KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/இருண்ட காட்டை, ஒரு சிறு விளக்கு ஒறலம் ஆராய முடியுமா?Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

இருண்ட காட்டை, ஒரு சிறு விளக்கு ஒறலம் ஆராய முடியுமா?

வியாஸ பகவானின் புதல்வரும் மாமுனிவரும் இளைஞருமான சுகப்பிரம்மா், தம்மைவிட வயதில் மூத்த மாமூனிவர்களுக்கு, பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை, குறிப்பாக கிருஷ்ணரின் அவதாரத்தை விளக்கும் ஸ்ரீமத் பாகவத புராணத்தைச் சொல்கிறார்.

பாகவதக் கதையைச் சொல்லி முடித்தவுடன், அங்கு கூடியிருந்த ரிஷ்களுள் ஒருவர் கண்ணீர் கசிய, சுகப்பிரம்மரின் பாதத்தில் விழுந்தார். அவர் உணர்ச்சி பொங்க, "தயவுசெய்து இவற்றை எழுத்தில் வடித்துவிடாதீா்கள். எழுத்துக்களில் வடிக்கும்பொழுது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஸ்த்யத்தின் ஆழமும், மேலான அழகும் தொலைந்துவிடும். பாகவதக் கதையை நீங்கள் விவரிக்கும்போது நிகழ்ந்த சக்தி ஒட்டத்தையும், வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த உயிர்ப்பையும், நீங்கள் சொல்வதை நேரில் கவனித்ததன் மூலம் எங்கள் ஆன்மா அடைந்த அனுபவத்தையும், ஒருவர் புத்தகத்தைப் படிப்பதால் அடைந்துவிட முடியாது! இங்கு என்ன நடந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. குருவின் நேரடி உபதேசத்தில் நிறைந்திருக்கும் அத்யத்தையும், அதன் சக்தியையும் புத்தக வார்த்தைகள் முழுவதுமாகக் குறைத்துவிடும்,'' என்றார்.

சுகர், ஒப்புக்கொள்கிறேன். நாம் இதைப் புத்தகமாக எழுதி வைக்க வேண்டும். இதிலுள்ள வார்த்தைகள், படிப்போரின் சிறந்த ஆதாரமாகவும், உந்துசக்தியாகவும் அமையும். இந்த வார்த்தைகளிலுள்ள லக்யத்தை அனுபவமாகப் பெற அவர்களைத் தூண்டும்!' என்று விளக்கினார்.

ஸத்யம் என்பது உருவகம். அது ஒரு தகவல் அல்ல. அது காலத்தையும் இடத்தையும் தாண்டியது.

தகவல்கள், சரித்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட கடந்தகால நிகழ்ச்சிகளின் ஒரு காலஅட்டவணை.

மேற்கத்திய மக்கள், எப்போதுமே தகவல்கள், காலஅட்டவணை, சரித்திரக் குறிப்பு மற்றும் ஏதாவது ஒருவகையில் நிரூபிக்கக்கூடிய ஒன்றின்மேல்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அறிவியலைப் பட்டறிவின் மூலமே நிரூபிக்க வேண்டும். எந்த விஷயத்தையும் உலகத்திற்குத் தருவதற்குமுன், அவர்கள் அதைத் தர்க்க ரீதியாக நிரூபித்தாக வேண்டும்.

ஆனால் கிழக்கத்திய மக்களின் கவனம் ஸத்யத்தின் மேல் குவிந்துள்ளது. ஸ்கீயம் என்பது உருவகம். அது ஒரு தகவல் அல்ல. அது காலத்தையும் இடத்தையும் தாண்டியது. நேரடியான தர்க்கத்தினால் நிரூபிக்கபட முடியாதது. தர்க்க ரீதியாக லத்யத்தை நிரூபிக்க முடியுமென்றால், தா்க்கம் ஸத்யத்தைவிட உயர்ந்ததாக இருக்க வேண்டும். நல்லவேளையாக, அதற்கான வாய்ப்பே இல்லை.

பகவான் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் வாழ்வைப்பற்றி விவரிக்கும் இராமாயண இதிகாசத்தில், அரக்கா்களின் அரசனான இராவணன், இராமரின் மனைவி சீதையைக் கடத்திச்சென்றுவிடுகிறான். இராமர், சீதையை மீட்க வன இராஜ்ஜியமான கிஷ்கிந்தையில் வாழ்ந்த வானரங்களின் உதவியை நாடுகிறார். இந்த இராஜ்ஜியத்தை வானர சகோதரர்களுள் ஒருவரான சுக்ரீவன், அனுமனின் உதவியுடன் ஆண்டுவந்தார்.

வால்மீகி, வானரங்களின் தொகையைச் சொல்கிறார். உண்மையில் பார்த்தோமானால், கிஷ்கிந்தையில் அத்தனை லட்சம் குரங்குகள் இருப்பதற்கான இடமே இல்லை. அவர், ஸ்தீயத்தின் அடிப்படையில் இந்த மிகப்பெரிய எண்ணிக்கையை உருவகப்படுத்தப்பட்ட லத்யுமே. அவர், இந்த எண்ணிக்கையின் மூலம், வானரங்களின் வலிமையின் அளவைச் சொல்கிறார். அவர் எந்த வலிமையைப் பற்றிப் பேசுகிறாரோ, அதை எண்ணிக்கையாகச் சொல்கிறார்.

வால்மீகியின் கவனம் ஸ்த்யும் சம்பந்தப்பட்டது. அவர், தாம் குறிப்பிடும் எண்ணிக்கையின் மூலம், வானரவீரர்களின் எண்ணிக்கையைச் சொல்ல வரவில்லை, அவர்களின் சக்தியைப் பற்றிச் சொல்கிறார்.

வால்மீகியின் கவனம், உண்மையைச் சொல்வதைவிட, வலிமையின் அளவைப் பற்றிய லத்யத்தைச் சொல்வதில் இருந்தது.

விஞ்ஞானம், அளவிட்டுக் காட்டுவதையுமே விரும்புகிறது. அதற்காக, அறிவியலால் நிரூபிக்கப்படாததும் அளவிடமுடியாததும் ஸ்தீயமில்லை என்றாகிவிடாது.

நியூட்டன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பதான் கண்டுபிடித்தார். ஆனால் புவிஈர்ப்புவிசையானது, ஆரம்பத்திலிருந்து செயல்படுகிறது. அதன் இருப்புநிலை, பிரபஞ்சத்தில் இருந்து வருகிறது. இல்லாவிட்டால், சூரியனும் கோள்களும் இப்போது நகர்ந்து கொண்டிருப்பதுபோல் முன்பு நகர்ந்திருக்க முடியாது. ஆனால் சமூகமும், சில மதங்களும் இந்த உண்மையை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.

பூமி, எப்போதுமே உருண்டையாகத்தான் இருக்கிறது. அதுதான் ஸத்யும். இருந்தாலும், இந்த ஸதீயத்தை மக்கள் முன்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தக் கசப்பான விவாதத்தில், பல மக்கள் கொல்லப்பட்டார்கள். இறுதியாக, உடன்படிக்கைக்கு வந்தார்கள்.

விஞ்ஞானம் வரையறுக்கப்பட்டுள்ளது. இது, ஒரு அடர்ந்த, இருண்ட காட்டை ஒரு சிறு விளக்கு மூலம் ஆராய்வது போன்றது.

சிறு விளக்கு, தன் முன்னே சிலஅடி தூரத்தில் உள்ளதை மட்டுமே காண்பிக்கும். அது போலவே விஞ்ஞானமும் ஒரு குறுகிய வட்டத்தை மட்டுமே பார்த்து விட்டு, அதன் அடிப்படையில் தன் கோட்பாடுகளைப் பரிந்துரைக்கிறது.

அடுத்ததாக விஞ்ஞானம், அந்த விளக்கை எடுத்துக்கொண்டு மேலும் சில அடிகள் முன்னே சென்று, அங்கு இருப்பதைக் காண்கிறது. இப்போது பார்ப்பது முன்பு பார்த்ததைவிட முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. புதிய முதலில் ஒதுக்கிவிடுகிறார்கள். இப்படித்தான் விஞ்ஞானம் செயல்படுகிறது.

ஸ்தீயும். மின்னலைப் போன்றது, இது உடனடியாக ஒரு கணக்கில் நீகழக்கூடியது !

ஒரு மின்னல் வெளிச்சத்தில் காடு முழுவதையும் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இப்படித்தான் ஜ்ஞாடுகுமார்கள் விஞ்ஞானத்திற்கும் ஆன்மிகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.

ஸ்கீயம் மின்னலைப் போன்றது, அது, உடனடியாக ஒரு கணத்தில் நிகழக்கூடியது, அது அத்தமானது, அது படிப்படியாக நிகழ்வது கிடையாது. 'உண்மை' என்பது தாக்கம், அது படிப்படியாக முன்னேறுவது, இங்கு அடுத்த பகுதிக்குச் செல்வதற்குமுன், முதல் பகுதியைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஸ்த்யம் உடனடியானதாகவும் புனிதமானதாகவும் இருக்கும். அதனால்தான் பட்டறிவு மூலமாக ஸ்தீயத்தைக் கிரகிப்பதென்பது கடினமானதாக இருக்கிறது. அது தர்க்கத்தைப் போன்றது அல்ல, அது பகுத்தறிவு அல்ல.

நூற்றாண்டுகளாக, பல அனுபவித்திருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்களுடைய இருப்புக்குள் பார்த்த ஸத்யமானது சமுதாயம் மற்றும் மதங்கள் ஏற்றுக்கொண்ட ஸத்யங்களுடன் ஒத்துப்போகவில்லை என்பதை அனுபவ பூர்வமாகப் பார்க்கிறார்கள்.

ஸத்யத்தை மொழிபெயர்ப்பதும் ஒழுங்குபடுத்துவதும் கடினமாதலால், சமுதாயமும் மதமும்

உண்மையும் ஸத்யமும் எப்போதும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதில்லை. கட்டுப்பாடுகளுக்கும், ஸத்யத்துடன் எந்தவித சம்பந்தமும் இல்லை. விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும், உண்மைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.

உண்மையும் ஸத்யமும் சேர்ந்து இருப்பதில்லை. உண்மை ஒரு பரிமாணத்தை மட்டுமே கொண்டது. அதாவது ஒரு விஷயத்துடன் சம்பந்தப்பட்டது. அப்படியிருக்க, ஸத்யம் என்பது இடம், காலம் சம்பந்தப்பட்டது. பல பரிமாணங்களை உடையது.

இங்கு அர்ஜுனன் பண்பட்ட நிலையை அடைந்துவிட்டார். இனியும் அவர், உண்மைகளை மட்டும் கேட்டு திருப்தி அடையப்போவதில்லை. அவருடைய கேள்வி, ஸத்யத்தை நோக்கியே இருந்தது.

அவரது குழப்பங்கள் மறைந்துவிட்டன. அவரிடம் வெறும் சந்தேகங்கள் மட்டுமே இருந்தன. சந்தேகங்கள் உயர்ந்தவை. இவை, சீடர் குருவை ஏற்பதற்கும் உள்வாங்குவதற்கும் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள். சந்தேகங்கள், பச்சைக் குறிகள்; அதேசமயம் கேள்விகள், சிகப்புக் குறிகள்.