம்ஸ்காரங்களை எடுத்துச் செல்கிறது.

காற்றானது நறுமணத்தை எடுத்துச்செல்வதுபோல், ஆன்மா ஆரு உடலைவிட்டு வேறொரு உடலுக்குச் செல்லும்பொழுது, ஐந்து புலன்களுடன் ஆறாவதாக மனத்தையும் சேர்த்து எடுத்துச்செல்கிறது.

காற்று எப்படி நறுமணத்தை எடுத்துச்செல்கிறதோ அதேபோல், விழிப்புணர்வுநிலை ஸம்ஸ்காரங்களை, ஒரு எடுத்துச்செல்கிறது.

கிருஷ்ணர், மக்கள் அடிக்கடி கேட்கும், ''ஒரு பிறவியிலிருந்து மற்றொரு பிறவிக்கு ஒருவருடைய பாவங்கள் பின்தொடர்ந்து வருகின்றனவா,'' என்ற பாவங்களைப் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கிறார். பாவங்கள் ஒருபோதும் நம்மைத் தொடர்வதில்லை. அதன் பதிவுகள்தான் நம்மோடு பயணிக்கின்றன.

உதாரணமாக, ஒரு மனிதர் நூறு கொலைகள் செய்கிறார் என்றால், அந்த எண்ணிக்கை தொடராது, ஆனால் அந்த வன்முறை என்ற அடிப்படை மன அமைப்பு அவரைத் தொடரும். வெறும் அந்த மன அமைப்புத்தான் எடுத்துச்செல்லப்படுகிறது. அது அவரைத் தொந்தரவு செய்யும்.

காமா என்னும் கருத்து, பல நேரங்களில், நம்முடைய எதிர்மறை செயல்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு முகமூடியே. 'இது நம் காமா', 'இது நம் விதி', 'இது நம் தலையெழுத்து, நாம் என்ன செய்ய முடியும் ?', 'என்ன நடக்க வேண்டும் என்று இருந்ததோ, அதுவே நடந்தது' என்று சொல்லியே, நம்முடைய எதிர்மறை செயல்களை நியாயப்படுத்துகிறோம். இது வெறும் கற்பனையே.